Monday, March 13, 2017

7 த்யாகம்

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது
நல்லறிவை விட கடவுளைக் குறித்த தியானம் சிறந்தது
த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது
அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”

“பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது”  
இது கொஞ்சம் இடிக்கிறாப்பல இருக்கு. பயிற்சியை விட நல்லறிவு சிறந்தது தான் ஆனால் பயிற்சி இல்லாமல் நல்லறிவு எப்படி கிடைக்கும். அப்படியானால் பயிற்சியைத் தவிர நல்லறிவைப் பெற வேறு ஏதோ Short cut இருக்கறாப்லத் தெரியுது.
இங்கு நல்லறிவு என்பது Ultimate ஞானம் அல்ல. அதற்கும் முற்பட்ட சத்தைப் பற்றிய ஒரு அறிதல் (knowledge) என்று கொள்ளவேண்டும்.
இங்கு பயிற்சி என்பதற்கு,நாமாகச் சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு Self experience மூலம்  நல்லறிவைப் பெறுதல் என்றும் கொள்ளலாம். அப்படிப்பட்ட சோதனை முறையாக பயிற்சியை மேற்கொண்டு நல்லறிவைப் பெறுதலை விடச் சீக்கிரமாய் வேறு ஒன்றின் மூலம் நல்லறிவைப் பெற்றால் அது உசிதம் தானே.
அப்படி வழி இருக்கிறதா?. இருக்கிறது.!
அது – நூல்களைக்(Scriptures) கற்பதன் மூலமோ , கற்ற ஒருவரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் கேட்பதன் மூலமோ பெறுவது. இது,தானாகப் பயிற்சி செய்து உணர்தலை விடச் சுலபமாகும். (ஏதோ எனக்குத் தோன்றியது.. நீங்கள் வேறு அபிப்ராயம் இருந்தால் பகிரவும்..!)


அடுத்து, “த்யானத்தினும் சிறந்தது செயல் பலனை த்யாகம் செய்வது அதன் மூலம் உடனடியாகச் சாந்தி கிட்டும்”
பலன் த்யாகம் என்பதுதான் கீதை.
தியானத்தை விட பலன்-தியாகம் உயர்ந்தது என்றால் பலன்-த்யாகம் செய்து விட்டால், தியானம் செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம்.
முக்திக்கு ஒரேவழி யோகம் (த்யானம்) மூலம் தன்னையறிதல். அதை மேற்கொண்டே ஆகவேண்டும். ஆனால் த்யான மார்க்கத்திலும் பலன்-தியாகம் தேவைப் படுகிறது.
அதற்காக உலக விஷய காரியங்களிலும் பலன் த்யாக Attitude ஐ practice
செய்து பழகி வந்தால் Spiritual சாதனையின் போது பலன்-த்யாகம் என்பது ஸ்வபாவமாகி விடும்.
அதெல்லாம் சரி. த்யானம் செய்வது தன்னையறிதல் என்ற பலனுக்காகத்தான், அப்படி இருக்கும்போது, அதை எப்படித் துறப்பது?.

இதற்கு பதஞ்சலி யோக சூத்திரம் பதில் சொல்கிறது.
விபூதி பாதம் சூத்திரம் 51:
தத்வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம் 

உலகை மறந்த அண்ட உணர்வினையும் துறக்க கைவல்யம் கிட்டும்

உலகம்மறந்த தாகத்தோன்றும் அண்டமான உணர்விலே
விலகியேத்தான் தனித்திருக்கும் ஆன்மமந்த நினைவிலே
பழகியதனை பிடித்தம்கொண்டு இருந்திடாமல் துறந்திடு
அழகியதாம் விழுமியதாம் கைவல்யமே கொண்டிடு

த்யானத்தின் முடிவில்,சமாதியின் உயரிய நிலையில்,உலகை மறந்த அண்ட உணர்வு ஏற்படுகிறது (Supra Conciousness). அதையும் துறந்தால் தான் கைவல்யம் என்கிறது சூத்திரம். எனவே அப்படிப்பட்ட ஒரு துறவுக்கு நம்மைத் தயார் பண்ணத் தான் கீதை, “செய்யும் உலகக் காரியங்கள் எல்லாவற்றையும் த்யாக உணர்வுடன் செய்” என்று சொல்வதாகத் தோன்றுகிறது. மேலும் பதஞ்சலி சூத்திரம் , யோகத்தால் கிடைக்கும் விபூதிகளையும் துறந்து முன்னேற வேண்டும் என்று கூறுகிறது. உண்மையான துறவுக்கு நம்மைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்த உயரிய வாக்கின் பொருள் என்று தோன்றுகிறது .
நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?.
(இதை எழுதி பிறகு நான் படிக்கும்போது ,ஏதோ பிதற்றுகிறார் போல எனக்குப்படுகிறது.Please pardon me..!)..

Share your thoughts please..

No comments:

Post a Comment