Wednesday, August 28, 2024

31.எந்தன் மனம் ரிது உன் வசம்(பச்சைக் கிளி முத்துச்சரம்) **

எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
(vsm)
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(vsm)
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்  .. ஆ..
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

வித்தை-போல வார்த்தை-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
இன்பம்-கோடி  தந்தே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் நன்று
வெள்ளம்-போல விழியில்-ப்ரேமை ஓடச் செய்தாய் அன்பை 
அது-நின்றாட அழகாய்-நெஞ்சில் அணையும்-செய்தாய் அன்பே  
கண்ணில்-ஆடும் அன்பிலே உணவும் வேணுமோ (2)
என-நீ-தரும் அன்பின் விசை உலகினை இயக்கிடுமோ 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(MUSIC)

உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் அன்புறவோ 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

அந்தக்-கால வாழ்க்கை-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே-என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உன்னைக் காண போயே போச்சு சென்றே ஏக்கம்-போச்சு
அன்னை போல உந்தன் பாசம் ஒன்றே வாழ்க்கை ஆச்சு 
எல்லை உந்தன் அன்பிலே உண்டோ என்று தான் (2)
கண்ணே ரிது என் நெஞ்சினில் ஆனந்தம் தோன்றுதம்மா 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்

அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....

OTHER SONGS

No comments:

Post a Comment