Wednesday, December 9, 2015

மௌனமே பாஷையாய்(மௌனமே பார்வையால்)







விளம்பரமோ தன்னலமோ கருதாமல், நாம் நலம் தானே நமக்கு என்ன என்று வீட்டிற்குள் இருந்து கொண்டு, விளம்பரத்துக்காக வார்த்தைகளால் மட்டும் சேவை (Lip Service ) செய்யாமல், களத்தில் (கடலில்..!) இறங்கி சேவை செய்த யாவரையும் வணங்கி இந்தப் பாடலை அவர்க்கு அர்ப்பணம் செய்கிறேன்…!
________________________


மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால் இல்லை கைகள் பேசல்-கேளீர்
(1+SM+1)

எள்ளத்தனை..யும்-யார் செய்தது-என்..றே-பேர் சொல்லி..டாமல்-செய்தல் அறமாகும் அறமாகும்
(Short Music)
எள்ளத்தனை..யும்-யார் செய்தது-என்..றே-பேர் சொல்லி..டாமல்-செய்தல் அறமாகும்
அங்கம்-முழுதும் நீர் வந்து-முழுக இவர்-சென்று செய்த-பணி இறை-யாகம்
இவர் முன்னர்-சிறுமதிகள் இரையாகும்
ம் ..ம் ..மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால்-இல்லை கைகள் பேசல்-கேளீர்
(MUSIC)

இன்னும் தருவேன்-நான் வந்து-தருவேன்- வே..றென்ன வேண்டும்-என்னும் மொழி-பேசும் மொழி-பேசும்
(Short Music)
இன்னும் தருவேன்-நான் வந்து-தருவேன்- வே..றென்ன வேண்டும்-என்னும் மொழி-பேசும்
சின்னஞ்சிறுவர் முதல் மூத்தவர்-என பல வயதின் இவரைத்-தொழ பவம்-போகும்
நிஜ சேவை-செய்பவர்க்கு இது-பொருந்தும்
ம் ..ம் ..மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால்-இல்லை கைகள் பேசல்-கேளீர்



முதல் பக்கம்

No comments:

Post a Comment