Wednesday, December 9, 2015

கடல்-போல் மழை பொழிந்தான் (தரை மேல் பிறக்க வைத்தான்)






உலகத்தில் ப்ரளயம் இதுதானோ வெள்ளத்தின் தாக்கம் கொலை தானோ
அழிவு-தன் வேட்கை அடங்காதோ *சிவனார் கூத்தும் இது தானோ
________________________
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
(2)
கடல்-போல் மழை-பொழிந்தான்
(MUSIC)

கட்டிய-துணியும்  உயிரும்-கொண்டே மற்றவை-இழந்தவர் முன்னே
அலைகடல்-போலே தரைமேல் மழை-நீர் நாட்டியம்-ஆடிய பின்னே
கொஞ்சம்-விடாமல் பேயாய்ப்-பொழிந்தால் அதற்குள் எங்கள்-வீடு (2)
நடந்தா-விலகும் கிடந்தே-முழுகும் அதுபோல்-எங்கள் வாழ்வும்
பொது தான் இஃது யார்க்கும்

(Short Music)
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை
கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
(MUSIC)

கடலே-தரையில் பயணம்-போனால் தரைமேல் நடப்பது யாரோ
தணியாப்-பசியால் உலகம்-முழுகப் பெய்யும் மழை-ஓர் பேயோ
ஒருநாள் மழை-தான் அதற்கா என்பார் இங்கிருந்..திருந்தால் புரியும் (2)
ஒரு-மழைத் துளியில் ஒரு-கடல் எழுந்தால் ஊரென்ன உலகே முழுகும்
பலப்-பல உலகே முழுகும்
(Short Music)
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை
கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
கடல்-போல் மழை-பொழிந்தான்





*ஊழித் தாண்டவம்

முதல் பக்கம்
___________


No comments:

Post a Comment