Tuesday, December 8, 2015

மனது பற்றி எரிகின்றது(மெழுகு வர்த்தி எரிகின்றது)





மனது-பற்றி எரிகின்றது அணையாமல் எரிகின்றது
(1+SM+1)

உடைந்து-வானம் பொழிகின்றது நீராகப் பொழிகின்றது (2)
நீராலும் எரிகின்றது தீயின்றி எரிகின்றது
மனது பற்றி எரிகின்றது
அணையாமல் எரிகின்றது
(MUSIC)


இறைவன்-தன்னை அன்பு-என்கிறார் அவனை-அன்னை என்று-சொல்கிறார்
 (2)
உள்ளம்-அதனை நம்ப மறுக்குது அழிவு-கண்டு வெறுத்து வெதும்புது
*அழும் கண்ணீரை  பயந்து விழுங்குது
மனது-பற்றி எரிகின்றது
அணையாமல் எரிகின்றது
(MUSIC)
 உண்மை-தன்னை மறந்து-போனதால் -
மனிதன்-தவறு செய்து-வாழலாம்
 (2)
எனினும்-இறைவன் கோபம்-கொள்வது என்பதென்ன ஞாயமா-இது
என்று-பேதை நெஞ்சம் குமுறுது
  

மனது-பற்றி எரிகின்றது
அணையாமல் எரிகின்றது
உடைந்து-வானம் பொழிகின்றது நீராகப் பொழிகின்றது
நீராலும் எரிகின்றது தீயின்றி எரிகின்றது
மனது பற்றி எரிகின்றது நில்லாமல் எரிகின்றது


*அழுகை நீரை வெளியில் விட் டால் வெள்ளம் அதிகமாகுமோ என்று பயந்து அதையும் விழுங்கி அழக்கூட முடியாமல் உறைந்து அல்லவோ போனான் மனிதன்
 


No comments:

Post a Comment