Tuesday, December 8, 2015

ஆளுக்கொரு அழிவு-தந்து(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்)

 

Original SONG



ஐயோ அடை மழையோ பேயாட்டக் கொலையோ
வான் முட்ட-எழும் நீரலையோ அணை இதற்கி ல்லையோ
முட்ட-எழும் நீரலையோ அணை இதற்கி ல்லையோ
_____________



ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில் அழித்தான்
(1+SM+1)


அய்யா வெறும்-மழைதான் என்றிருந்தேன் கதையையே-முடித்தான்
அய்யா ஒரு கணம் நான் அசந்திருந்தேன் கதையையே-முடித்தான்
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான்
(MUSIC)

பூமியையே கடலெனவே மாத்திப்புட்டான் பாரு
சாமிய-ஏன் எதுக்கு-என்று  கேட்க-இங்கே யாரு (2)
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான்
(MUSIC)

போற-உயிர் உடன்-போனால்  நிம்மதியே ஆகும்
போய்விடாமல் நாசம்-காண யாராலே ஆகும்

கண்ணெதிரே நாசம்-காண யாராலே ஆகும் 
(MUSIC)
கொள்ளி-வெக்கும் செலவு-இல்லே தள்ளிக்கிட்டே-போச்சு (2)
தூங்கிடாமல் சேத்ததெல்லாம் கண்ணெதிரே போச்சு 

தூங்கிடாமல் காத்ததெல்லாம் பாக்கும்போது  போச்சு
பொத்தி-வச்ச இடத்திலெல்லாம் பொத்துக்கிட்டு கிளம்பும்
ஆஆ
பொத்தி-வச்ச இடத்திலெல்லாம் பொத்துக்கிட்டு கிளம்பும்
பிள்ளை-குட்டி எல்லாமும் முழுக வைக்கும் வெள்ளம்
தன்னைச்-சுத்தித் தானாக எழும்பிக்-கிளம்பும் வெள்ளம்
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான் ஆண்டவன்-பொழிந்தான்.. ஆண்டவன்-பொழிந்தான்..









No comments:

Post a Comment