Sunday, December 27, 2015

இருந்ததெல்லாம் கொடுத்தார்(கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)

இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(2)

(MUSIC)
மண்ணில்-நின்ற குடிசையெல்லாம் நீர்-அடித்துச் செல்லக்-கண்டார்
(1+Short Music+1)
காலையில்-தான் வாழக்-கொண்டார் மாலையிலே வீழக்-கண்டார் 
அவர்கொண்ட-வீடு வெறும்-ஓலைக் கொம்பு அதுகூட-இன்று அவருக்கில்லை 
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(MUSIC)
படைத்தவன்-மேல் பழியைச்-சொல்லி அமர்ந்திருந்தோர் யாரும்-இல்லை 
கிடைத்ததெல்லாம் கொடுக்க-வந்தார் கொடுப்பதற்கே தெருவில்-நின்றார்
விரைந்தோடி-ஓடி பலகோடி-கோடி கொடுப்போர்க்கு-பேரில் ஆசை-இல்லை
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(MUSIC)
இல்லை-என்றோர் வார்த்தையொன்றே என்றுமில்லை இல்லை-என்றார்
(1+Short Music+1)
துடித்து-வந்தே துயர்-துடைக்கும் அவருக்கிறை அருள்-இருக்கும் 
எதுவேண்டும்-சொல்லு எனக்கேட்டு-செய்த அவர்-சேவை மேலோர் பூஜை-உண்டோ
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்

No comments:

Post a Comment