அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(2)
தூற்றிடினும் போற்றிடினும் அவைகள்-தாக்கம் தந்திடினும் (2)
மலையெனவே நிலைத்து-நின்றாய் நீயும் .. போய்-போய்
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
தென்னை இளங்கீற்றினிலே..
தென்னை இளங்கீற்றினிலே நீ-தூங்கப் பாய் முடைந்து
பின்னலிட்ட மூங்கிலிலே நீ-தூங்கப் பாய்-முடைந்து
உன்னை-அதில் சாய்த்து-வைத்தார் அழகாக அதில்-உறைந்து (2)
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
போட்டியிடப் பள்ளியிலே யாருமில்லை இணை உனக்கு
போட்டியிடக் கல்வியிலே யாருமில்லை இணை உனக்கு
நீ படித்தாய் முடிக்கவில்லை உனது குணம் தாய்க்கு இல்லை
உனக்கொரு-தாய் இருந்தும்-இல்லை உனது மனம் புரியவில்லை
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
ஓ ..
நானறிந்த சொல்லெடுத்து எடுத்துச் சொல்லும் உண்மை இது (2)
நாடறிய கண்களிலே பொய்யா-கொட்டும் நீர் அழுது
பொய்மையில்லை கண்களிலே மெய்யாய் கொட்டும் நீர் அழுது
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
நெஞ்சில்-உன் நினைவு எழும் கோழைக்கும் துணிவு எழும்
நெஞ்சிலுன் நினைவு எழும் யாவர்க்கும் துணிவு எழும்
உந்தன் கதை கேட்டு விட்டால் தன்துயர்கள் மறந்து விடும் (2)
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
தூற்றிடினும் போற்றிடினும் அவைகள்-தாக்கம் தந்திடினும்
மலையெனவே நிலைத்து-நின்றாய் நீயும் .. போய்-போய்
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
No comments:
Post a Comment