Showing posts with label இரங்கற்பா. Show all posts
Showing posts with label இரங்கற்பா. Show all posts

Thursday, December 22, 2016

இரங்கற்பா

2. அமைதியாக உறங்கிடம்மா(அமைதியான நதியினிலே)






அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(2)
தூற்றிடினும் போற்றிடினும் அவைகள்-தாக்கம் தந்திடினும் (2)
மலையெனவே நிலைத்து-நின்றாய் நீயும் .. போய்-போய்
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
தென்னை இளங்கீற்றினிலே..
தென்னை இளங்கீற்றினிலே நீ-தூங்கப் பாய் முடைந்து 
பின்னலிட்ட மூங்கிலிலே நீ-தூங்கப் பாய்-முடைந்து
உன்னை-அதில் சாய்த்து-வைத்தார் அழகாக அதில்-உறைந்து (2)
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
போட்டியிடப் பள்ளியிலே யாருமில்லை இணை உனக்கு
போட்டியிடக் கல்வியிலே யாருமில்லை இணை உனக்கு
நீ படித்தாய் முடிக்கவில்லை உனது குணம் தாய்க்கு இல்லை
உனக்கொரு-தாய் இருந்தும்-இல்லை உனது மனம் புரியவில்லை 
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அமைதி-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
ஓ ..
நானறிந்த சொல்லெடுத்து எடுத்துச் சொல்லும் உண்மை இது (2)
நாடறிய கண்களிலே பொய்யா-கொட்டும் நீர் அழுது
பொய்மையில்லை கண்களிலே மெய்யாய் கொட்டும் நீர் அழுது
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்
(MUSIC)
நெஞ்சில்-உன் நினைவு எழும் கோழைக்கும் துணிவு எழும்
நெஞ்சிலுன் நினைவு எழும் யாவர்க்கும் துணிவு எழும்
உந்தன் கதை கேட்டு விட்டால் தன்துயர்கள் மறந்து விடும் (2)
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம் 
தூற்றிடினும் போற்றிடினும் அவைகள்-தாக்கம் தந்திடினும்
மலையெனவே நிலைத்து-நின்றாய் நீயும் .. போய்-போய்
அமைதியாக உறங்கிடம்மா-போதும்
நாளும் அதனைத்-தேடி உள்ளம் நொந்தாய் பாவம்

Tuesday, December 6, 2016

ஏன் பறந்தாய் உடனே (ஏன் பிறந்தாய் மகனே)




( மெட்டு:ஏன் பிறந்தாய் மகனே )


ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(SM)
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ (2) 
உன்னை-உயர் அன்னை-என்று போற்றுவோர் பலர்-இருக்க 
இன்று-விண்ணில் ஏன்-பறந்தாய் சொல்லு-அன்னையே 
உன்னை-உயர் அன்னை-என்று போற்றும்-மொழி கேட்டதிலே
அன்னை-மடி தேடினையோ சென்று-விண்ணிலே 
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
நீ-திரும்பும் நாளதனை நாடே பார்த்திருக்க
நீயும்-விண்ணில் ஏன்-பறந்தாய் சொல்லு-அன்னையே
(2)
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
கைவிசிறி பார்க்காத ஏழை குடிசையிலும் 
மின்விசிறி ஓடவிட்டாய் அன்னையுமாய்
காதலில்-ஓர் பிள்ளையில்லை மஞ்சளிடக்-கணவனில்லை 
கடமையைத் தேர்ந்தெடுத்தாய் அட..டட..டா ..!
ஏன்-பறந்தாய் உடனே ஏன்-பறந்தாயோ
(MUSIC)
ஆண்கள்-வர்க்கக் கொடுமையெல்லாம் தனியாய்த் தகர்த்தவளாய் 
நின்ற-உயர் பெண்மணியே பூமியிலே

நீ-நடந்த பொது-வாழ்வில் தணல்-சுடும் பாதையிலும்
தாயெனவே பேரெடுத்தாய் மக்களிடையே
(2)
அம்மம்மா அம்மா அம்மம்மம்மா (2)