"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்"
இது மிக மிக அழகான குறள். (எல்லா குறளும் தான் அழகு, அற்புதம்,அருமை ).
இதன் பொருள்:
எத்துணை சிறிதாயினும் நல்லவற்றைக் கேட்க அது அத்துணை சிறிதாயினும் நிறைந்த பெருமை தரும்.
இதில் எனைத்தானும் என்பதற்கு எவ்வளவு சிறிதாயினும், என்றென்றும்,எத்தகையதாயினும் என்று பல பொருள்கள் உண்டு.
இந்த குறளில் இவை எல்லாமே பொருந்தும். என்றாலும் எனக்கு எத்துணை சிறிதாயினும் என்று தான் திருவள்ளுவர் சொன்னதாகப் படுகிறது.
இன்னொரு குறள் using “எனைத்தானும்” பார்ப்போம்
"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை."
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும்
மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
இங்கு எனைத்தாயினும் என்பதற்கு எவ்வளவு
சிறியதாயினும் ஒன்றே பொருத்தம். மேற்கூறிய மற்ற இரண்டு பொருள்களும் அவ்வளவாகப் பொருந்தாது. எனவே வள்ளுவர் mean பண்ணது எவ்வளவு சிறியதாயினும் என்றே நான் கொள்கிறேன்.
இது போகட்டும் மீண்டும் முதல் குறளுக்கு வருவோம்…!
இங்கு திருவள்ளுவர் நல்லவை சிறிதாயினும் கேள் என்று கேள்வி அதிகாரத்தில்
சொல்லியுள்ளார். நல்லவை சிறிதேனும் கல் என்று சொல்லுகிறாற்போல் கல்வி அதிகாரத்தில்
சேர்க்கவில்லை. இதில்தான் விஷயமே இருக்கிறது. கல்வி ஞானத்தை
விட கேள்வி ஞானம் சிறந்தது.
படிக்காட்டாலும் பரவாயில்லை. கேளு. கேட்டுப்
பழகு. சின்னதானாலும் கேட்டுப் பழகு. நீ நாளைக்கு த்யானம் செய்யும்போது, படிக்கப்
போவதில்லை எழுதப் போவதில்லை, நினைக்கப் போகிறாய். அப்பொழுது இறைவன் பேச்சைக் கேட்கப்
போகிறாய். அவன் பேச்சு சிறியதாய்த் தான் இருக்கும். ஆனால் சீரியதாய் இருக்கும். சிறியதாய்
( faint) கேட்கும் அதை உன்னிப்பாகக் கேட்கவேண்டும். இப்பொழுதே அதற்குப் பழகு.
The first indication of advancement in
Dhynam is hearing divine musical sound of varius types and intensities. If you
are not properly trainined in listening, you will start getting excited and
stop listening. தற்காலத்தில் அறிவு வளர்ச்சியின் முதல் அறிகுறியே Stop listening தானே. நான் ஏன் கேட்கணும் ?. நான் கேட்கலைன்னா . “நான்” என்னை ஏன் என்று கேட்காது. நான் என்னை விட்டு வெளியில்இன்னும் தூர சென்று ஏதேதோ கேட்டுக்கொண்டு
கெட்டலைவேன். இங்கு கெடுவது என்பது கெட்ட விஷயங்களைப்
பற்றுவதை சொல்லவில்லை. கெட்ட = இல்லாமல், as in ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
வெளியில் சென்று நல்ல விஷயங்களில் ஈடுபட்டாலும்,
நம் குறிக்கோளை அடைய ஏதுவான Shortest பாதையிலிருந்து விலகி, அந்த பாதை இல்லாமல்,போவதைத் தான் சொல்கிறேன். அதீதமான ஞானமும் கூட யோகத் தடை என்று சங்கரர் கூறுகிறார். பதஞ்சலி
கூறுகிறார். அவ்வாறான அதீத (தேவையில்லாத) விஷயங்களை விட்டு , Just
required மட்டும் கேட்டுச் செல் என்பதே சான்றோர் வாக்கு.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
நல்லது எதுவும் சிறியதில் தான் திட்டவட்டமாகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளியிட
முடியும். பெரியதாக அல்லது பலதாக confusion arises. எனவே தான் , பெரிய நல்ல விஷயங்கள்
எல்லாம் சூத்திரங்கள் ஆயின. ஜோதிட சூத்திரம்,பிரம்ம சூத்திரம்,பக்தி சூத்திரம், யோக
சூத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எனவே சின்னது தானே என்று ஒதுக்காமல் , சின்னதே நல்லது என்று நல்லதே கேட்டிரு ..
எனவே சின்னது தானே என்று ஒதுக்காமல் , சின்னதே நல்லது என்று நல்லதே கேட்டிரு ..
“ரெண்டக்கா”வே தேவலாம்டா சாமி …. !!! ☺☺
No comments:
Post a Comment