எல்லா நலத்துடன் இவர்-வாழ்ந்திட வாழ்த்திடுவோமே (2)
எல்லா நலத்துடன் வாழ்கவே வாழ்கவே
ராஜ லக்ஷ்மி-இசை தீபக்-ஆன்ம ஒளி (2)
கொண்ட நல்லதோர் மழலையை-வாழ்வில் (2)
ராமஸ்வாமி வித்யா-பேரக் குழந்தையை (2)
பெற்றிட வாழ்த்திட வாரீர்
அவர் பெற்றிட வாழ்த்திட வாரீர்
எல்லா நலத்துடன் வாழ்கவே வாழ்கவே
கோடி கோடி தந்தும் கிட்டிடுமோ (2)
என்றும் பாரில்-இந்த பிள்ளை போலே
என்று போற்ற நல்ல குழந்தையை இவர்-பெற (2)
வாழ்த்திடும் ஆசிகள் தாரீர் (2)
எல்லா நலத்துடன் வாழ்கவே வாழ்கவே
ஆதிமூலன் திரு-மாலுடன்-தேவியின் பொற்கரம்-அருளிடப் பாடீர் (2)
தேடினாலும் கிடைக்..காத-நல் குழந்தையை (2)
பேறெனக் குழந்தையை
பேர-நற்குழந்தையை
பெற்று-சி..றந்திருக்க வாழ்த்தீர் (2)
எல்லா நலத்துடன் இவர் வாழ்ந்திட வாழ்த்திடுவோமே
எல்லா நலத்துடன் வாழ்கவே வாழ்கவே
No comments:
Post a Comment