Tuesday, December 8, 2020

10 ராணுவச் சோதரர்


காசுக்கா நீ--உழைத்தாய் தேசத்தே நீ இழைந்தாய்
பேருக்கா நீ-நடித்தாய் போருக்கே உனைக்-கொடுத்தாய்
மாசெனவே தாய்-மண்ணை பலரிங்கே உதறிடுவார்
பூசைபோல் நீயதனைப் போற்றி-அன்றோ காக்கின்றாய்
நேசமொடு தான்-அதனால் பாரதத்-தாய் பிள்ளையுன்னை
பாசமழை மிகப்பொழிந்து தன்-தலையில் ஏந்துகின்றாள்
தேசமெனும் தன்மடியில் உன்னைத்-தா...லாட்டுகின்றாள்.
உன்னைப் பேசிடவும் திறமை என்போல் பேர்க்கு உண்டோ
கண்ணைக் கண்டிடவும் கண்ணுக்குக் கண்ணுமுண்டோ
உன்னைப் பேணிடுவோம் என்றுமுன்னை எண்ணிடுவோம்
எல்லா குடும்பத்திலும் நீயன்றோ தலைமகனே
சொல்லால் சொல்லவொணா பாசமிகு சோதரனே
சொல்லால் மட்டுமன்றி வேறு-செய்ய அறிந்திலனாய்
பண்ணால் உனை-வழுத்தி வணங்குகிறான் ஸ்ரீதரனே...!


இன்னும் பிற

 

No comments:

Post a Comment