Friday, December 11, 2020

12 பாரதி


பூமி-போற்றும் பாரதி நீயன்றோ-ம...ஹாகவி
உன்னைப்-போல ஓர்-கவி என்று-காணு..மோ-புவி

வெள்ளைக்-கார..ரின்-செவி தன்னில்-ஈயம் உன்-கவி
மண்ணைக்-காக்கப் போரிடும் மாந்தர்-காதில் தேன்-துளி
சாமியென்று-பாரதத் தேவி-பாதம் போற்றி-நீ
செய்த-பண்கள் வெள்ளையர் நெஞ்சில்-தந்த….தே-கிலி
அந்தப்-பண்ணைப் பாடி-உத் ...வேகம்-கொண்டு பாய்ந்ததே
நாட்டைக் காக்கப் போரிடும் தியாகச்-சோத..ரப்-புலி
உன்னை-என்றும் எண்ணவே ஊறும்-கண்ணில் நீர்த்துளி
உந்தன்-பாட்டு ஒன்றையே பாடத் தோன்று..மே-களி
என்றும்-அதனை ஏந்தியே வீசும்-தமிழெ..னும்-வளி...
பூமி-போற்றும் பாரதி நீயன்றோ-ம...ஹாகவி
உன்னைப்-போல ஓர்-கவி என்று-காணு..மோ-புவி....


இன்னும் பிற

 

No comments:

Post a Comment