Friday, December 11, 2020

15. பூப்போலுன் சிரிப்பினையே(பாவாடை தாவணியில்) **

Aligned to KARAOKE

பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா உன்
பேச்சாலே களிப்பெனக்கு அள்ளித்-தா அம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
கேட்டாலே காதினிக்கும் மழலையும் தேனோ
விழியோடும் அழகினிலே நீ ஒருமானோ
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
உன்-பேச்சில் இல்லாத பாட்டு-ஏதம்மா கண்ணே
கண்வீச்சில் நீ-தந்தால் திகட்டுமா-அம்மா
(2)
வில்லொன்றைக் கொண்டாய்-நீ புருவமாய்-அம்மா பார்வைக் கணையதில்-நீ தொடுத்தாலே உய்யுவேனம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
சொத்து-பத்து வேறெதுவும் எனக்கு வேணுமா-நீ
எங்கள்-சொத்தாய் வந்தபின்னே வேறு-ஏனம்மா
(2)
என்னுயிரே இன்னுயிரே அமுதக்கிண்ணமே..
கண்ணெனவே பெண்ணெனவே வந்த சின்னமே
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
கண்ணே-என் காலமின்றே முடிந்துவிட்டாலும்-பார்
இன்றுடனே சுழலுவதை நிறுத்திவிட்டாலும்
(2)
அருவுருவாய் உன்னுடனே மறைந்து-எந்நாளும்-நான்
இருந்திடுவேன் இருந்திடுவேன் உறுதிகூறினேன்
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா-உன்
பேச்சாலே களிப்பெனக்கு அள்ளித்-தா அம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
தேவமுதம் போலினிக்கும் மழலையும் தேனோ
விழியோடும் அழகினிலே நீ ஒருமானோ
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா

OTHER SONGS

No comments:

Post a Comment