Friday, December 11, 2020

16. பாடல் வார்த்தைகள்(காதல் ராஜ்ஜியம் எனது ) **

பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(2)
(VSM,)

சின்னாளம் பட்டினும் வனப்பு பொன்னான-உன்பள..பளப்பு
ஈடில்லாத என் ரிதுவே-நீ எங்கும்-இல்லாத ஆண்டவன்-படைப்பு
(2)
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
 (MUSIC)

எங்கள்-குடும்பத்தின்-பெரும் சொத்தின்-சிறு வித்தே நீயெங்கள் வீட்டின்-நிதி
உந்தன் பதம்-தத்தித் தினம் செய்யும்-நடை தன்னில்-மாறாதோ எங்கள் விதி
ஆ...எங்கள்-குடும்..பத்தின் பெரும் சொத்தின்-சிறு வித்தே நீயெங்கள் வீட்டின்-நிதி
உந்தன் பதம்-தத்தித் தினம் செய்யும்-நடை தன்னில்-தேறாதோ எங்கள் மதி
என்-வீட்டில் உன்-சலசலப்பு தந்தாடும் மனம்தனில் சிலிர்ப்பு
வேறு-வேலையும் இனிஏனோ என்று-உன்னோடு தான்-எங்கள் பிழைப்பு
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(MUSIC)

பச்சைக் கிளி-தோற்கும் விதம்-இச்சை மொழி-பேசும் நீயந்த ஆராமுதம்
உச்சி-உனை மோந்தங்கிரு கண்மூடிட-சொர்க்கம் தானாக நேரில்-எழும்
உன்பார்வை மனம்-சென்று முழுதும் 
நின்றாங்கு இதம்-தனில் முழுக்கும்
ஏது-வேறினி பணி-ஏது உன்னைக்- கண்டாலே வேலையும்-மயங்கும்
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்

OTHER SONGS

No comments:

Post a Comment