Showing posts with label Rithambhara. Show all posts
Showing posts with label Rithambhara. Show all posts

Sunday, August 23, 2026

35.செல்லமே(மௌனமே பார்வையால்)


 
[Pallavi]
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]
[Verse 1]
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன  
அணைப்பதென்ன
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன 
அந்தக் கடவுள்  தான் தந்த வரமாய்  நான் அந்த கணத்தில் நெஞ்சில் நினைப்பதென்ன
நான் எந்தன் மனதில் என்றும் நினைப்பதென்ன
[vocal ad-lib] ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]

என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் கழிப்பேனே களிப்பேனே
என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் களிப்பேனே
எந்தன் கண்மணீ நீ தந்த இதத்தில் நான் இன்ப சாகரத்தில் மிதப்பேனே
பேரின்ப சாகரத்தில் மிதப்பேனே
ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன


OTHER SONGS




Friday, October 11, 2024

33.உலவுகிற விண் மீனோ(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோடஇறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உருவம் தனில் சேயாக பாசம் தனில்தாயாக 
உருவம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக
முதிருகிற தாத்தாவின் மனம் நிறைய வந்தவளோ 
பொன் நகைகள் எதற்கோ சொல் செயற்கை எழில் எதற்கோ சொல் (2)
ரிது உனது அன்பு மனம் கொண்ட எழில் போதாதோ!
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ
(MUSIC)

கவருகிற குரல் குழலோ உன் மழலை மது தருமோ 
பாங்கினில் நீ பெரியவர் போல் பேசு திறன் இறை வரமோ
வாழ்க்கையினில் பேறாக நீ எனக்கு அமைந்தவளோ (2)
யாக்கையினில் சேயாக தாய் மனமாய்க் கொண்டவளோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க பாட்டன் உனை வாழ்த்துகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
என்பதை நீ எடுத்துக்கொண்டால் மேன்மை சேரும் வாழ்க்கையிலே 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

OTHER SONGS


Wednesday, August 28, 2024

31.எந்தன் மனம் ரிது உன் வசம்(பச்சைக் கிளி முத்துச்சரம்) **


எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
(vsm)
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(vsm)
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்  .. ஆ..
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

வித்தை-போல வார்த்தை-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
இன்பம்-கோடி  தந்தே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் நன்று
வெள்ளம்-போல விழியில்-ப்ரேமை ஓடச் செய்தாய் அன்பை 
அது-நின்றாட அழகாய்-நெஞ்சில் அணையும்-செய்தாய் அன்பே  
கண்ணில்-ஆடும் அன்பிலே உணவும் வேணுமோ (2)
என-நீ-தரும் அன்பின் விசை உலகினை இயக்கிடுமோ 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(MUSIC)

உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் அன்புறவோ 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

அந்தக்-கால வாழ்க்கை-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே-என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உன்னைக் காண போயே போச்சு சென்றே ஏக்கம்-போச்சு
அன்னை போல உந்தன் பாசம் ஒன்றே வாழ்க்கை ஆச்சு 
எல்லை உந்தன் அன்பிலே உண்டோ என்று தான் (2)
கண்ணே ரிது என் நெஞ்சினில் ஆனந்தம் தோன்றுதம்மா 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்

அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....

 

OTHER SONGS


Tuesday, December 20, 2022

28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)


எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் விழி கொண்டு ஜாலம் காட்டி  
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
உனதன்புக் கண்களிரண்டில் .... விழி கொண்டு ஜாடை பேசி 
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அது போல இன்பம் எதுவோ (2)
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் .. அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-அதில் இன்று எந்தன் உலகு அதில் என்றும் வந்து உலவு
எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 


OTHER SONGS


 

Tuesday, February 1, 2022

27.இனிக்கும் இசைப்பாட (கவிதை அரங்கேறும் நேரம்) **

 

இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் 
(MUSIC)
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது  உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(SM)
நாளும் நீ என்னைத்தேடி வருவாயே என் பேரைக் கூறி (2)
அது காதில் எந்நாளும் ஸ்ரீ ஸ்ரீ எனக் கேட்கும் செந்தேனைத் தூறி 
என் உள்ளம் அதனோடு செல்லும் பின் என்னில் திரும்பாது என்றும் 
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(MUSIC)
கைகள் தன்னை-நீ அசைத்து தினம் குட்நைட் என்பாயே கனிந்து
அதில் சொர்க்கம் நூறிங்கு படைத்து நீ சிரிப்பாய் இன்பக் கள் கொடுத்து
எனதன்னை வடிவான உறவை இறை தந்தான் உன் பாச உருவில்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(MUSIC)
பேரில் நீ கொண்ட நாதம் எழில் இசையாய் என் பாட்டில் மாறும்
அது வார்த்தைக்கு எட்டாத ராகம் அந்த இசையே தெய்வீக சாரம்
மறு பிறவி உண்டென்று ஆனால் உன் உறவைப் பெறும் பாக்யம் வேணும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்(b)



OTHER SONGS


Friday, August 20, 2021

25. உனது கண்கள்(நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) ***

 

உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது (2)
மீதமென்ன இவ்வுலகில் வெல்ல உள்ளது
உனது அன்பு ஞாலத்தையே வெற்றி கொண்டது
உனது மனதும் எனது மனதும் ஒன்று ஆனது
எனது மனது உனது மனது என்று ஆனது
அதில் உதிக்கும் யாவும் உனது எனது என்றே ஆனது
அதில் எண்ணம் யாவும் உனது எனது என்றே ஆனது
எனது மனது உனது மனது என்று ஆனது
அதில் உதிக்கும் யாவும் உனது எனது என்றே ஆனது
அன்பே ஆனது
( MUSIC)

சொன்னாலும் மற்ற எவர்க்கும் புரிந்திடவா போகுது
என் மனதை எழுத்துக்களும் சொல்லிடவா போகுது
(2)
அம்மா நீ தந்த  உயிர்கள் எனக்கு இரண்டு உள்ளது
கல்லான முரடன் எனக்கும் அன்பைச் சொரிந்து அணைப்பது
எந்நாளும் உன் வடிவில் என் துணையாய் உள்ளது 
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது
வெற்றி கொண்டது
( MUSIC)

ஆ...
( MUSIC)
யாக்கை-போய் மனித உணர்வு இறைவன் உணர்வில் சேர்வது
மேலான யோகமென்று பதஞ்சலியார் சொன்னது
ஆஹா அவ்வுணர்வை-உந்தன் பார்வை-ஒன்றே தருகுது-என் 
அன்பே-உன்..னால்-எனக்கும் மோட்சப் பாதை தெரிந்தது 
உனது கண்கள் ஞானம் எனும் சக்தி தருவது முக்தி தருவது
( MUSIC)

இப்பாட்டில் உரைத்ததுவோ கொஞ்சம் வெளியில் தெரிவது
சொல்லாமல் புரிவதுவோ உனக்கும் எனக்கும் உரியது
என்-பாட்டு சொல்வது-எல்..லாருக்குமா பிடிக்குது
ஆனாலும் சொல்லுகிறேன் எனக்கு அது இனியது
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது
மீதமென்ன இவ்வுலகில் வெல்ல உள்ளது
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது


OTHER SONGS


Tuesday, July 27, 2021

24. எனக்காக வாழ்கின்ற நிலை(அலங்காரம் கலையாத சிலை ஒன்று) **


எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(2)
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன்
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(2)
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(MUSIC)
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை
என் தாயும் கொண்டிட்டப் பொன்னின் நகை
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை
என் தாயும் தந்திட்டப் பொன்னின் நகை
பேரோடு உறவாடிச் செல்கின்றதல்ல
நீ தந்த உறவந்த இறைவன் வரம்
நீ எந்தன் குலதெய்வம் தாயின் வரம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
என்தாயும் நீ-என்று மனம் சொல்லுது
என் தாயின் எழில்-உந்தன் கண் மின்னுது
வந்தாள் என்தாய்-சொந்தம் என்றே என்னோடு
எந்நாளும் இனிதாக நாம் வாழுவோம்
எந்நாளும் பிரியாமல் நாம் வாழுவோம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
தலை சாய்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் தினம்
எனைப் பார்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் நிஜம்
என் தாயைப் போலந்த ஒரு பார்வை சாட்சி
என் தாயைப் போலுந்தன் ஒரு பார்வை சாட்சி
சொல்கின்ற திருக்காட்சி பொய்யாகுமோ
உயிரோடும் தாயன்பு பொய்கூறுமோ
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(2)

OTHER SONGS


Monday, December 28, 2020

23.கள்ளம் கபடில்லாத (எண்ணிரண்டு பதினாறு வயது) **

 

கள்ளம் கபடில்லாத மழலை
(Short Music)
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
(2)
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

உன்தமக்கை அழகுநிலா தன்னோடு அன்பாய் 
எப்பொழுதும் நட்புடனே சேர்த்தணைத்து இருப்பாய் 
(2)
எப்பொழுதும் தமக்கையுடன் நட்புடனே இருப்பாய் 

கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

வேதமென தந்தையன்னை சொல்லினையே கேட்பாய்
என்றுமவர் காட்டும்வழி நல்லதென்றே நடப்பாய்
(2)
என்றுமவர் காட்டும்வழி நல்லதென்றே நடப்பாய்
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

சுற்றம் சூழ இருந்து பலர் நட்பு கொண்டு சிறப்பாய்
சுற்றம் சூழ இருந்து பலர் நட்பு கொண்டு சிறப்பாய் அவர்
துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு-கொண்டே இருப்பாய்
துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு கொண்டே இருப்பாய்
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை 
 


OTHER SONGS


Sunday, December 27, 2020

21. அன்றொரு நாள் (அன்றொரு நாள் இதே நிலவில்) **

 

அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
(Harmonium)
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து-நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ-அறியாயே கண்மணியே
(Harmonium)

அந்த ஒருநாள் என்வாழ்வில் இருள்-நாள் 
இன்று நினைத்தால் தாங்காது மனமே
நீரில்-விழிகள் ஊறித் தவித்தேன்  (2)
நானும் சோகத்திலே நீ அறியாயே கண்மணியே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே
(Harmonium)

தாயும்-வலியில் தூங்காமல் இருந்தாள் நீயும்-அதனால் நோகாமல் இருந்தாய் 
பேத்தி பிறந்தாய் சாந்தி கொடுத்தாய் (2)
வாடல் போதுமென்றே என் குலவிளக்கே மணி யே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே

OTHER SONGS


20. என்னுயிரே தாலேலோ( நாதஸ்ர ஓசையிலே ) **


கண்மணியே தாலேலோ கண்ணுறங்கு தாலேலோ 
கண்வளரும் வேளையிது என்னுயிரே தாலேலோ 
கண்மணியே தாலேலோ..
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ  
நீ-பிறந்த கதையுரைப்பேன் உன்பிறப்பின் சிறப்புரைப்பேன் 
நீ பிறந்த கதையுரைப்பேன் எப்படிநான் அதைமறப்பேன்  
நீ-இருந்த தாய்வயிற்றைக் கத்திகொண்டு அறுக்கையிலும்
தாளாத வலியெடுக்க என்மகள்-தான் துடித்தழுதும் 
உன்னை எண்ணி பொறுத்திருந்தாள் கண்ணே உனை ஈன்றெடுத்தாள்  
என்னுயிரே தாலேலோ கண்ணுறங்கு தாலேலோ 
கண்வளரும் வேளையிது கண்மணியே தாலேலோ 
கண்மணியே என்னுயிரே தாலேலோ. 
(MUSIC)

உன்-சுருண்ட சிகையகழகு கண்ணே-உன் நடையழகு 
செல்லம்-உன்னைப் பெற்றவர்கள் இட்ட-பெயர் பேரழகு
(1+SM+1)
மதன் ரதியும் வெட்கமுறும்  பேரழகுப் பெட்டகமே 
கண்மணியே தாலேலோ கண்வளரும் வேளையிது
என்னுயிரே தாலேலோ
(MUSIC)

வந்தாளே மருமகளாய் ஆனாளே  என்-மகளாய் 
அந்த-மகள் தந்த-கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ
கண்வளராய் கண்ணே-இன்று ஆடிடலாம் நாளை-சென்று (2)
கண்ணுறங்கும் நேரமிதே கண்வளராய் தாலேலோ
கண்மணியே தாலேலோ கண்ணுறங்கு தாலேலோ 
கண்வளரும் வேளையிது என்னுயிரே தாலேலோ 
கண்மணியே தாலேலோ. 


 

OTHER SONGS


19. நீயும் நானும் தான் (பாடும்போது நான்) **

 

நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(2)
நாளொரு பாடல் என்றிட நாமும் பாடவேண்டும் கண்ணே 
என்றே ஆசை உண்டு கண்ணே 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(MUSIC)

என்னிடம் பாட்டுக்கள் இருக்கு 
அதை உன்னுட..னே-நான் இணைந்து 
(2)
ரிதுவே பாடணும்-என்று 
எனக்காசை ஆசையாய் இருக்கு
(2)
என்றே ஏங்கும் உந்தன் பாட்டன் ஆசை ந்யாயம்  தானே 
கண்ணே பாட கொஞ்சம் வாயேன் 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
 (MUSIC)

ஆ ..ஆ  
என்றைக்கும் இனிதாய்ச் சிரிக்கும் 
உன் குரலினில் இசையே ஒலிக்கும் 
(2)
எதுகை மோனை நிலவும் 
எந்தன் கவியும் பாட்டாய் மலரும் 
(2)
நானும் நீயும் பாடும்போது நாளும் இன்பம் தானே 
எந்த நாளும் இன்பம்தானே
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 




Sunday, December 13, 2020

17. பொன்னோவியம்(சந்திரோதயம்) **

 

(Aligned to KARAOKE)

பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(2)
நல் காவியம் இன்று ரிதுமேல் இதோ
என் வேலை அதுவாக இனிவேறெதோ
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(MUSIC)

கணம் தோறும் விழிபேசும் மொழி கொஞ்சுமோ
எனக்காணும் மனம்ஏங்கி தினம் கெஞ்சுமோ
(2)
புவிமீது எழில்வேறு எதும் எஞ்சுமோ
என்றாக இவள்-காட்டும் எழில் கொஞ்சமோ
என்பாட்டில் அதைக்கூறச் சொல் பஞ்சமோ
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
கண் வேடிக்கை காட்டி நின்றாள் அது
தன்வாடிக்கை என்று கொண்டாள் ரிது
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
ஆ...
(MUSIC)

தள்ளாடும் நடைகாட்டும் எழில் கொஞ்சுமோ
விழும் வண்ணம் எனக் காணும் மனம் அஞ்சுமோ
(2)
என்வீட்டில் அவள்காட்டும் எழில் கொஞ்சமோ
அதுபோக பிறகாண கணம் எஞ்சுமோ
என்பாட்டில் அதைச் சொல்ல சொல் பஞ்சமோ
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(MUSIC)

அவளோடு இல்லாத கணம் தொல்லையே
எனப்போன மனம்மீண்டு வரவில்லையே
பிடிச்சோறும் இறங்காது அவள் இல்லையேல்
உயிர்க்காற்று மணம்வீசும்  அவள் முல்லையே
என் காது இனிகேட்கும் அவள் சொல்லையே
பொழிலாகத் தமிழ்ப் பாட்டில் அதைக் கூறவோ
முழுதாக அதைக்கூற கணம்-மீறுமோ
விழும்-காலம் வரைப் பண்ணில் அதைக் கூறவோ
அதன்முன்பு அதைக் கூறச் சொல் தீருமோ
எந்நாவும் அதைச் சொல்ல இசை பாடுமோ
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
ஆஹாஹஹா (2)



OTHER SONGS


Friday, December 11, 2020

16. பாடல் வார்த்தைகள்(காதல் ராஜ்ஜியம் எனது ) **

 

பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(2)
(VSM,)

சின்னாளம் பட்டினும் வனப்பு பொன்னான-உன்பள..பளப்பு
ஈடில்லாத என் ரிதுவே-நீ எங்கும்-இல்லாத ஆண்டவன்-படைப்பு
(2)
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
 (MUSIC)

எங்கள்-குடும்பத்தின்-பெரும் சொத்தின்-சிறு வித்தே நீயெங்கள் வீட்டின்-நிதி
உந்தன் பதம்-தத்தித் தினம் செய்யும்-நடை தன்னில்-மாறாதோ எங்கள் விதி
ஆ...எங்கள்-குடும்..பத்தின் பெரும் சொத்தின்-சிறு வித்தே நீயெங்கள் வீட்டின்-நிதி
உந்தன் பதம்-தத்தித் தினம் செய்யும்-நடை தன்னில்-தேறாதோ எங்கள் மதி
என்-வீட்டில் உன்-சலசலப்பு தந்தாடும் மனம்தனில் சிலிர்ப்பு
வேறு-வேலையும் இனிஏனோ என்று-உன்னோடு தான்-எங்கள் பிழைப்பு
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்
(MUSIC)

பச்சைக் கிளி-தோற்கும் விதம்-இச்சை மொழி-பேசும் நீயந்த ஆராமுதம்
உச்சி-உனை மோந்தங்கிரு கண்மூடிட-சொர்க்கம் தானாக நேரில்-எழும்
உன்பார்வை மனம்-சென்று முழுதும் 
நின்றாங்கு இதம்-தனில் முழுக்கும்
ஏது-வேறினி பணி-ஏது உன்னைக்- கண்டாலே வேலையும்-மயங்கும்
பாடல் வார்த்தைகள்-மழலை அதைப் பாட-வாத்தியம் குரலில்
எழிலான நாட்டியம்-விழியில் பதம்-ஏது அதைச்-சொல்ல மொழியில்

OTHER SONGS


15. பூப்போலுன் சிரிப்பினையே(பாவாடை தாவணியில்) **

 

Aligned to KARAOKE


பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா உன்
பேச்சாலே களிப்பெனக்கு அள்ளித்-தா அம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
கேட்டாலே காதினிக்கும் மழலையும் தேனோ
விழியோடும் அழகினிலே நீ ஒருமானோ
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
உன்-பேச்சில் இல்லாத பாட்டு-ஏதம்மா கண்ணே
கண்வீச்சில் நீ-தந்தால் திகட்டுமா-அம்மா
(2)
வில்லொன்றைக் கொண்டாய்-நீ புருவமாய்-அம்மா பார்வைக் கணையதில்-நீ தொடுத்தாலே உய்யுவேனம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
சொத்து-பத்து வேறெதுவும் எனக்கு வேணுமா-நீ
எங்கள்-சொத்தாய் வந்தபின்னே வேறு-ஏனம்மா
(2)
என்னுயிரே இன்னுயிரே அமுதக்கிண்ணமே..
கண்ணெனவே பெண்ணெனவே வந்த சின்னமே
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
(MUSIC)
கண்ணே-என் காலமின்றே முடிந்துவிட்டாலும்-பார்
இன்றுடனே சுழலுவதை நிறுத்திவிட்டாலும்
(2)
அருவுருவாய் உன்னுடனே மறைந்து-எந்நாளும்-நான்
இருந்திடுவேன் இருந்திடுவேன் உறுதிகூறினேன்
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா-உன்
பேச்சாலே களிப்பெனக்கு அள்ளித்-தா அம்மா
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா
தேவமுதம் போலினிக்கும் மழலையும் தேனோ
விழியோடும் அழகினிலே நீ ஒருமானோ
பூப்போலுன் சிரிப்பினையே கிள்ளித்-தா அம்மா

 


OTHER SONGS


Monday, December 7, 2020

12. எனக்கே தந்தாய்(நினைத்தேன் வந்தாய்) **

 

(Aligned to KARAOKE)

ஓ ...
(MUSIC)
எனக்கே தந்தாய் ஆடும் வயது கண்ணே உன்னால் பாடும் மனது
(2)
எனக்கே தந்தாய் ஆடும் வயது கண்ணே உன்னால் பாடும் மனது
நூறு-பிராயம் ஜு ஜுபி-என்றாக்கி வாழும்-உயிரு
ஆயிரம்-வருடம் உனைக்-கருவாக்கிப் பாடும்-மனது
நீ நின்றாட உன்கூட மயிலாடுமோ
சொல் உன்-கூட மான்-ஓடத் தான்- கூடுமோ
நாளை வாலிபால் சென்..றாடம்மா
நீயும் தந்தை-போல் நன்காடம்மா
போ...ஓ...ம்மா (2)
எனக்கே தந்தாய் ஆடும் வயது கண்ணே உன்னால் பாடும் மனது
(MUSIC)
நீ..முன்னாடி பெண்மை தன்னைப்-பூணு
அதன் முன்னாடி என்றும்-இல்லை ஆணு

உனைப் பெண்ணாக்கி விட்டானே இந்தப்-பார்
அதை உள்-நோக்கி இந்நேரம் எண்ணிப்-பார்
(2)
என்றும் நீ-எங்கள் நெஞ்சம்-தன்னில் பிள்ளை
தினம்-வந்தோடிக் கட்டிக்-கொஞ்சும் கிள்ளை
உன்னை ஆனாலும் பெண்ணென்று எண்ணிப்-பார்
பெண்ணை எந்நாளும் புண்ணாக்க எண்ணும்-பார்
உன்னை ஆனாலும் பெண்ணென்று எண்ணிப்-பார்
பெண்மை தான் மாறிப் போகமல் வாழப்பார்
எனக்கே தந்தாய் ஆடும் வயது கண்ணே உன்னால் பாடும் மனது
(MUSIC) 
எதும் நீதேடிக் கற்கச்-செல்லு ஓடி
அதன்-முன்னாடி பெற்றுக்- கொள்ளு ஆசி

முன்னர் தாய்-தந்தை சொல்லென்றும் கொட்டும்-தேள்
பின்னர் உன்வாழ்வு தித்திக்கச் சொட்டும்-தேன்
(2)

ஆ..ஆ..மாம்.
எனக்கே தந்தாய் ஆடும் வயது கண்ணே உன்னால் பாடும் மனது
போ...ஓ...ம்மா (2)


OTHER SONGS


Saturday, December 5, 2020

11.வெண்ணிலவாடுது (பொன்னெழில் பூத்தது) **




வெண்ணிலவாடுது பார்-வானில் கண்வளர்- கண்ணே பொன்னே-நீ
(VSM)
வெண்ணிலவாடுது பார்-வானில் கண்வளர்- கண்ணே பொன்னே-நீ
இன்னிசைப் பண்ணொன்றும்  நன்கு-அறியேன்
கற்பது-எங்கே சொல் சொல் சொல்
வெண்ணிலவாடுது பார்-வானில் கண்வளர்- கண்ணே பொன்னே-நீ
(MUSIC)

உந்தன் முகம்-கண்டு எந்தன் மனம்-வந்த பண்ணினை நானின்று பாடுகிறேன் 
அன்பினைத்  தான்-கொண்டு பாடுகிறேன்
(1+SM+1)
என்னிசைப் பண்கேட்டு உன்-வண்டு கண்வளர் 
கண்ணே-நீ என்று-நான் வேண்டுகிறேன்
வெண்ணிலவாடுது பார்-வானில் கண்வளர்- கண்ணே பொன்னே-நீ
(MUSIC)

உன்னைக்-க..ரங்களில் அள்ளியெடுத்து-நான் முத்தங்கள் தந்து-தா..லாட்டுகிறேன்
முத்தங்கள் தந்து-தா..லாட்டுகிறேன்
 (VSM)
உன்னைக்-க..ரங்களில் அள்ளியெடுத்து-நான் முத்தங்கள் தந்து-தா..லாட்டுகிறேன்
முத்தச்-சந்தம் கொண்டு பாடுகிறேன்
அந்த ஸ்வரம் சுத்தம் என்று இசைதனின் இலக்கணம் ஒன்றையும்  நானறியேன்

கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார்  
(1 + SM + 1)

உன்னிசைப் பண் ஒன்றே  காதுக்கினிமை
வேறெது-வேணும் ஆ..ஹா..ஹா 
கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார்
(MUSIC)

நித்தம்-உன் அன்பினில் வந்த-உன் பண்-ஒன்று 
கேட்டபின் ஏன்-இன்னும் வேறு-ஒன்று..
அன்பினும் மேலென்று ஏது-ஒன்று  
(VSM)
நித்தம்-உன் அன்பினில் வந்த-உன் பண்-ஒன்று 
கேட்டபின் ஏன்-இன்னும் வேறு-ஒன்று..
அன்பினும் மேலொன்று ஏது-நன்று  
கற்பதனால்-இசைப் பேர்- வரும்-ஆயினும் நான்-எனப் போய்விடும் 
பேறு அன்று 
கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார்  
(MUSIC)
உந்தன்-பண் என்பது அன்பென்று ஆனபின் 
யாரதைச்-சோடை சொல்லுவதோ
மெய்யன்பைச்-சோடை சொல்லுவதோ
(1+VSM+1)
நீ-வெறும் சொல்மட்டும் கொண்டா-செய்தாய்-பண்ணை
அன்பற அதனுக்குள் வேறு-உண்டோ
கண்வளர்கின்றேன் தாத்தா-பார் தூங்கிடுவேன்-நான் பார்-பார்-பார்  உன்னிசைப் பண்-ஒன்றே  காதுக்கினிமை
வேறெது-வேணும் ஆ..ஹா..ஹா


ஆ.. ஹாஹா ஹாஹாஹா.....(2)
ஆ.. ஹாஹா ஹாஹாஹா.....(2)

  OTHER SONGS


 

Thursday, December 3, 2020

10.தூங்கு கண்மணி(ஊயலூபரே) **

 

தூங்கு-கண்மணி பொன்னே கண்மணி (2)
ஆனந்த..மாக-நீ  கண்வளர் கண்மணி (2)
ஜோஜோ கண்ணே-ஜோஜோ லாலீ கண்ணே-லாலீ (2)
தூங்கு-கண்மணி பொன்னே கண்மணி
ஆனந்த..மாக-நீ  கண்வளர் கண்மணி
(MUSIC)
நாளை-உலகில் ஓடியாடி செய்ய-வேலை இருக்கடீ ...
(VSM)
காலை-மாலை-நீ படிக்க நிறைய-இருக்கடீ
(VSM)
நாளை-உலகில் ஓடியாடி செய்ய-வேலை இருக்கடீ
காலை-மாலை-நீ படிக்க நிறைய-இருக்கடீ
ஆம்-அதனால் கிடைக்கும்போது  தயங்காமல் ஓய்வெடு-நீ  
ஆம்-அதனால் முடியும்போது மறக்காமல் ஓய்வெடு-நீ
பெண்ணாய்விடில்-எந்நேரமும் பொறுப்பு தானடி
தூங்கு கண்மணி பொன்னே கண்மணி (2)
ஆனந்த..மாக-நீ  கண்வளர் கண்மணி (2)
ஜோஜோ கண்ணே ஜோஜோ லாலீ கண்ணே லாலீ (2)
தூங்கு கண்மணி பொன்னே கண்மணி
ஆனந்த..மாக-நீ  கண்வளர் கண்மணி
(MUSIC)
தாயும்-அருகில் இல்லையென்ற ஏக்கம்-எனக்கு ஏதடி
(VSM)
உண்மை-என்ற உறவும்-நீயும் வந்த-பிறகு ஏதடி 
(VSM)
தாயும்-உலகில் இல்லையென்ற ஏக்கம்-எனக்கு ஏதடி
உண்மை-என்ற உறவும்-நீயும் வந்த-பிறகு ஏதடி
ஆத்மாவின் ராகமே ஆனந்த போதம்-நீ (2)
உலகக்-கவலை மறக்க-இறைவன் அளித்த வரமடீ
தூங்கு கண்மணி பொன்னே கண்மணி (2)
ஆனந்த..மாக-நீ  கண்வளர் கண்மணி (2)
ஜோஜோ கண்ணே-ஜோஜோ லாலீ கண்ணே-லாலீ (3)
ஜோஜோ கண்ணே-ஜோஜோ




OTHER SONGS


Wednesday, December 2, 2020

9. இனிப்பினும்-இனிப்புன்(பௌர்ணமி நிலவில்) **

 

(Aligned to karaoke) 

இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு
அமுதமும்-தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு
அதன்-முன் மான்விழி அழகோ-சொல்
(SM)
இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு (2)
அமுதமும் தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு (2)
அதன்-முன் மான்விழி அழகோ-சொல் (2)
(MUSIC)
உந்தன்-நினைவைப் பாட்டினிலே தருவேன்-பொறிப்பேன் ஏட்டினிலே
என்-கண் உன்னை உயிரினிலே-நான் இணைத்தேன் இணைந்தேன் உன்னுடனே
உந்தன் விழியே கவிதை தருது கொஞ்சும் மழலை அது-என் விருது 
உந்தன் உருவம் உயிரில் கலந்து எந்தன் கவியாய் வெளியே வருது  
இந்நாள்-முதல் உன் பண் ஆக்குவேன் 
கண்ணே இனி அதை நான் பாடுவேன்
(MUSIC)
உன்-சொல் மொழிதான் கனி-எனக்கு உந்தன்-விழிதான் பனிப்பெருக்கு
உன்னுட..னே-தான் பணி-எனக்கு-நீ சிரித்தால்-போகும் பிணி-எனக்கு
வேறோர் பணிதான் இனி-ஏன் புரிய
உந்தன் பணிதான் இனிமேல் கிளியே  
எந்தன் முதுமை பெரிதாய்க் குறைக்க
உந்தன் விழியே மருந்தாய் இருக்க
என்-வாழ்க்கையின் நல் பலன்-நீயடி
தீந்தேன் துளிப்  பண் விழியால் படி
இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு
அமுதமும்-தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு
அதன்-முன் மான்விழி அழகோ-சொல் (2)

ம்ஹ்ஹ ஹ்ம் ஹ்ம்..ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்  (3)


OTHER SONGS


8. நீ என்-பாட்டில்(நீ என்னென்ன சொன்னாலும்) **

 


நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
(2)
நீ-கணந்தோறும் புரிகின்ற புதுமை
அதில் என்-வாழ்வு பெறும்-மீண்டும் இளமை.
(2)
இளமை இளமை
(MUSIC)
உன்னை இதுவென மொழியினில் புனைந்து (2)
சொல்வேன் இல்லை-என்று உண்மையை-உணர்ந்து (2)
எந்தன் ரிதுவென உன்முகம் உவந்து (2)
நோக்கிக் களிக்கிறேன் தினம்-தினம் வியந்து
தினமுனை அடைந்து
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
(MUSIC)
உன்னில் எனதுயிர் இழையறக் கலந்து (2)
கன்றின் பசுவென இணை-நடை பயின்று (2)
எந்தன் நினைவென உன்-மனம் நிறைந்து (2)
என்றும் உனதென இருந்திடும் நிலைத்து
இருந்திடும் நிலைத்து
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
(MUSIC)
அள்ளிப் பருகிட அமுதினும் இனிப்பு
தித்தித்..திருந்..திடும் மழலையின் துடிப்பு
கற்றே தருகுது வாழ்வினில் படிப்பு
அந்தோ இதுவரை புரிந்தது நடிப்பு
சிறுமதி நடிப்பு
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
நீ-கணந்தோறும் புரிகின்ற புதுமை
அதில் என்-வாழ்வு பெறும்-மீண்டும் இளமை.
இனிமை இனிமை

OTHER SONGS


Saturday, November 28, 2020

7. இதமாய் மின்னிடும்(நிலவே என்னிடம் நெருங்காதே) **

 Click here for the Original Song

இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார்-கண்ணே
(2)
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பா..ர்-கண்ணே
(MUSIC)
இதம்-தரும் வசந்தம் ருது-என்பார் இனி-யாவரும் அதனை ரிது-என்பார் (2) 
அலைந்திடும் விதமாய் மனமென்பார்
உன் பார்வையில் அமைதி பெறுமென்பார்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
ஜாமத்தில் குழந்தை தான் அழுமாம்  
நல் ஜாமத்தில் கூட புன்  சிரிப்பாய்
(2)
*தோடியின்  ராகம் போலக் கண்ணே
நீ பாடிடுவாயே என்னுயிரே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
அமைதி-இல்லாத புழுக்கத்திலே 
நீ ஓர்-கணம் எனையே பார்த்துவிட்டால்
(2)
நிம்மதி எனும்-ஓர் தென்றலிலே எனை வருடிடுக்-கண்ணே-பே..ரிதம் கொடுப்பாய்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே

** Thodi is a raga sung between 8am-10am. It means, without getting irritated about waking up in midnight, you will sing like morning.


OTHER SONGS