Wednesday, December 2, 2020

8. நீ என்-பாட்டில்(நீ என்னென்ன சொன்னாலும்) **

 


நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
(2)
நீ-கணந்தோறும் புரிகின்ற புதுமை
அதில் என்-வாழ்வு பெறும்-மீண்டும் இளமை.
(2)
இளமை இளமை
(MUSIC)
உன்னை இதுவென மொழியினில் புனைந்து (2)
சொல்வேன் இல்லை-என்று உண்மையை-உணர்ந்து (2)
எந்தன் ரிதுவென உன்முகம் உவந்து (2)
நோக்கிக் களிக்கிறேன் தினம்-தினம் வியந்து
தினமுனை அடைந்து
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
(MUSIC)
உன்னில் எனதுயிர் இழையறக் கலந்து (2)
கன்றின் பசுவென இணை-நடை பயின்று (2)
எந்தன் நினைவென உன்-மனம் நிறைந்து (2)
என்றும் உனதென இருந்திடும் நிலைத்து
இருந்திடும் நிலைத்து
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
(MUSIC)
அள்ளிப் பருகிட அமுதினும் இனிப்பு
தித்தித்..திருந்..திடும் மழலையின் துடிப்பு
கற்றே தருகுது வாழ்வினில் படிப்பு
அந்தோ இதுவரை புரிந்தது நடிப்பு
சிறுமதி நடிப்பு
நீ என்-பாட்டில் விளையாடும் எதுகை
அதில்-மெருகூட்டிக் களையாக்கும் மோனை
நீ-கணந்தோறும் புரிகின்ற புதுமை
அதில் என்-வாழ்வு பெறும்-மீண்டும் இளமை.
இனிமை இனிமை

OTHER SONGS


No comments:

Post a Comment