Saturday, November 28, 2020

7. இதமாய் மின்னிடும்(நிலவே என்னிடம் நெருங்காதே) **

 Click here for the Original Song

இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார்-கண்ணே
(2)
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பா..ர்-கண்ணே
(MUSIC)
இதம்-தரும் வசந்தம் ருது-என்பார் இனி-யாவரும் அதனை ரிது-என்பார் (2) 
அலைந்திடும் விதமாய் மனமென்பார்
உன் பார்வையில் அமைதி பெறுமென்பார்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
ஜாமத்தில் குழந்தை தான் அழுமாம்  
நல் ஜாமத்தில் கூட புன்  சிரிப்பாய்
(2)
*தோடியின்  ராகம் போலக் கண்ணே
நீ பாடிடுவாயே என்னுயிரே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
அமைதி-இல்லாத புழுக்கத்திலே 
நீ ஓர்-கணம் எனையே பார்த்துவிட்டால்
(2)
நிம்மதி எனும்-ஓர் தென்றலிலே எனை வருடிடுக்-கண்ணே-பே..ரிதம் கொடுப்பாய்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே

** Thodi is a raga sung between 8am-10am. It means, without getting irritated about waking up in midnight, you will sing like morning.


OTHER SONGS


No comments:

Post a Comment