Showing posts with label நிலவே என்னிடம் நெருங்காதே. Show all posts
Showing posts with label நிலவே என்னிடம் நெருங்காதே. Show all posts

Sunday, July 26, 2026

34.ரிதுவே என் உயிர் நீதானே(நிலவே என்னிடம் நெருங்காதே)


[chorus]

ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[bridge]
புதிராய் இருப்பினும் நீ தானே-அந்த புதிரின் விடையாய் ஆனாயே
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[Instrumental interlude]
[verse 1]
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
உன் உறவெனக்கொரு   பேறாகும்
உன் பாட்டன் என் வாழ்க்கையின் வேராகும்
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[instrumental interlude]
[Verse 2]
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
நீ பிறந்ததும்  உனையும்  இணைத்துக் கொண்டேன்
மறைந்த பின்னாலும் இருந்திடுவேன்
உன் நினைவிலென் பாட்டாய் நிறைந்திருப்பேன்


Saturday, November 28, 2020

7. இதமாய் மின்னிடும்(நிலவே என்னிடம் நெருங்காதே) **

 Click here for the Original Song

இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார்-கண்ணே
(2)
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பா..ர்-கண்ணே
(MUSIC)
இதம்-தரும் வசந்தம் ருது-என்பார் இனி-யாவரும் அதனை ரிது-என்பார் (2) 
அலைந்திடும் விதமாய் மனமென்பார்
உன் பார்வையில் அமைதி பெறுமென்பார்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
ஜாமத்தில் குழந்தை தான் அழுமாம்  
நல் ஜாமத்தில் கூட புன்  சிரிப்பாய்
(2)
*தோடியின்  ராகம் போலக் கண்ணே
நீ பாடிடுவாயே என்னுயிரே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
(MUSIC)
அமைதி-இல்லாத புழுக்கத்திலே 
நீ ஓர்-கணம் எனையே பார்த்துவிட்டால்
(2)
நிம்மதி எனும்-ஓர் தென்றலிலே எனை வருடிடுக்-கண்ணே-பே..ரிதம் கொடுப்பாய்
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே
அமுதாய் இனித்திடும் குரலாலே-நீ
தாத்தா தாத்தா என்பாயே
இதமாய் மின்னிடும் விழியாலே
நீ எனைப்பார் எனைப்பார் பார் கண்ணே

** Thodi is a raga sung between 8am-10am. It means, without getting irritated about waking up in midnight, you will sing like morning.


OTHER SONGS