Wednesday, December 2, 2020

9. இனிப்பினும்-இனிப்புன்(பௌர்ணமி நிலவில்) **

 

(Aligned to karaoke) 

இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு
அமுதமும்-தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு
அதன்-முன் மான்விழி அழகோ-சொல்
(SM)
இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு (2)
அமுதமும் தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு (2)
அதன்-முன் மான்விழி அழகோ-சொல் (2)
(MUSIC)
உந்தன்-நினைவைப் பாட்டினிலே தருவேன்-பொறிப்பேன் ஏட்டினிலே
என்-கண் உன்னை உயிரினிலே-நான் இணைத்தேன் இணைந்தேன் உன்னுடனே
உந்தன் விழியே கவிதை தருது கொஞ்சும் மழலை அது-என் விருது 
உந்தன் உருவம் உயிரில் கலந்து எந்தன் கவியாய் வெளியே வருது  
இந்நாள்-முதல் உன் பண் ஆக்குவேன் 
கண்ணே இனி அதை நான் பாடுவேன்
(MUSIC)
உன்-சொல் மொழிதான் கனி-எனக்கு உந்தன்-விழிதான் பனிப்பெருக்கு
உன்னுட..னே-தான் பணி-எனக்கு-நீ சிரித்தால்-போகும் பிணி-எனக்கு
வேறோர் பணிதான் இனி-ஏன் புரிய
உந்தன் பணிதான் இனிமேல் கிளியே  
எந்தன் முதுமை பெரிதாய்க் குறைக்க
உந்தன் விழியே மருந்தாய் இருக்க
என்-வாழ்க்கையின் நல் பலன்-நீயடி
தீந்தேன் துளிப்  பண் விழியால் படி
இனிப்பினும்-இனிப்புன் மழலையில் இருக்கு
அமுதமும்-தேனும் ஏனோ-சொல்
அழகினும்-அழகுன் விழிகளில் இருக்கு
அதன்-முன் மான்விழி அழகோ-சொல் (2)

ம்ஹ்ஹ ஹ்ம் ஹ்ம்..ஹ்ம்-ஹ்ம்-ஹ்ம்  (3)


OTHER SONGS


No comments:

Post a Comment