Tuesday, July 27, 2021

24. எனக்காக வாழ்கின்ற நிலை(அலங்காரம் கலையாத சிலை ஒன்று) **


எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(2)
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன்
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(2)
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(MUSIC)
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை
என் தாயும் கொண்டிட்டப் பொன்னின் நகை
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை
என் தாயும் தந்திட்டப் பொன்னின் நகை
பேரோடு உறவாடிச் செல்கின்றதல்ல
நீ தந்த உறவந்த இறைவன் வரம்
நீ எந்தன் குலதெய்வம் தாயின் வரம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
என்தாயும் நீ-என்று மனம் சொல்லுது
என் தாயின் எழில்-உந்தன் கண் மின்னுது
வந்தாள் என்தாய்-சொந்தம் என்றே என்னோடு
எந்நாளும் இனிதாக நாம் வாழுவோம்
எந்நாளும் பிரியாமல் நாம் வாழுவோம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
தலை சாய்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் தினம்
எனைப் பார்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் நிஜம்
என் தாயைப் போலந்த ஒரு பார்வை சாட்சி
என் தாயைப் போலுந்தன் ஒரு பார்வை சாட்சி
சொல்கின்ற திருக்காட்சி பொய்யாகுமோ
உயிரோடும் தாயன்பு பொய்கூறுமோ
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(2)

OTHER SONGS


No comments:

Post a Comment