Thursday, July 29, 2021

22. கிடையாது (அலங்காரம் கலையாத சிலை ஒன்று) **

 

கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே   
(2)
முடியாது  முடியாது முடியாது என்பேன் 
யாராலும் அதைக்கூற ஒரு  பாட்டிலே
(2)
தாய் மேன்மை வார்த்தைக்குள் அடங்காததே 
(MUSIC)

ஓயாது உழைத்தாலும் என்தாய் முகம் 
வாடாமல்  சிரிக்கும் பூ சேய் என்னிடம் 
(2)
பேச்சோடு உறவாடிச் செல்கின்றதல்ல
மூச்சோடு உறவாகும் தாயின் மனம்
மூச்சோடு உறவாடும் தாயின் மனம்
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மா உன் அன்புக்கு ஈடென்பதே   
(MUSIC)

என்-தாயின் மனம்-என்னைத் தான் சுற்றுது  
என் மீது அவள் பித்து தினம் முற்றுது 
பின்னாளில் பிணி-வந்து அவள் வாடும் போதும்
நான் வாட எனக்காக தாய் வாடுவாள் 
எந்நாளும் எனக்காகத் தாய் வாழுவாள் 
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே   
(MUSIC)

நாம் தேடிச் செல்லாமல் தாய் நம்மிடம் 
தான் வந்து தருவாளே அன்பாய் இதம்
(2)
தாய் வேண்டிக் கேட்கின்ற வரம் என்றும் ஒன்றே (2)
அது பிள்ளை நலம் என்ற ஒன்றாகுமே
நமக்காக வாழ்கின்ற தாய் தெய்வமே
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மா உன் அன்புக்கு ஈடென்பதே  

Some More



No comments:

Post a Comment