Friday, August 20, 2021

25. உனது கண்கள்(நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) ***

 

உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது (2)
மீதமென்ன இவ்வுலகில் வெல்ல உள்ளது
உனது அன்பு ஞாலத்தையே வெற்றி கொண்டது
உனது மனதும் எனது மனதும் ஒன்று ஆனது
எனது மனது உனது மனது என்று ஆனது
அதில் உதிக்கும் யாவும் உனது எனது என்றே ஆனது
அதில் எண்ணம் யாவும் உனது எனது என்றே ஆனது
எனது மனது உனது மனது என்று ஆனது
அதில் உதிக்கும் யாவும் உனது எனது என்றே ஆனது
அன்பே ஆனது
( MUSIC)

சொன்னாலும் மற்ற எவர்க்கும் புரிந்திடவா போகுது
என் மனதை எழுத்துக்களும் சொல்லிடவா போகுது
(2)
அம்மா நீ தந்த  உயிர்கள் எனக்கு இரண்டு உள்ளது
கல்லான முரடன் எனக்கும் அன்பைச் சொரிந்து அணைப்பது
எந்நாளும் உன் வடிவில் என் துணையாய் உள்ளது 
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது
வெற்றி கொண்டது
( MUSIC)

ஆ...
( MUSIC)
யாக்கை-போய் மனித உணர்வு இறைவன் உணர்வில் சேர்வது
மேலான யோகமென்று பதஞ்சலியார் சொன்னது
ஆஹா அவ்வுணர்வை-உந்தன் பார்வை-ஒன்றே தருகுது-என் 
அன்பே-உன்..னால்-எனக்கும் மோட்சப் பாதை தெரிந்தது 
உனது கண்கள் ஞானம் எனும் சக்தி தருவது முக்தி தருவது
( MUSIC)

இப்பாட்டில் உரைத்ததுவோ கொஞ்சம் வெளியில் தெரிவது
சொல்லாமல் புரிவதுவோ உனக்கும் எனக்கும் உரியது
என்-பாட்டு சொல்வது-எல்..லாருக்குமா பிடிக்குது
ஆனாலும் சொல்லுகிறேன் எனக்கு அது இனியது
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது
மீதமென்ன இவ்வுலகில் வெல்ல உள்ளது
உனது கண்கள் ஞாலத்தையே வெற்றி கொண்டது


OTHER SONGS


No comments:

Post a Comment