Showing posts with label Amma. Show all posts
Showing posts with label Amma. Show all posts

Wednesday, July 24, 2024

31.எந்தன் இதயத்தின் உள்ளே Tune:தங்கப்பதக்கத்தின் மேலே-AMMA31-APPAA10


எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
ஆ...
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

அன்றைக்கு இன்றைக்கு நாளைக்கு என்று காலக் கணக்கைக் கடந்து (2)
பல கோடி ஜன்மம் தாண்டி என்னில் என்றும் இருப்பது ஒன்று (2)
அதனில் அமிழ்ந்து அதனில் மகிழ்ந்து மயங்கி நின்றேனே
அதனை அன்னை தந்தை நினைவு என்றறிந்தேனே
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

போதாது போதாது என்று மனது என்னில் திளைப்பது என்ன (2)
இரவான பிறகும் தூக்கம் துறந்து உள்ளில் திளைப்பது என்ன (2)
பசிக்கு உணவு வயிறு நிறைய இதம் பிறக்காதோ
அன்னை தந்தை அன்பு மனதில் சுகம் கொடுக்காதோ
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
(SM)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
எந்த வார்த்தை வரியும் சொல்லத் திகைத்து தோல்வி அடைவது என்ன (2)
கூறும் உதட்டில் ஊறும் அமுதை சொல்லிடச் சொல்லேது (2)
மகனாசையாக அம்மா அப்பா என்றிடும்போது
மகனாசையாக அப்பா அம்மா என்றிடும்போது
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா

ஆ..




 

Thursday, April 13, 2023

30. என்னைப் பிரிந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்)**

 


என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
SM

 உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  music

என்னை-மடியிலே போட்டு தலையைக் கோதியே தலையைக் கோதியே
   sm
ஆசையாக பார்த்த உந்தன் கண்கள் தோன்றுதே நினைவில் தோன்றுதே
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  வாம்மா என்னிடம் வந்திடம்மா
  ( SM)

  ஆ...
  இரவில் நானுமே எந்தன் கண்கள் மூடியே கண்கள் மூடியே
  sm
  உறக்கம் நாடியே  புரண்டு கிடக்கும் போதிலே புரளும் போதிலே
  நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
   நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா   வாம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் என்னிடம் வந்திடம்மா அம்மா
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா


Friday, May 27, 2022

தாயென்பவள் உயர்வானவள்(காலங்களில் அவள் வசந்தம்)

 

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 

(Music)

மகற்கெனவே  தினம் ஓய்விலா 

உழைப்பொன்றினில் அவள் உயிர் மூச்சு

ஓ .. 

மகற்கெனவே  தினம் ஓய்விலா 

உழைப்பொன்றினில் அவள் உயிர் மூச்சு

உறக்கத்திலேயும் சேய் பணி (2)

மறந்திடுதிடுவாள் அவள் இல்லை

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 

 (Music)

நான் நான் என்பவள் இல்லை

அட  என் தாய் அது போல் இல்லை

நான் நான் என்பவள் இல்லை

அட  என் தாய் அது போல் இல்லை

மனம் போல் சுடுகின்ற சொல்லை

மனம் போய் சுடுகின்ற சொல்லை 

அவள் என்று சொல்லினாள் இல்லை 

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 



Thursday, September 23, 2021

வாழ்வாங்கு நீ வாழ்(பூமாலையில்) ** (AMMA,APPAA)

 



ஆ .. ஆ ..
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது
(1+MUSIC+1)
(MUSIC)
அன்னை மென்-மடி நினைவு எப்போதும் ஆ ..
தந்தை-உன் ஆசிகள் கேட்குதெப்போதும் ஆ ..

அன்னை பொன்னடி மென்-மடி போதும்
தந்தை வாய்மொழி ஆசிகள் போதும்
அதன்-மேல் இனிமை உலகில் உளதோ (2)
நினைந்தே இருப்பேன் வரும்-நாள் உலகில் 
அதைத்தான் நினைந்தேன் இது-நாள் வரையில்
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது
(MUSIC)
கொஞ்சும் குளிர்மழைச் சாரலைப் போலும் ஆ 
உங்களின் மென்-குரல் காதினுள் தூறும் ஆ
முதுமை-வரினும் மடியில்-உருளும் (2)
உரிமை தரும்-தாய் தந்தை தெய்வம்
உறவைத் தரும்-தாய் தந்தை தெய்வம்
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது

Thursday, July 29, 2021

22. கிடையாது (அலங்காரம் கலையாத சிலை ஒன்று) **

 

கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே   
(2)
முடியாது  முடியாது முடியாது என்பேன் 
யாராலும் அதைக்கூற ஒரு  பாட்டிலே
(2)
தாய் மேன்மை வார்த்தைக்குள் அடங்காததே 
(MUSIC)

ஓயாது உழைத்தாலும் என்தாய் முகம் 
வாடாமல்  சிரிக்கும் பூ சேய் என்னிடம் 
(2)
பேச்சோடு உறவாடிச் செல்கின்றதல்ல
மூச்சோடு உறவாகும் தாயின் மனம்
மூச்சோடு உறவாடும் தாயின் மனம்
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மா உன் அன்புக்கு ஈடென்பதே   
(MUSIC)

என்-தாயின் மனம்-என்னைத் தான் சுற்றுது  
என் மீது அவள் பித்து தினம் முற்றுது 
பின்னாளில் பிணி-வந்து அவள் வாடும் போதும்
நான் வாட எனக்காக தாய் வாடுவாள் 
எந்நாளும் எனக்காகத் தாய் வாழுவாள் 
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே   
(MUSIC)

நாம் தேடிச் செல்லாமல் தாய் நம்மிடம் 
தான் வந்து தருவாளே அன்பாய் இதம்
(2)
தாய் வேண்டிக் கேட்கின்ற வரம் என்றும் ஒன்றே (2)
அது பிள்ளை நலம் என்ற ஒன்றாகுமே
நமக்காக வாழ்கின்ற தாய் தெய்வமே
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மாவின் அன்புக்கு ஈடென்பதே
கிடையாது கிடையாது கிடையாது என்பேன் 
அம்மா உன் அன்புக்கு ஈடென்பதே  

Some More



Friday, June 11, 2021

21. அம்மா எனும்-மகன் குரலோசை(தேவன் கோவில் மணியோசை) **

அம்மா எனும்-மகன் குரலோசை
அதைக் கேட்டதும் பொங்கும் அவள் ஆசை
(2)
பாவி என்றாலும் தன் மகன் மேலே 
பாசத்தைக் காட்டும் அவள் ஆசை
அம்மா எனும் மகன் குரலோசை
அதைக் கேட்டதும் பொங்கும் அவள் ஆசை
(MUSIC)
உறவும் உலகும் சொல்லால் எரிக்கும்
பொழுதும் அணைக்கும் தாய் ஆசை
(2)
கனவாய் மறைந்தும் நினைவாய் மனதை 
வருடும் மகனே எனும் ஓசை.
அவள் அருமையை உணரும் ஒரு பேறை
அவள் மறைந்ததும் தருவார் சிலர் நேரே
அம்மா எனும்-மகன் குரலோசை
அதைக் கேட்டதும் பொங்கும் அவள் ஆசை
(MUSIC)
அருமை-மகனே துரும்பாய் இளைத்தாய்
உண்-என ஊட்டும் அவள்-ஆசை
(2)
ஒன்றே-தினமும் எந்தன்-அம்மா 
அன்பாய்ச் செய்யும் உயர் பூஜை
அவள் பாதங்கள் பணியும் பெரும் பேறை
அடைந்தாருடன் சேர்த்தேன் என் பேரை
 அம்மா எனும்-மகன் குரலோசை
அதைக் கேட்டதும் பொங்கும் அவள் ஆசை
பாவி என்றாலும் தன் மகன் மேலே
பாசத்தைக் காட்டும் அவள் ஆசை
அம்மா எனும்-மகன் குரலோசை
அதைக் கேட்டதும் பொங்கும் அவள் ஆசை



Some More

 




20. அழகினும் அழகாக (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) **

 



அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலாக எதுவாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
(2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
 (MUSIC)
நாம் சிரித்தால் சிரிக்கும் அன்னை முகம்-நாம்
வாடிநின்றால் துடிக்கும் அவள் இதயம்
(2)
நம்-பசி தாங்காது அவள் இதயம் (2)
பிள்ளை உண்டாலே நிறைவாகும் அவள் வயிறும்  (2)
 அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
 (MUSIC)
நம்-சிறப்பே தனது வாழ்க்கை என்று-தன்
பொன்னான திருமேனி தான் இளைத்து
(2)
சளைக்காமல் எந்நாளும் தான் உழைத்து (2)
முடிவில் நினைவாக வாழ்கிறாள் உடல் விடுத்து (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
புகலின் புகலாக எதுவாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்


Some More





19. உலகினில் தாயே(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

 


உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
மனதினிலே-அவள் முகம்-பாரு உடன்-தோன்றிடும் ப்ரேமையின் பேராறு
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
 (MUSIC)
அன்பொழுகும்-அவள் ஒரு பார்வை
போக்கிடுமே-உடன் மனச் சோர்வை
(2)
என்பினுக்கே-தோல் ஒரு-போர்வை-போல்
பிள்ளைக்குத்-தாய்-அன்..பெனும்-சால்வை
என்பினுக்கே-தோல் ஒரு-போர்வை-போல்
பிள்ளைக்குத்-தாய்-தான் ஒரு சால்வை
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
 (MUSIC)
தாய் பதம் ஆலயம் நீ நாடு
வாய்த்திடும் ஆண்டவன் அருள் பாரு
(2)
தாயுடன் வாழ்ந்திடல் பெரும்பேறு
அந்த இறைவனுக்கே அது இல்லை பாரு
(2)
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு
மனதினிலே-அவள் முகம்-பாரு உடன்-தோன்றிடும் ப்ரேமையின் பேராறு
உலகினில்-தாயே பெரும்-பேறு எதுவாகிடும்-கூறு அவள்-ஈடு

Some More




18. தந்திடம்மா ஒரே சிறகை(அன்றொரு நாள் இதே நிலவில்) **

 

தந்திடம்மா ஒரே சிறகை
வந்திடுவேன்-உன் அருகே
(Harmonium)
தந்திடம்மா ஒரே சிறகை
வந்திடுவேன்-உன் அருகே
நான் வாழ்ந்திருக்கேனே உன் நினைவில்
நீ அறியாயோ என்னுயிரே
(Harmonium)
என்றும் திருநாள் உன்னோடு இரும் நாள்
மீண்டும் வருமா இந்நாளில் அதுபோல்
பாசமொழிகள் கேட்கத் துடித்தேன்
பாசமொழிகள் கேட்க வருவேன்
நானும் உன்னருகே நீ தாராயோ உன்-சிறகை
தந்திடம்மா ஒரே சிறகை
வந்திடுவேன்-உன் அருகே
நான் வாழ்ந்திருக்கேனே உன் நினைவில்
நீ அறியாயோ என்னுயிரே
(Harmonium)
தாயுன் விழியில் உன்-பாசம் தெரியும்
மோன மொழியில் உன்-நேசம் வழியும்
வேர்த்து உழைப்பாய் பார்த்து கொடுப்பாய் (2)
யாரும் ஈடு இல்லை நான் ஏங்குகிறேன் தா சிறகை 
தந்திடம்மா ஒரே சிறகை
வந்திடுவேன்-உன் அருகே
நான் வாழ்ந்திருக்கேனே உன் நினைவில்
நீ அறியாயோ என்னுயிரே


Some More



Sunday, December 13, 2020

9. அமாவாசை ( ஒரே பாடல் ) **


ஆ..
அமாவாசை என்னும் தினமே
அம்மா ஆசை எண்ணும் மனமே
(2)
அம்மா ஆசை
(Music)

நாளும் சொரியும் பாசப் பிரியம்
அன்னை பிரியும் அன்றே புரியும்
(2)
கண்ணே உனக்கு பின்னே எனக்கு (2)
என்றே கொடுக்கும் அன்னை எவர்க்கும்
அன்பே கொடுக்கும் பொல்லாதவர்க்கும்
அமாவாசை என்னும் தினமே
அம்மா ஆசை எண்ணும் மனமே
அம்மா ஆசை
(Music)

அன்னை எனும் பேர் அன்பின் தெளி தேன்
தன்னைக் கொடுக்கும் பண்பின் மறுபேர்
(2)
பிள்ளை எனும் வேர் நன்றே விடவே
அன்னை எனும் நீர் தன்னை விடுமே
பிள்ளை எனும் வேர் நன்றே எழவே
அன்னை எனும் நீர் மண்ணில் விழுமே
அமாவாசை என்னும் தினமே
அம்மா ஆசை எண்ணும் மனமே
அம்மா ஆசை





 

Saturday, July 28, 2018

16. தாய் தாய் ( வேல் வேல் வீர முருகனின் வேல்)




தாய் தாய் த்யாக உருவமே தாய் (5)
தாய் தாய் தாய்

தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன் ..
தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன்..
(3)
தாயவள் கொஞ்சிட அன்பெனும் தேன்
வடிந்திடுமே
 தாயவள் நெஞ்சினில் அன்பெனும் தேன் வடிந்திடுமே
தாயவள் கொஞ்சிட அன்பெனும்-தேன் வடிந்திடுமே
இனிப்பது எது-எது அதற்கு மேல் மேல் (2)
தாய் தாய் தாய்


குவலயம் காக்கும் இறைவனுக்கோர்-பேர்
கருணையைப் பொழியும் தாயெனும்-பேர்
(2)
சிவனவள்-வடிவே சக்தியும் அவளே

சிவனவள்-வடிவே சக்தியும் அவளே
மகனாகிப் பணிந்திடல் நற்-பெறும் பேறே
(2)
தாய் தாய் த்யாக உருவமே தாய்
த்யாக உருவமே
தாய் தாய் தாய்




Monday, March 6, 2017

15. உன் நினைப்பில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)








உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
(2)
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோடி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
சோற்றை உண்ணும்-வேளை அங்கே உன்-கை வந்தது
சோற்றை உண்ணும்-வேளை அம்மா உன்-கை வந்தது
போதும் என்ற-போதும் வாயில்-அதுவே தந்தது 
இன்னும் கொஞ்சம்-கண்ணே என்று-அன்பைப் பெய்தது
உனக்கெது இணை கூறேன்  நீ அன்பினில் பல-ஆறே
நினைத்தால் ஏக்கம் எழுதே  ஆ.. படுத்தால் தூக்கம் கெடுதே  
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
 பிள்ளை தூங்கும் நேரம் உந்தன் எண்ணம் வந்தது
சோகம் பந்து-போலும் வந்து-நெஞ்சில் நின்றது
இனி-உந்தன் பரிவேது என்ற-ஏக்கத்தின் முடிவேது
இரவும் பகலும் உனையே ஆ.. நினைத்தால் முடிவும் இலையே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
வாடல் கொண்டு-பிள்ளை இங்கே தனியே-நின்றது
வாடா எந்தன்-கண்ணே என்ற குரலைத் தேடுது
நானழு..தழுதாச்சு என் கண்களும் காய்ஞ்சாச்சு
விரைவினில் வருவேன் அங்கே..ஆ..அதுவரை இருப்பாய் அன்பே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்
உறவினில் பலகோடி அவை உன்-மடி முன்-தூசி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோட
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்



Wednesday, September 7, 2016

13. என்னிடத்தில் (கங்கையிலே ஓடமில்லையோ )



என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர்-வர என்னை-விட்டு நீயும்-செல்ல 
உரை உரை கொஞ்சம்-உரை என்னிடத்தில் என்ன குறை (2)
என்னிடத்தில் என்ன குறை (4)
அம்மா .. அம்மா .. அம்மா ..
நானினிமேல் தாவென்று கெஞ்சுவதெங்கே
நீ ஆகாது போடா-என்றே கொஞ்சுவதெங்கே
உரை உரை கொஞ்சம் உரை என்ன குறை
நானின்னும் தாவென்று கெஞ்சுவதெங்கே
நீ ஆகாது போடா-என்றே கொஞ்சுவதெங்கே
நெய்ப்-பொங்கல் நான்-இனிமேல் தின்னுவதெங்கே
உன் அன்புக்கை இந்தாவென்று ஊட்டுவதெங்கே
உரை கொஞ்சம் உரை
உரை உரை கொஞ்சம் உரை (2)
என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர் வர என்னை-விட்டு நீயும்-செல்ல
உரை-உரை கொஞ்சம்-உரை என்னிடத்தில் என்ன குறை (2)
(MUSIC)
உன்-போலக் கொஞ்சமுண்டோ தெய்வ-சந்நிதி
உன் கண்போலே தந்திடுமோ என்றும்-நிம்மதி
உரை கொஞ்சம் உரை உரை-உரை கொஞ்சம்-உரை
உன் தாள்-தான் சேய்-எனக்கு தெய்வ சந்நிதி
உன் பின்னாலே ஏக்கமொன்றே  பிள்ளை-என் கதி
உன்னோடு போச்சுதாம்மா கொஞ்சல்கள்-எல்லாம்
உன் பின்னாலே வாழ்க்கையெலாம் கெஞ்சல்கள்-ஒன்றாம்
உரை கொஞ்சம்-உரை
உரை-உரை கொஞ்சம் உரை (2)
என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர்-வர என்னை-விட்டு நீயும்-செல்ல
உரை-உரை கொஞ்சம்-உரை உரை-உரை கொஞ்சம்-உரை (2)
(MUSIC)
பொன்-தனச் செல்வமும் உன்-விழி யாகுமோ
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கோவென்..றழ-விழத் தாய்-மடி போலெது
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
 கொஞ்சம் எண்ணியதை உரை உரை
பாசத்தைத் தருவது அன்னை போலெது
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
யாவரும் சும்மா உன்னெதிர்-அம்மா
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை (4)


Tuesday, August 25, 2015

Oh .. Mother…!

                                              


                                                              
Oh..My mom..        Oh..My mom..     Oh..My mom..       Mom..!


Thy-eat-the              nasty-food             though-you-dis...     like
To-meet-the             need-of-the            soul-me-you            like
Pains-you-take         treat-them-like      pleasure-for-my       sake
Reins-you-put          on-plea..sures        just-for-my              sake
In-this-world            of-ma..ny              many-more-love      fakes
Thee-shine-bright     like-the-ice            that’s-on-the           cake
In-the-height            of-the-dar………. kest-of-mid              night
When-the-child        me-get-up             cry-cry-and              cry
In-dirty                     puddle-of-the        excretes-I                lie
When-the-folks      spit-the-words       that-could-deep        fry
Ton-is-the              measure-of-the      love-you                   apply
None-is-the            measure-of-the      love-you                   apply..!

Oh..My mom..       Oh..My mom..      Oh..My mom..       Mom..!

Son-me-think         of-ta..king              steps-in-re.....          ply
Son-me-think         of-showing             love-in-re.....           ply
Oh..My mom..       Oh..My mom..        Off-you-go              fly..!

Nothing-can           come-ne..ar            matching-thy          love
Even-God              looks-small-in        front-of -thee          Mom
_______________________________________________________


Monday, July 6, 2015

6. நீ இன்று எங்கு என்னம்மா(கோவிந்த க்ருஷ்ண விட்டலே-சாய் பஜன்)

(கோவிந்த க்ருஷ்ண விட்டலே-சாய் பஜன்)

நீ-இன்று எங்கு-என்னம்மா இங்கு நில்லாமல் சென்ற..தென்னம்மா

எங்கு எங்கு என்னம்மா நீ சென்றது-எங்கு செல்லம்மா

அம்மா அம்மா சொல்லம்மா நீ எங்கு-எங்கு சொல்லம்மா



5. மழலை-பற்றி குறள்-சொல்லுது (மெழுகு வர்த்தி எரிகின்றது)


சில நேரங்களில்,அன்றாட வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் , பழைய கால நிகழ்வுகளை நினைவு படுத்தும். அன்று முழுவதும் சங்கிலித் தொடர் போல் ஒன்றன் பின் ஒன்றாய் அவை தொடரும். இதுகாறும் தோன்றாத பல நிகழ்ச்சிகள் பளிச்சென்று மனக் கண் முன் தோன்றிக் கொடுக்கும் தாக்கத்தினால், ஏக்கத்தைத் தரும். அப்படிப்பட்ட நினைவுகளில் அம்மாவைப் பற்றிய நினைவு முதன்மையானதாகும்..அவ்வாறாக , இன்று என் மனைவி சமைத்த ஒரு அருமையான dish , அம்மாவை நினைவுறுத்தியது…!
பள்ளி நாட்களில் சாயங்கால டிபன் என்னுடைய  வாழ்வில் மறக்க முடியாத ஒன்று…!  மிக எளிதான எதையும் ஏற்காத பிடிவாதக்காரனான எனக்காக தினம் ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தை சமைக்கும் அம்மாவுக்கு இணை அம்மாவேதான்…! (இப்போது மனைவி.. (ஹி..ஹி..ஹி..) )..!
அந்த நினைவலைத் தேக்கத்தின்  தாக்கமே இப்பாடல்..
ஆயிரத்து முன்னூற்று முப்பது கோடி  பாக்களிலும் அடக்க முடியாது என்பதனாலோ என்னவோ திருவள்ளுவப் பெருமான் அன்னையின் மாண்புக்கு குறள் சொல்ல  வில்லை ..!
எனவே நம் போன்ற பிள்ளைகளின் உணர்வு வெளிப்பாடாக ஒரு குறள் .. ஒரு குரல்..!
“இறைவன்-அடி பரம-சுகம் என்பர்-தன் அன்னை
மடியின்-சுகம் நுகராதவர்..!”
- திரு உள்ளவன்..!
_______________


மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(1+SM+1)

அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது (2)
அதை-வேதம் இறை-என்குது 

அம்மாவை என்னென்பது..!
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)

அன்பு-என்ற தெய்வம்-மண்ணிலே -
ஆசை-கொண்டு பிறந்து வந்ததே
(2)
அன்னை-என்று பெயரைக்-கொண்டது
பிறகு தன்னின் முழுமை கண்டது
பிறகு தானே முழுமை கொண்டது 
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)

தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
தெய்வம்-வந்து குடியிருந்ததே
தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
வாய்மை-வந்து குடியிருந்ததே
இறையத் தேடி வெளியில்-சென்றது
சேய்கள் கொண்ட அறிவின் மாண்பது
பிள்ளை அறிவை என்னவென்பது

மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது
அதை-வேதம் இறை-என்குது 

அம்மாவை என்னென்பது...!
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது






Thursday, October 30, 2014

4. இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை)


இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை-கிருஷ்ண கானம்)

** Please read this along with the original song **



அம்மா..அம்மா அம்மா.. அம்..மா

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)

வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)
இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா
 (MUSIC)

நீ-எனை ஈன்றெடுக்க பெற்றெனைச் சேர்த்தணைக்க
ஊண்-துறந்தே-துயில் துறந்தாய் அம்மா (2)
நானதை உணராமல் ஐயஹோ உன்-சூலில் (2)
மாபெரும் சுமையாக இருந்தேன் அம்மா
நானொரு சுமையாக இருந்தேன் அம்மா
(MUSIC)

தாரணி..யில்-நாளை உன்மகன் பொன்மேனி
கொண்டிட பல்-கசப்பை மருந்தாய் உண்டாய் (2)
உந்தியில் நில்லாமே மந்தியின் குணத்தாலே (2)
உதைத்துனை வதைத்தேனே ஐயோ அம்மா (2) 
 (MUSIC)

உன்-மகன் மலநீரில் உன்-மடி சேறாக 
சந்தனம் போல் அதனை நினைத்தாய் அம்மா 
பொன் மனத்தால்-என்னை அணைத்தாய் அம்மா
காரிருள் வே..ளையில் பயந்து-நான் கூவிட
நானிருக்..கேன்-கண்ணே பொன்னே என்றாய் (2)
(MUSIC)

நாளைக்குப் பார்த்திடுவேன் நன்றியைச் செலுத்திடுவேன்
என்று-நாள் கடத்தி-வந்தேன் நானும் அம்மா
சோம்பி-இ..ருந்த-பாவி நான்-தான் அம்மா
யாரிடம் கூறுவேன் என்ன-எண்ணித் தேறுவேன் (2)
வந்திடுமா மீண்டும் அந்தப் பொன்னாள்
கண்படுமா ஐயோ அன்னை உன்-தாள்

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)
வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)




3. அம்மம்மா நீ எங்கே சென்றாயம்மா(கல்லெல்லாம் மாணிக்க)

** Please read this along with the original song **


அய்யஹோ ..ஓ.ஹோ
அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
1+(SM)+1
சொல்லெல்லாம் கண்ணே எனும் சொல்லாகுமா
உலகெல்லாம் தாய்-உந்தன் ஈடாகுமா
(2)

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா
(MUSIC)

நெஞ்சுருக வைக்கும்-அந்த திருவாசகம்
தாயின்அன்பு மட்டுமேதான் அதிலே-சிவம்
(2)
வந்தென்னை பார்த்திருப்பாய் கண்ணல்லவா நானுன் கண்ணல்லவா
(1+SM+1)
உன்மழலை தூங்குவதுன் மடியல்லவா அன்பின் மடியல்லவா
ஐயோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

அய்யஹோ ..ஓ.ஹோ..
(SM)
துன்பம்-பல உனக்கு-தந்தேன் நானல்லவா
வாழி-வாழி என்றணைத்தாய் நீயல்லவா
(2)
மண்ணிலேஇனி எனக்கு யார்தான்கதி அம்மா யார்தான்கதி(2)
என்று-எண்ணி வாடுகின்றேன் ஏன்இவ்விதி ஐயோ ஏன் இவ்விதி
அய்யஹோ ..ஓ ..

அம்மம்மா நீ எங்கே சென்..றாயம்மா
விலையில்லா கண்ணே-என்ற சொல்..லெங்கம்மா

2. எங்கே என் தாய் (கண்ணன் வந்தான்)

** Please read this along with the original song **



விருத்தம்
என்பினால் செய்ததில்லை அன்புடலே  தாய்க்கு
கல்லெனக்கும் கசிந்துருகும் அவள்மனமே பாகு
நான்பசித்துப் பொறுப்பாளா தான்ருசித்து உண்பாளா
என்தாயின் அன்புமுகம் எங்கே எங்கே
___________

(MUSIC)
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
(2)
எங்கே என்தாய்..!
(MUSIC)

தேடி எங்கும் காணவில்லை எங்கே என்தாய்
வாடி நானும் துடிக்கின்றேன் எங்கே என்தாய்
(2)
கேட்டிடாமல் தருபவளே அன்பே என் தாய்
கேள்விகளே கேட்காமல் தருவாள் என் தாய்
தர்மம் கொண்ட உருவகமே என்தாய் என்தாய்
தாளாத துயர் தந்து சென்றாள் என்தாய்

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் எங்கே என்தாய்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்..!

(MUSIC)

ஆறுதலை அளித்தணைக்கும் அவள்பூம் பதம்
என்கவலை மறக்க வைக்கும் என்தாய் முகம்
(2)
முரடன் எனை மகிழ்ந்தணைக்கும் என்தாய் பதம்
மூடன் எனைப் புகழ்ந்தினிக்கும் என்தாய் முகம்
(2)
பகவானின் கருவறைஎன் தாயின் பாதம்
அஞ்சாதே எனகாக்கும் அன்னை பாதம்
அன்னை பாதம் எந்தன் அன்னை பாதம் அன்னை பாதம்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்...!
அம்மா…
அம்மா… அம்மா …!
(MUSIC)

 சிறுமை கொண்டு நான் மறந்து போனபோதும்
அருமை என்று உனைநினைந்தி..டாதபோதும்
 (2)

எனை மழலை என்றுநீவா..தாடுவாயே 
தலையில்வைத்து  நீயும்கொண்..டாடுவாயே
 (2)

உலகினிலே உனைப் பிரிந்து நின்றேன் அம்மா
உன்னைநான் யாரிடத்தில் காண்பேன் அம்மா
 (2)

 அம்மா அம்மா அம்மா அம்மா

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய் .. எங்கே என்தாய்...
!


.




Sunday, August 7, 2011

1. அம்மா..!




 தாய்க்குச் செய்யும் தர்ப்பண ஸ்லோகத்தின் பொருளமைய 
 கண்ணீர்ப் பூக்களால் தொடுக்கப்பட்ட சொல் மாலை ...
மகனின் அர்ப்பணம்  தாய்க்கு ...!

 தன்னிலெனைச் சேர்த்துநின்ற நாள்முதலாய்ப் பார்த்த   
கண்ணிலுறை விழிகாக்கும் நல்லிமையாய்க் காத்த  
தண்ணிலுறை மலர்ப்பாதம் தொட்டுனைநான் வாழ்த்த 
மண்ணிலுறை செய்யாமல் சென்றாய் எவரைப்பார்க்க ?


என்னைக் கருவேற்கத் தன்னைக் கருதாமல் 
பின்னை வரும்மெய் வேதனையால் பழுதானாய் 
உண்ணும் உணவேற்காவுன் உடம்புபடும் வேதனைமுன் 
விண்ணேகும் தருணம்தரும் சோதனையும் பெரிதாமோ..! 


கருவான என்னுடம்பு வளருமுன்னே தாரணியில்
பிறவாத அழகுடன்நான் பிறக்கஎண்ணி உறக்கத்திலும் 
மறவாத நல்லுணவை என்பொருட்டு துறந்தனையே
நாதிறவா பல்லுணவை என்னைஎண்ணி ஏற்றனையே...!

சுமையாக உனைத்தாக்கி வயிற்றில் நின்றும் 
இமையாக எனைக்காக்க எண்ணம் கொண்டு   
 அமையாமல் ஓர்கணமும் அங்கு மிங்கும்
நிலையாமல் அலைந்தாயே மூச்சு முட்ட..! 

உள்ளிருக்கும் என்நினைப்பைக் கருத்திருத்திக் கூட்டின் 
உள்ளிருக்கும் ஆசைகளை அழுத்திக்கட்டி காட்டின் 
கள்ளிருக்கும் மலர்வண்டின் மனத்தடக்கி வீட்டின் 
உள்ளிருந்து நோன்பிருந்த தெய்வத் தாயே..!

தலைபுரண்டு  குடல்கிழிந்து உந்தன் கோலம் 
நிலைகுலைந்து எழில்அழிந்து  நிற்கும் காலம்
வலியில்லை இதுவுமினி கண்ணனின் ஜாலம்      
சலிப்பின்றி கண்டிடுவேன் என்றதுன் ஞானம் ..!

கருவின்று வெளிப்பொந்த என்உதிரம் பார்த்து 
வெறுப்பின்றி களிப்பெய்தி உன்அதரம் சேர்த்து 
உருவன்று கிளிப்பிள்ளை என்னுயிரெனக்கோர்த்து
கற்பகத் தருவென்று சளிப்பிள்ளை என்முகம்சேர்த்தாயே..!

கடித்த பல்லால் வலித்த மார்பால் 
குடித்த பாலால் வளர்ந்த என்பால் 
எழுந்த அன்பால் தளர்ந்த உன் பால் 
விழுந்த மாசு விலக்கி உண்டாயே..!

முற்றத்தில் நிலவிருக்கும் நள்ளிரவு வேளையிலே
பற்றியதீ கொண்டதுபோல் நான்எழுந்து அழுகையிலே 
மற்றவரின் ஏச்சும்பேச்சும் உன்னைவந்து தைக்கையிலே
பெற்றவள்நான் உள்ளவரை ஏன்அழுகை என்றவளே...!

மலர்மஞ்சம் நாணுறுமுன் மடிசாய்ந்த வேளையிலென்
மலஜலத்தால்  மாசுபட்டும் முகம்கோணா நிலமகளே 
விலையுனக்கு என்னதர என்றுநிற்கும் வேளையிலே  
வலைபிரிந்த பறவைபோல் பறந்தாயே  விண்ணின்மேலே ..!

நானுண்ட பாலின்சுவை மாறுமுன்னே உய்யத் 
 தானுண்ட விடம்கொண்ட நீலகண்டன் தெய்வத்
தேனுண்ட விண்ணோருடன் சேர்ந்திருக்க ன்னை
கானுண்ட வண்ணம்கொண்டு அமர்ந்திருக்கும்  ஆண்டவனை

நான்கொண்ட சினம்தாக்கா எண்ணம்கொண்டுன் 
நற்குணத்தால் நான்வழங்கும் மன்னிப்பீண்டு 
பெற்ற தாயில்லாப்பிள்ளையவன்   என்றேயன்றி
மற்ற வரமருளும்ஈசனென்ற  நினைப்பாலன்று..!