சில நேரங்களில்,அன்றாட வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் , பழைய
கால நிகழ்வுகளை நினைவு படுத்தும். அன்று முழுவதும் சங்கிலித் தொடர் போல் ஒன்றன் பின்
ஒன்றாய் அவை தொடரும். இதுகாறும் தோன்றாத பல நிகழ்ச்சிகள் பளிச்சென்று மனக் கண் முன்
தோன்றிக் கொடுக்கும் தாக்கத்தினால், ஏக்கத்தைத் தரும். அப்படிப்பட்ட நினைவுகளில் அம்மாவைப்
பற்றிய நினைவு முதன்மையானதாகும்..அவ்வாறாக , இன்று என் மனைவி சமைத்த ஒரு அருமையான
dish , அம்மாவை நினைவுறுத்தியது…!
பள்ளி நாட்களில் சாயங்கால டிபன் என்னுடைய வாழ்வில் மறக்க
முடியாத ஒன்று…! மிக எளிதான எதையும் ஏற்காத
பிடிவாதக்காரனான எனக்காக தினம் ஒரு ஸ்பெஷல் ஐட்டத்தை சமைக்கும் அம்மாவுக்கு இணை அம்மாவேதான்…!
(இப்போது மனைவி..
(ஹி..ஹி..ஹி..) )..!
அந்த நினைவலைத் தேக்கத்தின்
தாக்கமே இப்பாடல்..
ஆயிரத்து முன்னூற்று முப்பது கோடி பாக்களிலும் அடக்க முடியாது என்பதனாலோ என்னவோ திருவள்ளுவப்
பெருமான் அன்னையின் மாண்புக்கு குறள் சொல்ல
வில்லை ..!
எனவே நம் போன்ற பிள்ளைகளின் உணர்வு வெளிப்பாடாக ஒரு குறள்
.. ஒரு குரல்..!
“இறைவன்-அடி பரம-சுகம் என்பர்-தன் அன்னை
மடியின்-சுகம் நுகராதவர்..!”
- திரு உள்ளவன்..!
_______________
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(1+SM+1)
அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது (2)
அதை-வேதம் இறை-என்குது
அம்மாவை என்னென்பது..!
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)
அன்பு-என்ற தெய்வம்-மண்ணிலே -
ஆசை-கொண்டு பிறந்து வந்ததே
(2)
அன்னை-என்று பெயரைக்-கொண்டது
பிறகு தன்னின் முழுமை கண்டது
பிறகு தானே முழுமை கொண்டது
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
(MUSIC)
தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
தெய்வம்-வந்து குடியிருந்ததே
தாய்மை-என்னும் கோயில்-தன்னிலே -
வாய்மை-வந்து குடியிருந்ததே
இறையத் தேடி வெளியில்-சென்றது
சேய்கள் கொண்ட அறிவின் மாண்பது
பிள்ளை அறிவை என்னவென்பது
மழலை-பற்றி குறள்-சொல்லுது குழல்-யாழின் மேல்-என்குது
அன்பு-வாழ்வை நன்கென்றது வெகுவாகப் புகழ்கின்றது
அதை-வேதம் இறை-என்குது
அம்மாவை என்னென்பது...!

No comments:
Post a Comment