தாய்க்குச் செய்யும் தர்ப்பண ஸ்லோகத்தின் பொருளமைய
கண்ணீர்ப் பூக்களால் தொடுக்கப்பட்ட சொல் மாலை ...
மகனின் அர்ப்பணம் தாய்க்கு ...!
தன்னிலெனைச் சேர்த்துநின்ற நாள்முதலாய்ப் பார்த்த
கண்ணிலுறை விழிகாக்கும் நல்லிமையாய்க் காத்த
தண்ணிலுறை மலர்ப்பாதம் தொட்டுனைநான் வாழ்த்த
மண்ணிலுறை செய்யாமல் சென்றாய் எவரைப்பார்க்க ?
என்னைக் கருவேற்கத் தன்னைக் கருதாமல்
பின்னை வரும்மெய் வேதனையால் பழுதானாய்
உண்ணும் உணவேற்காவுன் உடம்புபடும் வேதனைமுன்
விண்ணேகும் தருணம்தரும் சோதனையும் பெரிதாமோ..!
கருவான என்னுடம்பு வளருமுன்னே தாரணியில்
பிறவாத அழகுடன்நான் பிறக்கஎண்ணி உறக்கத்திலும்
மறவாத நல்லுணவை என்பொருட்டு துறந்தனையே
நாதிறவா பல்லுணவை என்னைஎண்ணி ஏற்றனையே...!
சுமையாக உனைத்தாக்கி வயிற்றில் நின்றும்
இமையாக எனைக்காக்க எண்ணம் கொண்டு
அமையாமல் ஓர்கணமும் அங்கு மிங்கும்
நிலையாமல் அலைந்தாயே மூச்சு முட்ட..!
உள்ளிருக்கும் என்நினைப்பைக் கருத்திருத்திக் கூட்டின்
தலைபுரண்டு குடல்கிழிந்து உந்தன் கோலம்
உள்ளிருக்கும் என்நினைப்பைக் கருத்திருத்திக் கூட்டின்
உள்ளிருக்கும் ஆசைகளை அழுத்திக்கட்டி காட்டின்
கள்ளிருக்கும் மலர்வண்டின் மனத்தடக்கி வீட்டின்
உள்ளிருந்து நோன்பிருந்த தெய்வத் தாயே..!
தலைபுரண்டு குடல்கிழிந்து உந்தன் கோலம்
நிலைகுலைந்து எழில்அழிந்து நிற்கும் காலம்
வலியில்லை இதுவுமினி கண்ணனின் ஜாலம்
சலிப்பின்றி கண்டிடுவேன் என்றதுன் ஞானம் ..!
கருவின்று வெளிப்பொந்த என்உதிரம் பார்த்து
வெறுப்பின்றி களிப்பெய்தி உன்அதரம் சேர்த்து
உருவன்று கிளிப்பிள்ளை என்னுயிரெனக்கோர்த்து
கற்பகத் தருவென்று சளிப்பிள்ளை என்முகம்சேர்த்தாயே..!
கற்பகத் தருவென்று சளிப்பிள்ளை என்முகம்சேர்த்தாயே..!
கடித்த பல்லால் வலித்த மார்பால்
குடித்த பாலால் வளர்ந்த என்பால்
எழுந்த அன்பால் தளர்ந்த உன் பால்
விழுந்த மாசு விலக்கி உண்டாயே..!
முற்றத்தில் நிலவிருக்கும் நள்ளிரவு வேளையிலே
பற்றியதீ கொண்டதுபோல் நான்எழுந்து அழுகையிலே
மற்றவரின் ஏச்சும்பேச்சும் உன்னைவந்து தைக்கையிலே
பெற்றவள்நான் உள்ளவரை ஏன்அழுகை என்றவளே...!
மலர்மஞ்சம் நாணுறுமுன் மடிசாய்ந்த வேளையிலென்
மலஜலத்தால் மாசுபட்டும் முகம்கோணா நிலமகளே
விலையுனக்கு என்னதர என்றுநிற்கும் வேளையிலே
வலைபிரிந்த பறவைபோல் பறந்தாயே விண்ணின்மேலே ..!
நானுண்ட பாலின்சுவை மாறுமுன்னே உய்யத்
நானுண்ட பாலின்சுவை மாறுமுன்னே உய்யத்
தானுண்ட விடம்கொண்ட நீலகண்டன் தெய்வத்
நான்கொண்ட சினம்தாக்கா எண்ணம்கொண்டுன்
தேனுண்ட விண்ணோருடன் சேர்ந்திருக்க உன்னை
கானுண்ட வண்ணம்கொண்டு அமர்ந்திருக்கும் ஆண்டவனை
நான்கொண்ட சினம்தாக்கா எண்ணம்கொண்டுன்
நற்குணத்தால் நான்வழங்கும் மன்னிப்பீண்டு
பெற்ற தாயில்லாப்பிள்ளையவன் என்றேயன்றி
மற்ற வரமருளும்ஈசனென்ற நினைப்பாலன்று..!
பெற்ற தாயில்லாப்பிள்ளையவன் என்றேயன்றி
மற்ற வரமருளும்ஈசனென்ற நினைப்பாலன்று..!
sridhar,i am little bit emotional after reading the truth in the poem,thanks for sharing,good translation with right words and meaning with ethgai,monai.Now we know the other face that is Kavigar-sridhar.May your mother bless you.I wish for your success.
ReplyDeleteRegards-S.Kannan.
Thanks Kannan.. I am sure, the sentiments will resonate with every son, for the place of mother is irreplaceable in every one's life..!
ReplyDeleteSo Touching....
ReplyDeleteGlad to see you here..! Thanks!
ReplyDeleteThough I could not understand a word here, but i guess the picture just says it all... I am sure whatever it is that you have written must be very soulful and touching... And i could really feel it even without reading.. Thank you for sharing..
ReplyDeleteArti,
DeleteA crude translation of this Tamil version,you will be interested in..
https://thoughts-of-my-heart.blogspot.in/2015/08/oh-mother.html
Sorry, Arti, I am just replying to you.. I thought , I will post the english translation along with the reply and hence I did not respond as soon as I saw your comments.. It looks , I will take a while to write the translation. So, I thought will respond now.
ReplyDeleteIt is a tamil translation of the meaning of the mantra that is used in Matru Tharpan.
I wrote it in my mother tongue for the obvious reason..I love reading it again and again and chant this during the days when I perform the monthly Tarpan for my Moother...!
This comment has been removed by the author.
Delete����loving it
ReplyDeleteThank you..
ReplyDelete