Monday, December 28, 2020

23.கள்ளம் கபடில்லாத (எண்ணிரண்டு பதினாறு வயது) **

கள்ளம் கபடில்லாத மழலை
(Short Music)
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
(2)
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

உன்தமக்கை அழகுநிலா தன்னோடு அன்பாய் 
எப்பொழுதும் நட்புடனே சேர்த்தணைத்து இருப்பாய் 
(2)
எப்பொழுதும் தமக்கையுடன் நட்புடனே இருப்பாய் 

கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

வேதமென தந்தையன்னை சொல்லினையே கேட்பாய்
என்றுமவர் காட்டும்வழி நல்லதென்றே நடப்பாய்
(2)
என்றுமவர் காட்டும்வழி நல்லதென்றே நடப்பாய்
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை  
(MUSIC)

சுற்றம் சூழ இருந்து பலர் நட்பு கொண்டு சிறப்பாய்
சுற்றம் சூழ இருந்து பலர் நட்பு கொண்டு சிறப்பாய் அவர்
துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு-கொண்டே இருப்பாய்
துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு கொண்டே இருப்பாய்
கள்ளம் கபடில்லாத மழலை  
உன் கண்ணிரண்டில் தோன்றுதம்மா இறைவன் கொண்ட கருணை 
கள்ளம் கபடில்லாத மழலை 
 
OTHER SONGS

No comments:

Post a Comment