Thursday, December 31, 2020

13. பாடம் சொன்னதே(பாடும்போது நான் தென்றல் காற்று)


பாடம் சொன்னதே சென்ற ஆண்டு 
மாற்றம் தந்ததே புத்..தாண்டு
(2)
பாரினில்-எங்கும் நாளொரு-துன்பம் என்று-போன ஆண்டு 
அதனை மாற்றும்-புதிய ஆண்டு
பாடம் சொன்னதே சென்ற ஆண்டு 
மாற்றம் தந்ததே புத்..தாண்டு
(MUSIC)

இருபது இருபது இருட்டில்  
எனத் தூற்றிடும்-எண்ணம் அகற்றி
(2)
உலகை நோயால்-படுத்தி ஒரு துன்ப-நாடகம் நடத்தி (2)
நன்றே பாடம் தந்தான் இறைவன் 
என்று கொள்ளுவோமே- பாடம் 
கற்று வெல்லுவோமே
பாடம் சொன்னதே சென்ற ஆண்டு 
மாற்றம் தந்ததே புத்..தாண்டு
(MUSIC)

ஆஹாஹா  ஓஹோஹோ ஆஹாஹா  ஓஹோஹோ
(VSM)
தொல்லைகள்-எல்லாம் விலகும் 
இனி நல்லது-ஒன்றே நடக்கும்
(2)
என்றே உலகம் பகரும் 
வண்ணம் புதிதாய் ஆண்டின்று புலரும்
(2)
இனிமேல் இன்பம் ஒன்றே என்றே மனதில் கொள்ளுவோமே 
புதிய ஆண்டில் செல்லுவோமே
பாடம் சொன்னதே சென்ற ஆண்டு 
மாற்றம் தந்ததே புத்..தாண்டு

ஆ ..  

 


இன்னும் பிற


No comments:

Post a Comment