Friday, January 22, 2021

15. அமுதெனும்(மதுரையில் பறந்த மீன் கொடியை) **

அமுதெனும் சிறந்த தீந்தமிழில்-நீ குறளினைத் தந்தாயே
பாரில் அனைவரும் ஏற்கச் சீராய்ப்-பொதுவாம் தருமத்தைத் தந்தாயே
(MUSIC) 
அமுதெனும்-சிறந்த தீந்தமிழில்-நீ குறளினைத்-தந்தாயே
பாரில் அனைவரும் ஏற்கச் சீராய் பொதுவாம் தருமத்தைத் தந்தாயே
இரண்டுக்கும்-குறைந்த வரிகளில்-வாழ்வின் வழிமுறை தந்தாய ((2)
இவை யாவும்-தந்துமுன் இயற்பெயர்-மறைத்தே அடக்கத்தில் -சிறந்தாயே
ஐயே பாடத்தைத் தந்தாயே
அமுதெனும் சிறந்த தீந்தமிழில் நீ குறளினைத் தந்தாயே
பாரில் அனைவரும் ஏற்கச் சீராய் பொதுவாம் தருமத்தைத் தந்தாயே 
(MUSIC)
போதம்-கொடுத்தாய் வேதம்-எனத்தான் தமிழ்த்-தாய் உன்னுடன்-வசித்தனளோ ஓ…..
போதம்-கொடுத்தாய் வேதம்-எனத்தான் தமிழ்த்-தாய் உன்னுடன்-வசித்தனளோ
குழந்தைக்கும்-புரியும் விதத்தினில்-எளிதாய் உன்னுடனே-தான் தந்திடவோ
பேதைக்கும்-இனிக்கும் மாதிரி என-நீ சொல்லியதே-போல் வேறுளதோ
பாட்டுக்-குறளில் முத்துக்-குவியல் ஒளிந்துளதே-அது-எங்கனமோ
ஒளி-தருதே-அது எங்கனமோ
அமுதெனும் சிறந்த தீந்தமிழில் நீ குறளினைத் தந்தாயே
பாரில் அனைவரும் ஏற்கச் சீராய் பொதுவாம் தருமத்தைத் தந்தாயே
(MUSIC)
குறளில்-இல்லா நீதிகள்-மண்பால் வேறுளதோ-வேறெங்குளதோ 
எளிதின் எளிதாய் வாழ்க்கை முறையை தந்தாயே உன் போலெவரோ
படித்திடும்-மாந்தர் இதயத்தில்-மலரும் பண்புகளே-உன் திருவருளோ 
எதனிலும்-காணேன் குறளினும்-மேன்மை என்பதிலே-ஓர் மிகையுளதோ 
இவை யாவும்-தந்துமுன் இயற்பெயர்-மறைத்தே அடக்கத்தில் -சிறந்தாயே 
அமுதெனும் சிறந்த தீந்தமிழில் நீ குறளினைத் தந்தாயே
பாரில் அனைவரும் ஏற்கச் சீராய் பொதுவாம் தருமத்தைத் தந்தாயே

No comments:

Post a Comment