Showing posts with label அன்றொரு நாள் இதே நிலவில். Show all posts
Showing posts with label அன்றொரு நாள் இதே நிலவில். Show all posts

Friday, January 22, 2021

16 அன்றொரு நாள் (அன்றொரு நாள் இதே நிலவில்) **

 

அன்றொரு நாள் அந்தோ சபையில்
நடந்ததம்மா-ஓர்கோரம்
(HARMONIUM)
அன்றொரு-நாள் அந்தோ-சபையில் நடந்ததம்மா-ஓர் கோரம்
தாய் த்ரௌபதி தவித்தாள் புழு-தணலில் 
விழுந்தது-போலே துடித்தனளே
(HARMONIUM)
அந்தக்-கொடுமை தீயோரின்-மடமை 
இன்று-நினைத்தால் நன்னெஞ்சு பதறும்
ராஜசபையில் பாவிதுரியன் (2)
பாவம்-பார்க்கவில்லை ஓர் பெண்-என்றும் பார்க்கலையே 
அன்றொரு-நாள் அந்தோ-சபையில் நடந்ததம்மா-ஓர் கோரம்
தாய் த்ரௌபதி-தவித்தாள் புழு-தணலில் 
விழுந்தது-போலே துடித்தனளே
(MUSIC)
ராஜன்-தருமன்  பேசாமல் இருந்தான் 
பேதை விழியை  நோக்காமல் தவித்தான் 
வீமன் வெடித்தான் பார்த்தன் துடித்தான் (2)
யார்க்கும் முடியவில்லை நீ கதறினையே-என் தாயே
அன்றொரு-நாள் அந்தோ-சபையில் நடந்ததம்மா-ஓர்கோரம்
தாய் த்ரௌபதி தவித்தாள் புழு-தணலில் 
விழுந்தது-போலே துடித்தனளே 










Sunday, December 27, 2020

21. அன்றொரு நாள் (அன்றொரு நாள் இதே நிலவில்) **

 

அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
(Harmonium)
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து-நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ-அறியாயே கண்மணியே
(Harmonium)

அந்த ஒருநாள் என்வாழ்வில் இருள்-நாள் 
இன்று நினைத்தால் தாங்காது மனமே
நீரில்-விழிகள் ஊறித் தவித்தேன்  (2)
நானும் சோகத்திலே நீ அறியாயே கண்மணியே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே
(Harmonium)

தாயும்-வலியில் தூங்காமல் இருந்தாள் நீயும்-அதனால் நோகாமல் இருந்தாய் 
பேத்தி பிறந்தாய் சாந்தி கொடுத்தாய் (2)
வாடல் போதுமென்றே என் குலவிளக்கே மணி யே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே

OTHER SONGS