Sunday, December 27, 2020

21. அன்றொரு நாள் (அன்றொரு நாள் இதே நிலவில்) **

 

அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
(Harmonium)
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து-நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ-அறியாயே கண்மணியே
(Harmonium)

அந்த ஒருநாள் என்வாழ்வில் இருள்-நாள் 
இன்று நினைத்தால் தாங்காது மனமே
நீரில்-விழிகள் ஊறித் தவித்தேன்  (2)
நானும் சோகத்திலே நீ அறியாயே கண்மணியே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே
(Harmonium)

தாயும்-வலியில் தூங்காமல் இருந்தாள் நீயும்-அதனால் நோகாமல் இருந்தாய் 
பேத்தி பிறந்தாய் சாந்தி கொடுத்தாய் (2)
வாடல் போதுமென்றே என் குலவிளக்கே மணி யே
அன்றொரு-நாள் திடீர்-வலியில்
 துடித்து நின்றாள்-என் மகளே
நீ ஒருக்களித்திருந்தாய் அவள்-வயிற்றில்
நீ அறியாயே கண்மணியே

OTHER SONGS


No comments:

Post a Comment