பாஞ்சாலி சபதம்
மஹா பாரதக் கதைக்குக் கருவாக அமைந்தது பாரதப் போர். அந்த பாரதப் போருக்கு காரணமாக இருந்தது திரௌபதி மான பங்க முயற்சி. அந்த நிகழ்ச்சி மூலமாக பின் வரும் யுகத்திற்கு தர்மோபதேசமாக அமைந்த கீதையை நமக்கு பகவான் அருளினார். திரௌபதி இல்லையேல், போர் இல்லை. போர் இல்லையேல் கீதை இல்லை. கீதை இல்லையேல் கலியில் பாதை இல்லை. பாதையில்லையேல் நாம் இறைவனைப் போய்ச் சேரும் வாய்ப்பும் இல்லை.
இறைவனின் நாடகத்தில் முக்கிய பங்கை ஏற்று நடத்திய திரௌபதி அடைந்த துன்பங்களுக்கு ஒரு அளவே இல்லை.அந்த தாயுள்ளத்தின் வலியில் விளைந்தது நமக்கு தர்மோபதேசம். அவ்வகையில் அன்னை திரௌபதியின் பங்கு நம் வாழ்க்கையில் மிகப் பெரிது.
தெய்வாம்சம் பொருந்திய திரௌபதி அன்னையின் சபத நிகழ்ச்சியை இசை வடிவில் தொகுத்து வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
மொத்தம் 14 பாடல்களால் ஆன இம்முயற்சி பாஞ்சாலி சபதத்தை ஒட்டிய மஹாபாரத நிகழ்வுகளை சித்தரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது .இது ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
இதில் பாடிச் சிறப்பித்துள்ள இசைக் கலைஞர்கள்
திரு. உள்ளகரம் ரவி
திருமதி.நெய்வேலி ராஜலக்ஷ்மி தீபக்
திருமதி. பாரதி கார்த்திக்.
இவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பு இல்லையேல் இந்த இசைத் தொகுப்பு இல்லை. உயிரோட்டத்துடன் விளங்குமாறு ஒவ்வொரு பாடலையும் பாடிச் சிறப்பித்துள்ள இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பகவானின் அருள் அவர்களுக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கை ஏற்படுத்திக் கொடுத்த க்ருஷ்ண பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன். சதா ஸ்மரிக்கிறேன்....
1)
திரௌபதி அடைந்த துன்பம்
திரௌபதி சபைக்கு இழுத்து வரப்படுகிறாள். தன் கணவன்மார்கள் எதிரிலேயே தனக்கு நடக்கும் அநியாயத்தை சிறிதும் நம்ப முடியாமல் திகைத்த திரௌபதி , புலம்பி சபைப் பெரியோர்களிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.
அஸ்வமேத யாகம் புரிந்து சக்ரவர்த்தியான யுதிஷ்டிரர் மனைவிக்கா இந்த கதி.
நெஞ்சு பதைக்கும் இந்த அக்ரமத்தைக் கேட்பாரில்லையா ? பெண்மைக்கு மேன்மை நல்கும் பாரத நாட்டிலா இது நடக்கிறது ? தர்மம் மாய்ந்து விட்டதா ? இறைவன் முடியாமல் ஓய்ந்து விட்டானா?
ஐயகோ ! ஐயகோ ! ஐயகோ !
2)
சபையில் முறையிட்ட பிறகு எதுவும் பயனில்லாமல் போகவே கிருஷ்ண பரமாத்மாவை அபயம் என அழைக்கிறாள் .
3 & 4)
கௌரவர் சபையில் நடந்தஅவலம்
கண்ணன் விரலசைவில் விளைந்தது அற்புதம் , மடிந்தது உற்பாதம். உய்ந்தது பெண் மானம்.
கணப்பொழுதில் மனம் நடுங்கும் நிகழ்வுகள் சபையில் நடந்தேறியது.
5 & 6)
கேட்டவர் நடுங்க சபதம்
க்ருஷ்ண பரமாத்மாவின் அருளால் திரௌபதி மானம் பிழைத்தது.அறம் மறத்தை வென்றது.
துரியனின் முடிவு காலம் நெருங்கியது என்று சபையோர் உணர்ந்து கொண்டனர்.
வெகுண்டெழுந்த வீமன் உரைத்தான் சூள் . அவனிட்ட சபதத்தில் கலக்கம் அடைந்தது துரியன் நெஞ்சு. துச்சாதனன் அன்று முதல் உறக்கம் இழந்தான்.
7)
இறைவன் கருணையால் ஆட்கொள்ளப்பட்ட திரௌபதி , க்ருஷ்ண த்யான நிலையில் , ஒரு வித மயக்க நிலையில் இருந்தாள். மெல்ல மெல்ல உலக நினைவு பெற்று, நடந்த கோரத்தினால் கொதித்த நெஞ்சு ஆறு முன்னே சபதம் செய்தாள்.
பாஞ்சாலி சபதம் கௌரவர்கள் நெஞ்சில் மாபெரும் கலக்கத்தைக் கொடுத்தது , உலக உற்பாத நிவ்ருத்திக்கும் தர்ம சம்விருத்திக்கும் வழி வகுத்தது ..!
இதோ பாஞ்சாலி சபதம்..!
8)
திரௌபதி அடைந்த சஞ்சலம்
அஞ்யாத வாசம் முடிந்தும் தேசத்தைத் திருப்பித் தரும் எண்ணமில்லாதவனானான் துரியன்.சமாதானத் தூதுவனாக க்ருஷ்ண பரமாத்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைக் கேள்வியுற்ற திரௌபதி நெஞ்சம் சஞ்சலமும் கலக்கமும் அடைந்தது.
கண்ணா என் சபதத்தை மறந்தனையோ , சமாதானத் தூது செல்ல ஒப்புக்கொண்டனையோ என இறைஞ்சினாள். அழுதாள்.
9)
லோகபதி கொடுத்த சமாதானம்
அதைக் கண்ணுற்ற க்ருஷ்ண பரமாத்மா , " அடி அசடே , உன் சபதம் ஒன்றுக்காகவே தான் என் எல்லா செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. என்னை நம்பு, நீ நிம்மதியாய்த் தூங்கு. உலகத்தில் எவர் மறந்தாலும், ஏன் நீயே மறந்தாலும், நான் உனக்கு நேர்ந்த அநீதியை மறவேன்,அதற்கு ஒரு பரிகாரத்தை முடிக்காமல் உறங்கேன்....
சமாதானத் தூது உன் சபதம் முடிக்கவே என்பதை நீ விரைவில் உணருவாய் "
என்று கூறி திரௌபதியைச் சமாதானம் செய்கிறார்.
10)
அதற்குப் பிறகு போர் மூண்டது , தர்மம் ஸ்தாபனமானது . நமக்கு கீதை கிடைத்தது. திரௌபதி அன்னையின் நினைவு எல்லோர் நெஞ்சிலும் நீங்காது இடம் பெற்றது.
என்னே பாரதத்தின் பீடு .
11 to 14)
மங்களம்
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment