கேட்பாயடா பாவி கேட்பாயடா
என் சூளைக் கேட்பாயடா
(2)
சபை தன்னில் பெரும்-சபை தன்னில்
நெருப்பான குலமாது இவள்-சூளை
கேட்பாயாடா பாவி கேட்பாயடா
என் சூளைக் கேட்பாயடா
(MUSIC)
பெண்ணிங்குக் கனலாய் நின்றாள்
கற்புப் பெண் கங்குக் கனலாய் நின்றாள்
கூறும் சபதத்தைக் கேட்பாய் நன்றாய் (2)
இளைத்தது பெண்-பால் என்றா
வலு குறைந்தது பெண் பால் என்றா
சபையோரின் கண்முன்னே இழிச்செய்கை செய்தாய்-நீ
அவள் சாபம் கேட்பாயடா
(MUSIC)
பாரின்று பாரென்று நீ-செய்த கேடென்றும்
பின்னால் நில்லாதோ வந்து
(2)
நீ-செய்த பாபங்கள் தீர்க்காமல் உலகினில் நீ-ஓட இடமெங்குண்டு (2)
தாயென்று .. பேர் கொண்டு ..
தாயென்று பேர் கொண்டு வாழ்கின்ற பெண்ணுக்கும் தாளாத கோபம் வந்து

பேய் நர்த்தனம்-இதுவென்று
சொல்லிடும்- விதத்தினில்
அவளாடச் செய்தாய்-இன்று
(MUSIC)
மாதரது சினம் தூண்டியதுன் செயல் அதன்-வேகம் அறிந்திடாய் நீ (2)
சாதுக்களின் சினம் மூள இடுவனம் கொள்ளாது அறிந்திடாய் நீ (2)
கேளு-இதைக் கேளு நீசனே-நீ கேளு (2)
குருதியில் மூழ்குவாய் நீ
வாரிக் கையால் பூசிக் கொண்டே என் குழல் வாருவேனே
முடித்து நெஞ்சாறுவேனே..!

No comments:
Post a Comment