விருத்தம்
உலகினில் சதம்-நின்று வழி-தரும் இதிஹாசம் பாரதம் போற்றி-போற்றி
(Music)
மனதினில் துயர்-தரும் இடர்ப்பாடு வரும்போது இதம்-தரும் காதை-போற்றி
(Music)
மாதரின் குலம்-காக்க மாபெரும் இடர்-கொண்ட த்ரௌபதி அன்னை-போற்றி
(Music)
புவிமிசை மாதரைப் பழித்திடா நிலை-தந்த பாடமே போற்றி-போற்றி
(Music)
துரியனின் தறிகெட்ட மறம்-யாவும் வென்றிட்ட தேவியே போற்றி போற்றி
(Music)
தான் கொண்ட-ஓர் சபதத்தில் அறம்-தன்னை நிலை-நாட்டி நின்ற-பாஞ்சாலி போற்றி
(Music)
சொல்லிட வந்தேனம்மா தாயே
(Music)
சொல்லிட வந்தேனம்மா தாயே
சொல்லிட வந்தேனம்மா தாயே
(Music)
உன்னருங்கதை-கொடுக்கும் அறம்-எடுத்தே
சொல்ல நல்லருகதை கிடைக்க உனைப்-பணிந்தே
(SM)
உன்னருங்கதை-விளக்கும் அறம்-எடுத்தே
சொல்ல என்னருகதை விளங்க உனைப்-பணிந்தே
பாரதத்தின் காதை பாட்டினிலே (2)
என இப்பொழுதே இன்னிசையில் அற்புதமாய் காதினிக்கச்
சொல்லிட வந்தேனம்மா தாயே
ச ரி க ம ப த நி.. சரிகமபதநி
ஸ்வரமொடு ஜதியொடு காதை தன்னை ராக பாவம் தான் எழவே
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
காதை-மனதில் தடமெனப்-பதிந்திட கேட்போர்-மனதில் இசையெனத் தங்கிடவே
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
த்ரௌபதி அன்னையுன் கதையினில் மறைந்துள்ள அற்புத அறம்தனை இசைத்தமிழ் அமுதெனவே
தந்திட வந்தேனம்மா .. (ஜதி..)
தித்தித்தால்-அது உன்-அருள் என்னும் திட்டிட்டால் அது என்-குறை என்னும்
(ஜதி..)
சித்தத்தால் இக்காதையுன் முன்னம் வைத்திட்டால்-அதில் என்-பணி மின்னும் எனும் பக்தியில்
(ஜதி..)
இறைவியே-நீ நீ திருவருள்-தா தா சேயென்-பா பா கேட்டிடம்மா மா எந்தனுக்காய் கா
இறைவியே-நீ திருவருள்-தா சேயென்-பா கேட்டிடம்மா
நீ.. தா.. பா.. மா.. கா..
நீ தா பா மா கா
நிதபமக
ச சதமது தரவா (ஜதி..)
ரி ரிகம பதநிசா (ஜதி..)
க கருணையைத் தரவா (ஜதி..)
ம மனதினில் நிறைவாய் (ஜதி..)
ப பைந்தமிழில் பா தா தந்திடுவேன் பார்
நீ நினதருள் புரிவாய்
நாளும் புவிமீதில் உறைவோரும் இதைக் கேட்கும்படி தேனாய் …தீந்தேனாய் (ஜதி..)
நாளும் புவிமீதில் உறைவோரும் இதைக் கேட்கும்படி
தேனாய் தீந்தேனாய்
அன்னையுன் கதை-கேட்கையில் கேட்பவர் கண்களும் பனித்திட உன் கதையை
சொல்லவே வந்தேனம்மா.. (ஜதி..)
உலகினில் சதம்-நின்று வழி-தரும் இதிஹாசம் பாரதம் போற்றி-போற்றி
(Music)
மனதினில் துயர்-தரும் இடர்ப்பாடு வரும்போது இதம்-தரும் காதை-போற்றி
(Music)
மாதரின் குலம்-காக்க மாபெரும் இடர்-கொண்ட த்ரௌபதி அன்னை-போற்றி
(Music)
புவிமிசை மாதரைப் பழித்திடா நிலை-தந்த பாடமே போற்றி-போற்றி
(Music)
துரியனின் தறிகெட்ட மறம்-யாவும் வென்றிட்ட தேவியே போற்றி போற்றி
(Music)
தான் கொண்ட-ஓர் சபதத்தில் அறம்-தன்னை நிலை-நாட்டி நின்ற-பாஞ்சாலி போற்றி
(Music)
சொல்லிட வந்தேனம்மா தாயே
(Music)
சொல்லிட வந்தேனம்மா தாயே
வஞ்சத்திலே பிறந்து வெஞ்சமரில் முடிந்த
உன் கதை சொல்வேனம்மா தாயே
நெஞ்சத்திலே கனன்று வெஞ்சமரில் அணைந்த
உன் கதை சொல்வேனம்மா தாயே
சாற்றிடுமோர் .. மாலையைப்-போல் ..
கேட்டிடஓர்
பாட்டினிலே
சாற்றிடுமோர் மாலையைப்-போல் கேட்டிடஓர் பாட்டினிலே
(Music)
உன்னருங்கதை-கொடுக்கும் அறம்-எடுத்தே
(SM)
உன்னருங்கதை-விளக்கும் அறம்-எடுத்தே
பாரதத்தின் காதை பாட்டினிலே (2)
என இப்பொழுதே இன்னிசையில் அற்புதமாய் காதினிக்கச்
சொல்லிட வந்தேனம்மா தாயே
வஞ்சத்திலே பிறந்து வெஞ்சமரில் முடிந்த
உன் கதை சொல்வேனம்மா
(Music)பூமியில் மாதரைத் தூற்றிடும் மானிடர்
யாவரும் கற்றிட மாபெரும் பாடமதை
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)ச ரி க ம ப த நி.. சரிகமபதநி
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
காதை-மனதில் தடமெனப்-பதிந்திட கேட்போர்-மனதில் இசையெனத் தங்கிடவே
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
த்ரௌபதி அன்னையுன் கதையினில் மறைந்துள்ள அற்புத அறம்தனை இசைத்தமிழ் அமுதெனவே
தந்திட வந்தேனம்மா .. (ஜதி..)
தித்தித்தால்-அது உன்-அருள் என்னும் திட்டிட்டால் அது என்-குறை என்னும்
(ஜதி..)
சித்தத்தால் இக்காதையுன் முன்னம் வைத்திட்டால்-அதில் என்-பணி மின்னும் எனும் பக்தியில்
(ஜதி..)
இறைவியே-நீ நீ திருவருள்-தா தா சேயென்-பா பா கேட்டிடம்மா மா எந்தனுக்காய் கா
இறைவியே-நீ திருவருள்-தா சேயென்-பா கேட்டிடம்மா
நீ.. தா.. பா.. மா.. கா..
நீ தா பா மா கா
நிதபமக
ச சதமது தரவா (ஜதி..)
ரி ரிகம பதநிசா (ஜதி..)
நாளும் புவிமீதில் உறைவோரும் இதைக் கேட்கும்படி தேனாய் …தீந்தேனாய் (ஜதி..)
அன்னையுன் கதை-கேட்கையில் கேட்பவர் கண்களும் பனித்திட உன் கதையை
No comments:
Post a Comment