Sunday, January 24, 2021

24. புரிந்தும் புரியாமல்(மலர்ந்தும் மலராத) **

புரிந்தும் புரியாமல் இருக்கும் புதிர்-போல உனது செயல்-கண்ணனே
அன்று விரிந்த எழில்-கூந்தல் சீவி-முடியாமல் தூது ஏன்-கண்ணனே
சதியின் விளையாட்டில் பணயம் எனக்கூறி நடந்ததொரு-வஞ்சமே
பலர் பார்க்க-ஒரு-பாவி சிரித்த கொடுங்காட்சி மறக்கவில்லை நெஞ்சமே
(MUSIC)

யானை படை-கொண்டு போரில் பகை-கொல்லும் நாளை நினைத்தே-கண்ணா
எதிர் பார்த்து இருக்கேன் கண்ணா
உன்னை பெரிய துணை-என்று விடிவின் வழி என்று 
எண்ணி இருக்கேன்-கண்ணா மண்ணில் இருக்கேன் கண்ணா
உன்னை பெரிய துணை-என்று விடிவின் வழி என்று
உன்னை பெரிய துணை-என்று
(SM)
விடிவின் வழி என்று
(SM)
எண்ணி இருக்கேன்-கண்ணா
(MUSIC)
அன்று சபையோரும் நின்ற பலபேரும்
என்ன மொழி-பேசுவார் ஒரு கோழை என-ஏசுவார்
மாலன் தங்கை-உறவான மங்கை பிறர்-காண மருகிச் சிதம் நாணுவாள்
விறகின் சிதை ஏகுவாள்
மாலன் தங்கை உறவான மங்கை பிறர்-காண
மாலன் தங்கை உறவான
(Crying sound)
மங்கை பிறர்-காண
(Crying sound)
விறகின் சிதை ஏகுவாள்
(MUSIC)
 உனக்குப் விளையாட்டு சபையில் பிறர்காண நடந்த ஒரு-கோரமே
கணம் மறக்க-முடியாமல் உறக்கம் பிடிக்காமல் மனதில் பெரும்-சோகமே
(MUSIC)
துரியன் சினம்-மூட்டி உறுமிப் புலி-போல சிரித்த கதை-வஞ்சமாய்
மருந்தில் ஆறாத காயம் பெண்-நெஞ்சில் கொடுத்த வலி கொஞ்சமா
 கொடுத்த வலி கொஞ்சமா
முள்ளில் துணி போல தணலில் புழுபோல
நைந்த மனம் பாரய்யா 
அந்தப் புண்ணும் மன-நோவும் மறைந்து-இருந்தாலும் மறக்க-முடியாதய்யா 
வலியில் சிரிக்க முடியாதய்யா
ம் .. ம்
கண்ணா .. கொஞ்சம் பாராயோ...நெஞ்சம் மாறாயோ தஞ்சம் தாராய் ஐயா ...
பெண்ணை எண்ணிப் பாராய் ஐயா கொஞ்சம் எண்ணிப் பாராய் ஐயா
 
DROUPATHI

இன்னும் பிற

No comments:

Post a Comment