Sunday, January 24, 2021

25 எண்ணற்கரிய நிகழ்ச்சி(எண்ணப்பறவை சிறகடித்தே) **

எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா
(1+SM+1)
(MUSIC)
அஞ்சும்-கோரம் கொண்டாட்டம்-போல் அங்கே நிகழ்ந்ததம்மா
(2)
அதனைப் பார்த்திடும்-மனது உருகித்-தன்னாலே நொந்தே-அழுததம்மா
(2)
(SM)
த்ரௌபதி-பெண்மை கண்களின்-முன்னே துடிதுடித்தழுததம்மா
புல்லன்-துரியன் வஞ்சப்பிரியன் செயல்-கரை கடந்ததம்மா
எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா
(Music)
பூந்தளிர்-பெண்மை தன்-கரம் கூப்பி உதவிடத் தொழுததம்மா
(2)
அய்யா சபைப்-பெரியோரே புகல் தருவீரே என்றே அழுததம்மா
பெண்ணைச் சபையின்-முன்னாலே  இழிப்பதைக்-கேளீர் என்றே-அழுததம்மா
(SM)
அன்னையைப் போல்பிற பெண்ணினைப் போற்றும் தருமம் படுத்ததம்மா
பே..ரழிவைத்தரும் செயல் அங்கே உருவம் எடுத்ததம்மா
எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா

DROUPATHI

இன்னும் பிற

No comments:

Post a Comment