Showing posts with label Droupathi. Show all posts
Showing posts with label Droupathi. Show all posts

Sunday, March 14, 2021

31 புன்மையால் துரியன்(பச்சை மா மலை போல்)

 


புன்மையால் துரியன் வாழ்வில் 
மதி-இழிந்..திருந்தான் தாழ்வில்
மாய்த்ததே அவனைக் காணீர் 
மாதர்தம் துயரின் கண்ணீர் 
(2)
அச்சுதன் துணையில் போரில் 
பாண்டவர் வென்றார் பாரீர்
(2)
கெட்டதை நினைந்த கேடே 
விளைத்ததே துரியன் சாவை 
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
பாரில்-நீ வந்து செல்வாய் 
சாவதும் பிறப்பதற்கே
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
உன்-நலம் பார்த்துக் கொள்வேன் 
பற்றிடாய் நீ-என் கீர்த்தி

என்று நல் கீதையை 
கண்ணனே தந்து சென்றான் 
(2)
யாவும்-உன்னால் தான் அம்மா
அன்னை பாஞ்சாலி தாயே   


DROUPATHI

இன்னும் பிற


Tuesday, March 9, 2021

30. பாரதம் பாரில் தாய் நாடு (மலர்களில் பல நிறம் கண்டேன்) ***

 


பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
பாரதம் போலே கதை நூறு தந்து 
வாழ்க்கையில் பாதை தந்ததற்கு
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
(MUSIC)

பாரதம் வெறும்-கதை கிடையாது 
உண்மையும் அதைபோல் வேறேது
(2)
தர்மத்தைக் குலைத்தது ஒரு 
சூது-பின்னர் 
தருமமே தந்தது பெரும் சூடு 
(2)
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
(MUSIC)

த்ரௌபதி அடைந்தது பெரும் சோகம் 
அதனால் பிறந்தது ஒரு வேகம்
(2)
அர்ச்சுனன் மனதினில் உத்வேகம் தந்த 
கீதை பாருக்கு வரமாகும் 
அர்ச்சுனன் மனதினில் உத்வேகம் தந்த 
கீதை வாழ்க்கைக்கு உரமாகும்
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
பாரதம் போலே கதை நூறு தந்து 
வாழ்க்கையில் பாதை தந்ததற்கு
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு

DROUPATHI

இன்னும் பிற


29. பாட்டில் நானே (பாட்டும் நானே) ***


பாட்டில் நானே சொல்லிடுவேனே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
(2)
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
 (MUSIC)

மாதின் சபதம் வீணன் சபையில்
பூர்த்தி ஆன-நல் கதை சொல்ல வந்தேனே 
(2)
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
 (MUSIC)

குருடன் 
(VSM) 
சபைக்கு 
(VSM) 
தூது-சென்றானே
குருடன் சபைக்கு தூது சென்றானே
மாதின் மனதை தேற்றிப் பின்னாலே (2)
குருடன் சபைக்கு தூது சென்றானே
மாதின் மனதை தேற்றிப் பின்னாலே
எதிலும் எதுவும் எதற்கும் நானே (2)
எனும் நிஜம் சொன்னான் மாலன் நமக்கே
(Pause)
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
(SM)
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அடடா
போர் முடித்தான் கண்ணன் சமர் புரியாமே
அறிவால் புரியாத ஆச்சர்யம் அதுதான்
நீசன் துரியனவன் தம்பி துச்சனுடன் மீதி கௌரவரின் ஜோலி முடிந்த கதை
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
போரில் சபதம் முடிந்ததைத்தானே
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே
ஸ்வரம்
பாட்டில் நானே சொல்ல-வந்தேனே


DROUPATHI

இன்னும் பிற


28 அன்று-சபையில் சபதமிட்டாள்(தென்றலோடு உடன் பிறந்தாள்) ***

 


ஆ..
(VSM)
அன்று-சபையில் சபதமிட்டாள் த்ரௌபதி பெண்ணாள் 
(VSM)
கேட்டதிலே கௌரவர்கள் பீதியடைந்தார்
(VSM)
அஞ்சுகமும் புலியெனவே உறுமிடக் கண்டார்
(VSM)
அதன்-ஒலியே அக்ரமத்தின் அழிவெனக் கொண்டார் அழிவாரம்பம் என்றார்

(VSM)
அன்று-சபையில் சபதமிட்டாள் த்ரௌபதி பெண்ணாள்
அதைக் கேட்டதிலே கௌரவர்கள் பீதியடைந்தார் (2)
(SM)
அஞ்சுகமும் புலியெனவே உறுமிடக் கண்டார் (2)
அதன்-ஒலியே அக்ரமத்தின் அழிவெனக் கொண்டார் (2)
அழிவாரம்பம் என்றார்

போர்க்களத்தில் பெரும்படையின் அணிவகுப்பும் 
(VSM)
எதிரணியில் த்ரோணரையும் பாட்டனையும்
(VSM)
பார்த்துவிட்டுப் பார்த்தனவன் மனம் நோகும்
(VSM)
எப்படி நான் கொல்வேனோ என நோகும் 
அவன் மனம் நோகும்

(VSM)
போர்க்களத்தில் பெரும்படையின் அணிவகுப்பும் 
எதிரணியில் த்ரோணரையும் பாட்டனையும்
 (VSM)
பார்த்துவிட்டுப் பார்த்தனவன் மனம் நோகும் (2)
எப்படி-நான் கொல்வேனோ என நோகும்
அட எப்படி-நான் கொல்வேனோ என நோகும்
 அவன் மனம் நோகும் 
(VSM)
உலகமெல்லாம் வியந்திருக்க போர்க்களத்தில் 
(VSM)
பல் வீரர் அணி வகுக்கும் அமர்க்களத்தில்
(VSM)
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே (VSM)
ஒளி பெற்று குந்தி மகன் எழுந்தனனே போர் புரிந்தனனே
(VSM)

உலகமெல்லாம் வியந்திருக்க போர்க்களத்தில் 
பல் வீரர் அணி வகுக்கும் அமர்க்களத்தில்
(VSM)
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே.. ஆ
பரந்தாமன் இதழ் சிந்தும் கீதையிலே
ஒளி-பெற்று குந்தி மகன் எழுந்தனனே
ஒளி-பெற்று குந்தி மகன் எழுந்தனனே போர் முடித்தனனே



DROUPATHI

இன்னும் பிற


27 உன்னையல்லால் யாரும் இல்லை(நீயல்லால் தெய்வம் இல்லை) **

 


உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
கண்ணா .. கண்ணா… கண்ணா..
(MUSIC)
தாயான அண்ணி  சேலை பிடித்தான்
தந்தையார் முன்னே  நிந்தை புரிந்தான்
விலக்கான எனக்கு ஹிம்சையைத் தந்தான் 
மாத விலக்கான எனக்கு ஹிம்சையைத் தந்தான்
அறியேன் என் செய்வேன் நீ எங்கே கோவிந்தா (2)
பேய்போல என்னை நின்றவர் நோக்க (2)
சேய் போல நான் ஓட த்துரத்தி பிடித்தான் (2)
உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை 
(MUSIC)
தாயகப் பிறரின் பெண்மாதை  நினைந்து 
வணங்கிடலே இந்தத் திருநாட்டின் தர்மம்   
(2)
போயே போச்சா அது வாய்ப் பேச்சா (2)
அழுவதற்கே என்றும் பெண் பெற்ற  ஜென்மம்
மண்ணில் அழுவதற்கே என்றும் பெண் பெற்ற  ஜென்மம்
உன்னையல்லால் யாரும் இல்லை 
எனக்கு அய்யே வேறாருமில்லை
கண்ணா உன்னையல்லால் யாரும் இல்லை
கண்ணா .. கண்ணா… கண்ணா..






Sunday, January 24, 2021

26 அடி அசடே கேளம்மா(கண்ணெதிரே தோன்றினாள்) **



அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
(2)
அடி அசடே கேளம்மா
(MUSIC)
உன்னைப் பார்-வாழும் யாவரும் 
உன்னைச் சிறப்புறவே காத்திருக்கும் ஐவரும் 
(2)
பின்னிருக்கும் பெண்குலத்தின் யாவரும் (2)
அதை மறந்திடினும் நான்-மறவேன் உன்-மேல்-ஆணை பெண்ணே
அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
அடி அசடே கேளம்மா
(MUSIC)
என்றும் அமைதி-ஒன்றே விழைகிறேன் 
அதை உன்-மனத்தில் தந்திடவே உழைக்கிறேன்
பெண்ணே அமைதித் தூதன் ஆகிறேன் 
கதை முடித்திடவே போர்நடக்கச் செல்கிறேன்  
உன்-சபதம் முடிக்க-வென்றே தூதுவனானேன்  (2) 
அதை முடித்துன்-கண்ணீர் துடைக்கும்-வரை ஓய்ந்திட-மாட்டேன் பெண்ணே
அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
அடி அசடே கேளம்மா


25 எண்ணற்கரிய நிகழ்ச்சி(எண்ணப்பறவை சிறகடித்தே) **

 


எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா
(1+SM+1)
(MUSIC)
அஞ்சும்-கோரம் கொண்டாட்டம்-போல் அங்கே நிகழ்ந்ததம்மா
(2)
அதனைப் பார்த்திடும்-மனது உருகித்-தன்னாலே நொந்தே-அழுததம்மா
(2)
(SM)
த்ரௌபதி-பெண்மை கண்களின்-முன்னே துடிதுடித்தழுததம்மா
புல்லன்-துரியன் வஞ்சப்பிரியன் செயல்-கரை கடந்ததம்மா
எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா
(Music)
பூந்தளிர்-பெண்மை தன்-கரம் கூப்பி உதவிடத் தொழுததம்மா
(2)
அய்யா சபைப்-பெரியோரே புகல் தருவீரே என்றே அழுததம்மா
பெண்ணைச் சபையின்-முன்னாலே  இழிப்பதைக்-கேளீர் என்றே-அழுததம்மா
(SM)
அன்னையைப் போல்பிற பெண்ணினைப் போற்றும் தருமம் படுத்ததம்மா
பே..ரழிவைத்தரும் செயல் அங்கே உருவம் எடுத்ததம்மா
எண்ணற்கரிய நிகழ்ச்சி-எல்லாம் அங்கே நடந்ததம்மா
கண் இமைக்கும்-கணப் பொழுதில்-சபை நடுவே நடந்ததம்மா

DROUPATHI

இன்னும் பிற


24. புரிந்தும் புரியாமல்(மலர்ந்தும் மலராத) **



புரிந்தும் புரியாமல் இருக்கும் புதிர்-போல உனது செயல்-கண்ணனே
அன்று விரிந்த எழில்-கூந்தல் சீவி-முடியாமல் தூது ஏன்-கண்ணனே
சதியின் விளையாட்டில் பணயம் எனக்கூறி நடந்ததொரு-வஞ்சமே
பலர் பார்க்க-ஒரு-பாவி சிரித்த கொடுங்காட்சி மறக்கவில்லை நெஞ்சமே
(MUSIC)
புரிந்தும் புரியாமல் இருக்கும் புதிர்-போல உனது செயல்-கண்ணனே
அன்று விரிந்த எழில்-கூந்தல் சீவி-முடியாமல் தூது ஏன்-கண்ணனே
சதியின் விளையாட்டில் பணயம் எனக்கூறி நடந்ததொரு-வஞ்சமே
பலர் பார்க்க-ஒரு-பாவி சிரித்த கொடுங்காட்சி மறக்கவில்லை நெஞ்சமே
(MUSIC)
யானை படை-கொண்டு போரில் பகை-கொல்லும் நாளை நினைத்தே-கண்ணா
எதிர் பார்த்து இருக்கேன் கண்ணா
உன்னை பெரிய துணை-என்று விடிவின் வழி என்று 
எண்ணி இருக்கேன்-கண்ணா மண்ணில் இருக்கேன் கண்ணா
உன்னை பெரிய துணை-என்று விடிவின் வழி என்று
உன்னை பெரிய துணை-என்று
(SM)
விடிவின் வழி என்று
(SM)
எண்ணி இருக்கேன்-கண்ணா
(MUSIC)
அன்று சபையோரும் நின்ற பலபேரும்
என்ன மொழி-பேசுவார் ஒரு கோழை என-ஏசுவார்
மாலன் தங்கை-உறவான மங்கை பிறர்-காண மருகிச் சிதம் நாணுவாள்
விறகின் சிதை ஏகுவாள்
மாலன் தங்கை உறவான மங்கை பிறர்-காண
மாலன் தங்கை உறவான
(Crying sound)
மங்கை பிறர்-காண
(Crying sound)
விறகின் சிதை ஏகுவாள்
(MUSIC)
 உனக்குப் விளையாட்டு சபையில் பிறர்காண நடந்த ஒரு-கோரமே
கணம் மறக்க-முடியாமல் உறக்கம் பிடிக்காமல் மனதில் பெரும்-சோகமே
(MUSIC)
துரியன் சினம்-மூட்டி உறுமிப் புலி-போல சிரித்த கதை-வஞ்சமாய்
மருந்தில் ஆறாத காயம் பெண்-நெஞ்சில் கொடுத்த வலி கொஞ்சமா
 கொடுத்த வலி கொஞ்சமா
முள்ளில் துணி போல தணலில் புழுபோல
நைந்த மனம் பாரய்யா 
அந்தப் புண்ணும் மன-நோவும் மறைந்து-இருந்தாலும் மறக்க-முடியாதய்யா 
வலியில் சிரிக்க முடியாதய்யா
ம் .. ம்
கண்ணா .. கொஞ்சம் பாராயோ...நெஞ்சம் மாறாயோ தஞ்சம் தாராய் ஐயா ...
பெண்ணை எண்ணிப் பாராய் ஐயா கொஞ்சம் எண்ணிப் பாராய் ஐயா
 

 

DROUPATHI

இன்னும் பிற


23 சொல்லிட வந்தேனம்மா (மன்னவன் வந்தானடி)



 


விருத்தம்
உலகினில் சதம்-நின்று வழி-தரும் இதிஹாசம் பாரதம் போற்றி-போற்றி
(Music)
மனதினில் துயர்-தரும் இடர்ப்பாடு வரும்போது இதம்-தரும் காதை-போற்றி  
(Music)
மாதரின் குலம்-காக்க மாபெரும் இடர்-கொண்ட த்ரௌபதி அன்னை-போற்றி
(Music)
புவிமிசை மாதரைப் பழித்திடா நிலை-தந்த பாடமே போற்றி-போற்றி
(Music)
துரியனின் தறிகெட்ட மறம்-யாவும் வென்றிட்ட தேவியே போற்றி போற்றி 
(Music)
தான் கொண்ட-ஓர் சபதத்தில் அறம்-தன்னை நிலை-நாட்டி நின்ற-பாஞ்சாலி போற்றி 
(Music)
 
சொல்லிட வந்தேனம்மா தாயே
(Music)
சொல்லிட வந்தேனம்மா தாயே
 
வஞ்சத்திலே பிறந்து வெஞ்சமரில் முடிந்த 
உன் கதை சொல்வேனம்மா தாயே 
நெஞ்சத்திலே கனன்று வெஞ்சமரில் அணைந்த 
உன் கதை சொல்வேனம்மா தாயே
 சாற்றிடுமோர் .. மாலையைப்-போல் .. 
கேட்டிடஓர் பாட்டினிலே 
 சாற்றிடுமோர் மாலையைப்-போல் கேட்டிடஓர் பாட்டினிலே 
சொல்லிட வந்தேனம்மா தாயே
(Music)
உன்னருங்கதை-கொடுக்கும் அறம்-எடுத்தே
சொல்ல நல்லருகதை கிடைக்க உனைப்-பணிந்தே
(SM)
உன்னருங்கதை-விளக்கும் அறம்-எடுத்தே
சொல்ல என்னருகதை விளங்க  உனைப்-பணிந்தே
பாரதத்தின் காதை பாட்டினிலே (2)
என இப்பொழுதே இன்னிசையில் அற்புதமாய் காதினிக்கச்
சொல்லிட வந்தேனம்மா தாயே
வஞ்சத்திலே பிறந்து வெஞ்சமரில் முடிந்த 
உன் கதை சொல்வேனம்மா 
(Music)
பூமியில் மாதரைத் தூற்றிடும் மானிடர்  
யாவரும் கற்றிட மாபெரும் பாடமதை
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
ரி நி.. சரிகமபதநி
ஸ்வரமொடு ஜதியொடு  காதை தன்னை ராக பாவம் தான் எழவே
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
காதை-மனதில் தடமெனப்-பதிந்திட கேட்போர்-மனதில் இசையெனத் தங்கிடவே
சொல்லிட வந்தேனம்மா.. (ஜதி..)
த்ரௌபதி அன்னையுன் கதையினில் மறைந்துள்ள அற்புத அறம்தனை இசைத்தமிழ் அமுதெனவே
தந்திட வந்தேனம்மா .. (ஜதி..)
தித்தித்தால்-அது உன்-அருள் என்னும் திட்டிட்டால் அது என்-குறை என்னும்
(ஜதி..)
சித்தத்தால் இக்காதையுன் முன்னம் வைத்திட்டால்-அதில் என்-பணி மின்னும் எனும் பக்தியில்
(ஜதி..)
இறைவியே-நீ நீ திருவருள்-தா தா சேயென்-பா பா கேட்டிடம்மா மா எந்தனுக்காய் கா 
இறைவியே-நீ   திருவருள்-தா    சேயென்-பா கேட்டிடம்மா   
நீ..  தா.. பா.. மா.. கா..
நீ தா பா மா கா
நிதபமக
சதமது தரவா (ஜதி..)
ரி   ரிகம பதநிசா (ஜதி..)
க கருணையைத் தரவா (ஜதி..)
ம மனதினில் நிறைவாய் (ஜதி..)
ப பைந்தமிழில் பா தா தந்திடுவேன் பார் நீ  நினதருள் புரிவாய்
நாளும் புவிமீதில் உறைவோரும் இதைக் கேட்கும்படி தேனாய் …தீந்தேனாய் (ஜதி..)
நாளும் புவிமீதில் உறைவோரும் இதைக் கேட்கும்படி தேனாய் தீந்தேனாய்
அன்னையுன் கதை-கேட்கையில்  கேட்பவர் கண்களும்  பனித்திட உன் கதையை   
சொல்லவே வந்தேனம்மா.. (ஜதி..)

DROUPATHI

இன்னும் பிற


Saturday, January 23, 2021

22 கேட்பாயடா(பழம் நீயப்பா) **

 

கேட்பாயடா பாவி கேட்பாயடா 
என் சூளைக் கேட்பாயடா
(2)
சபை தன்னில் பெரும்-சபை தன்னில்
நெருப்பான குலமாது இவள்-சூளை
கேட்பாயாடா பாவி கேட்பாயடா 
என் சூளைக் கேட்பாயடா
(MUSIC)
பெண்ணிங்குக் கனலாய் நின்றாள்
கற்புப் பெண் கங்குக் கனலாய் நின்றாள்
கூறும் சபதத்தைக் கேட்பாய் நன்றாய் (2)
இளைத்தது பெண்-பால் என்றா 
வலு குறைந்தது  பெண் பால் என்றா 
சபையோரின் கண்முன்னே இழிச்செய்கை செய்தாய்-நீ 
அவள் சாபம் கேட்பாயடா
(MUSIC)
பாரின்று பாரென்று  நீ-செய்த கேடென்றும் 
பின்னால் நில்லாதோ வந்து 
(2)
நீ-செய்த பாபங்கள் தீர்க்காமல் உலகினில் நீ-ஓட இடமெங்குண்டு (2)
தாயென்று .. பேர் கொண்டு ..
தாயென்று பேர் கொண்டு வாழ்கின்ற பெண்ணுக்கும் தாளாத கோபம் வந்து
பேய் நர்த்தனம்-இதுவென்று சொல்லிடும்- விதத்தினில் 
அவளாடச் செய்தாய்-இன்று
  (MUSIC)
மாதரது சினம் தூண்டியதுன் செயல் அதன்-வேகம் அறிந்திடாய் நீ (2)
சாதுக்களின் சினம் மூள இடுவனம் கொள்ளாது அறிந்திடாய் நீ (2)
கேளு-இதைக் கேளு நீசனே-நீ கேளு (2)
குருதியில் மூழ்குவாய் நீ 
வாரிக் கையால் பூசிக் கொண்டே என் குழல் வாருவேனே
முடித்து நெஞ்சாறுவேனே..!



DROUPATHI

இன்னும் பிற


21 வேண்டி மெய் களைத்துவிட்டேன்(கேட்டதும் கொடுப்பவனே) **


வேண்டி மெய்  களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா
(2)
வேந்தரைக் கேட்டுவிட்டேன் கண்ணா கண்ணா
(SM)
வேந்தரைக் கேட்டுவிட்டேன் கண்ணா கண்ணா
மாந்தரைக் கேட்டு விட்டேன் கண்ணா கண்ணா
ஏறெடுப்பாருமில்லை கண்ணா கண்ணா
கை கொடுப்பாருமில்லை கண்ணா கண்ணா
வேண்டி மெய்  களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் 
(MUSIC)
பாட்டனைக் கேட்டு-விட்டேன் கண்ணா கண்ணா
விதுரரைக் கெஞ்சி நின்றேன் 
கண்ணா கண்ணா ..
பாட்டனைக் கேட்டு விட்டேன் கண்ணா கண்ணா 
விதுரரைக் கெஞ்சி நின்றேன்
(VSM)
யாவரும் கை விரித்தார் கண்ணா கண்ணா
யாவரும் தலை கவிழ்த்தார் கண்ணா சபை
 முழுவதும் கேட்டு விட்டேன்
கண்ணா கண்ணா அழுது நான் ஓய்ந்துநின்றேன்
(SM)
வேண்டி மெய்  களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா 
(MUSIC)

நானுனைச் சரணடைந்தேன் கண்ணா கண்ணா 
வந்து நீ தூக்கி எடு  கண்ணா கண்ணா

பேதையின் குரல் கேட்பாய் கண்ணா கண்ணா 
துணை என வந்தருள்வாய் கண்ணா கண்ணா
(2)
(SM)
கண்ணா ..கண்ணா ...

கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
(SM)
 உன்னையல்லால்-ஒரு காவல் எனக்கெது கண்ணா கண்ணா + (vsm)
கொஞ்சம் எழுந்திரு தஞ்சம் கொடுத்திடு  கண்ணா கண்ணா+ (vsm)
இன்னுயிர்த்  தங்கையின் கேவல் நிறுத்திடு கண்ணா கண்ணா+ (vsm)
உந்தன் பொன்னடி வைத்து விரைந்திடு கண்ணா கண்ணா + (vsm)
 கண்ணா கண்ணா
(SM)
வேண்டி மெய்  களைத்துவிட்டேன் கண்ணா கண்ணா
வேறிடம் நானறியேன் கண்ணா-கண்ணா


DROUPATHI

இன்னும் பிற

 

20 குன்றாய் இருந்திடும் பெரியோரே(ப்ருந்தாவனத்துக்கு வருகின்றேன்) **

 


(MUSIC)
அய்யா .. அய்யா.. அய்யா.. அய்யா

குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன் 
(2)
அய்யா பெண் னம்  ஊமையோ 
ஆண் ஆடிடப் பெண் இனம்  பொம்மையோ
(2)
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

அய்யா .. அய்யா.. அய்யா.. அய்யா

சந்தையின் விலை-பொருள் போல்-இங்கே-பெண் இனத்
தை மதிப்பதைக் காணீரே 
(2)
வேதனைப் படுவது பெண் என்றுமே  
அதனால் ஆண் குரல் எழவில்லையே
குன்றாய் இருந்திடும் பெரியாரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

பெண்-கரம் இழுத்தான் இப்பாவி-
பெண்
கூந்தலை அவிழ்த்தான் தான்-தாவி 
(2)
விதுரரே தருமத்தின் உருவில்லையோ நீர் காண்பதை உம்-மனம் வெறுக்கல்லையோ
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

கங்கையின் மைந்தா கேளீரோ-பெண்ணை இழித்திடும் கீழ்ச்செயல்  காணீரோ
(2)
கங்கையுன் அன்னை பெண்ணிலையோ-இல்லை
 இது-எனக்கேன்-என எண்ணினையோ   
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
அய்யா பெண் னம்  ஊமையோ 
ஆண் ஆடிடப் பெண் இனம்  பொம்மையோ
அய்யா.. 
அய்யா,, 
அய்யா,, 
அய்யா..


DROUPATHI

இன்னும் பிற






19 கண்ணா பணயம் என பெண்ணா(கண்ணா கருமை நிறக் கண்ணா) **


கண்ணா .. 
பணயம்-என பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே
(SM)
கண்ணா பணயம்-எனப் பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே
மண்ணில் எதும்-நேரில்லை நெஞ்சில் தீதே-எல்லை
பெண்ணை மரியாதை செய்வாரில்லை
(2)
கண்ணா பணயம்-எனப் பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே
 (MUSIC)

சுமை தாங்கும் நில-மாது பெண்தான் கண்ணா 
உடல் நோக உயிர்-தோன்றும் பெண்ணால் கண்ணா
(2)
கஷ்டங்கள் என்றும் பெண் சிலர்க்கா கண்ணா 
(SM)
கஷ்டங்கள் என்றும் பெண் சிலர்க்கா கண்ணா 
என்ன-கொடுத்தாலும் பொறுப்பாள்-என்..பதற்கா கண்ணா
(Crying sound)
கண்ணா பணயம்-எனப் பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே
 (MUSIC)

புல்லாகப் பூண்டாக மிதித்தார் கண்ணா 
பெண்ணைத் தணல் வீழ்ந்த புழுபோல வதைத்தார்  கண்ணா
(2)
பொல்லாத கொடுமைகள் இழைத்தார் கண்ணா
(SM)
பெண் தாங்க முடியாமல் வதைத்தார் கண்ணா
பெண்ணை ஒரு-பொம்மை என்றே-தான் நினைத்தார் கண்ணா
(Crying sound)
கண்ணா பணயம்-எனப் பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே
மண்ணில் எதும்-நேரில்லை நெஞ்சில் தீதே-எல்லை
பெண்ணை மரியாதை செய்வாரில்லை
கண்ணா பணயம்-எனப் பெண்ணா
மண்ணில் நோகாத பெண் இல்லையே



DROUPATHI

இன்னும் பிற


 





17 நான் போடும் கூச்சல்(நான் பாடும் பாடல்) **

 


நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
யார் காதில் வீழும்
(MUSIC)
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(SM)
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(MUSIC)
ராஜராஜர் போற்றிடும் வண்ணம்
பாரிலாரும் போரிடாத் திண்ணம்
(2)
கொண்டே வாய்த்திட்டார்  சூராதி சூரர்
என்றே-நல் கண்ணாளர் ஐவர்
கொண்டே வாய்த்திட்டார் சூராதி சூரர்
ஒன்றல்ல கண்ணாளர் ஐவர்
அவர்-இன்று ஒரு ஊமை
உயிர்-கொண்டும் ஜடம் போலே
(2)
பாரே கொண்டாடும் வீரர் இவர்
வீரர் -இவர்
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(MUSIC)
மாடு மேய்க்கும் பையன் என்றாக
நாகம் மீது பாதம் நின்றாட
(SM)
மாடு மேய்க்கும் பையன் என்றாக
நாகம் மீது பாதம் நின்றாட
வந்தாய் பாருக்குத் தருமத்தின் உருவே
லேசா உனக்கும்-என் அழுகை
வந்தாய் பாருக்குத் தருமத்தின் உருவே
பாராய் உன் தங்கை என் நிலையை
உனையன்றி வேறாரு தவிக்கின்றேன் நீ பாரு (2)
உடனே என் கண்ணா அபயம் கொடு
அபயம் கொடு
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்



DROUPATHI

இன்னும் பிற





பாஞ்சாலி சபதம் (Dhroupathi)

 


பாஞ்சாலி சபதம்

மஹா பாரதக் கதைக்குக் கருவாக அமைந்தது பாரதப் போர். அந்த பாரதப் போருக்கு காரணமாக இருந்தது திரௌபதி மான பங்க முயற்சி. அந்த நிகழ்ச்சி மூலமாக பின் வரும் யுகத்திற்கு தர்மோபதேசமாக அமைந்த கீதையை நமக்கு பகவான் அருளினார். திரௌபதி இல்லையேல், போர் இல்லை. போர் இல்லையேல் கீதை இல்லை. கீதை இல்லையேல் கலியில் பாதை இல்லை. பாதையில்லையேல் நாம் இறைவனைப் போய்ச் சேரும் வாய்ப்பும் இல்லை. இறைவனின் நாடகத்தில் முக்கிய பங்கை ஏற்று நடத்திய திரௌபதி அடைந்த துன்பங்களுக்கு ஒரு அளவே இல்லை.அந்த தாயுள்ளத்தின் வலியில் விளைந்தது நமக்கு தர்மோபதேசம். அவ்வகையில் அன்னை திரௌபதியின் பங்கு நம் வாழ்க்கையில் மிகப் பெரிது. தெய்வாம்சம் பொருந்திய திரௌபதி அன்னையின் சபத நிகழ்ச்சியை இசை வடிவில் தொகுத்து வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். மொத்தம் 14 பாடல்களால் ஆன இம்முயற்சி பாஞ்சாலி சபதத்தை ஒட்டிய மஹாபாரத நிகழ்வுகளை சித்தரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது .இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இதில் பாடிச் சிறப்பித்துள்ள இசைக் கலைஞர்கள் திரு. உள்ளகரம் ரவி திருமதி.நெய்வேலி ராஜலக்ஷ்மி தீபக் திருமதி. பாரதி கார்த்திக். இவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பு இல்லையேல் இந்த இசைத் தொகுப்பு இல்லை. உயிரோட்டத்துடன் விளங்குமாறு ஒவ்வொரு பாடலையும் பாடிச் சிறப்பித்துள்ள இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பகவானின் அருள் அவர்களுக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். இந்த முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கை ஏற்படுத்திக் கொடுத்த க்ருஷ்ண பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன். சதா ஸ்மரிக்கிறேன்....

வாருங்கள் தாமதமின்றி நிகழ்ச்சிக்குள் நுழைவோம்.
1)


திரௌபதி அடைந்த துன்பம் 

திரௌபதி சபைக்கு இழுத்து வரப்படுகிறாள்தன் கணவன்மார்கள் எதிரிலேயே தனக்கு நடக்கும் அநியாயத்தை சிறிதும் நம்ப முடியாமல் திகைத்த திரௌபதி , புலம்பி சபைப் பெரியோர்களிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.
அஸ்வமேத யாகம் புரிந்து சக்ரவர்த்தியான யுதிஷ்டிரர் மனைவிக்கா இந்த கதி.
நெஞ்சு பதைக்கும் இந்த அக்ரமத்தைக் கேட்பாரில்லையா ? பெண்மைக்கு மேன்மை நல்கும் பாரத நாட்டிலா இது நடக்கிறது ? தர்மம் மாய்ந்து விட்டதா ? இறைவன் முடியாமல் ஓய்ந்து விட்டானா?
ஐயகோ !  ஐயகோ ! ஐயகோ ! 
2)

சபையில் முறையிட்ட பிறகு  எதுவும் பயனில்லாமல் போகவே கிருஷ்ண பரமாத்மாவை அபயம் என அழைக்கிறாள் .
3 & 4)


கௌரவர் சபையில் நடந்தஅவலம்

கண்ணன் விரலசைவில் விளைந்தது அற்புதம் , மடிந்தது உற்பாதம். உய்ந்தது பெண் மானம்.
கணப்பொழுதில் மனம் நடுங்கும் நிகழ்வுகள் சபையில் நடந்தேறியது.
5 & 6)

கேட்டவர் நடுங்க சபதம்

க்ருஷ்ண பரமாத்மாவின் அருளால் திரௌபதி மானம் பிழைத்தது.அறம் மறத்தை வென்றது.
துரியனின் முடிவு காலம் நெருங்கியது என்று சபையோர் உணர்ந்து கொண்டனர்.
வெகுண்டெழுந்த வீமன் உரைத்தான் சூள் . அவனிட்ட சபதத்தில் கலக்கம் அடைந்தது துரியன் நெஞ்சு. துச்சாதனன் அன்று முதல் உறக்கம் இழந்தான். 
7)

இறைவன் கருணையால் ஆட்கொள்ளப்பட்ட திரௌபதி , க்ருஷ்ண த்யான நிலையில் , ஒரு வித மயக்க நிலையில் இருந்தாள். மெல்ல மெல்ல உலக நினைவு பெற்று, நடந்த கோரத்தினால் கொதித்த நெஞ்சு ஆறு முன்னே சபதம் செய்தாள். 
பாஞ்சாலி சபதம் கௌரவர்கள் நெஞ்சில் மாபெரும் கலக்கத்தைக் கொடுத்தது  , உலக உற்பாத நிவ்ருத்திக்கும் தர்ம சம்விருத்திக்கும் வழி வகுத்தது ..! 
இதோ பாஞ்சாலி சபதம்..!
8)


திரௌபதி அடைந்த சஞ்சலம்

அஞ்யாத வாசம் முடிந்தும் தேசத்தைத் திருப்பித் தரும் எண்ணமில்லாதவனானான் துரியன்.சமாதானத் தூதுவனாக க்ருஷ்ண பரமாத்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைக் கேள்வியுற்ற திரௌபதி நெஞ்சம் சஞ்சலமும் கலக்கமும் அடைந்தது.
கண்ணா என் சபதத்தை மறந்தனையோ , சமாதானத் தூது செல்ல ஒப்புக்கொண்டனையோ என இறைஞ்சினாள். அழுதாள்.
9)


லோகபதி கொடுத்த சமாதானம் 

அதைக் கண்ணுற்ற க்ருஷ்ண பரமாத்மா , " அடி அசடே , உன் சபதம் ஒன்றுக்காகவே தான் என் எல்லா செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. என்னை நம்பு, நீ நிம்மதியாய்த் தூங்கு. உலகத்தில் எவர் மறந்தாலும், ஏன் நீயே மறந்தாலும், நான் உனக்கு நேர்ந்த அநீதியை மறவேன்,அதற்கு ஒரு பரிகாரத்தை முடிக்காமல் உறங்கேன்....
சமாதானத் தூது உன் சபதம் முடிக்கவே என்பதை நீ விரைவில் உணருவாய் "
என்று கூறி திரௌபதியைச் சமாதானம் செய்கிறார்.
10)

அதற்குப் பிறகு போர் மூண்டது , தர்மம் ஸ்தாபனமானது . நமக்கு கீதை கிடைத்தது. திரௌபதி அன்னையின் நினைவு எல்லோர் நெஞ்சிலும் நீங்காது இடம் பெற்றது.
என்னே பாரதத்தின் பீடு .
11 to 14)





மங்களம் 
சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து.