Tuesday, March 9, 2021

30. பாரதம் பாரில் தாய் நாடு (மலர்களில் பல நிறம் கண்டேன்) ***

 


பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
பாரதம் போலே கதை நூறு தந்து 
வாழ்க்கையில் பாதை தந்ததற்கு
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
(MUSIC)

பாரதம் வெறும்-கதை கிடையாது 
உண்மையும் அதைபோல் வேறேது
(2)
தர்மத்தைக் குலைத்தது ஒரு 
சூது-பின்னர் 
தருமமே தந்தது பெரும் சூடு 
(2)
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
(MUSIC)

த்ரௌபதி அடைந்தது பெரும் சோகம் 
அதனால் பிறந்தது ஒரு வேகம்
(2)
அர்ச்சுனன் மனதினில் உத்வேகம் தந்த 
கீதை பாருக்கு வரமாகும் 
அர்ச்சுனன் மனதினில் உத்வேகம் தந்த 
கீதை வாழ்க்கைக்கு உரமாகும்
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு
பாரதம் போலே கதை நூறு தந்து 
வாழ்க்கையில் பாதை தந்ததற்கு
பாரதம் பாரின் தாய் நாடு எனச் 
சொல்லிடப் பீடு அதற்கிருக்கு

DROUPATHI

இன்னும் பிற


No comments:

Post a Comment