Saturday, January 23, 2021

17 நான் போடும் கூச்சல்(நான் பாடும் பாடல்) **

 


நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
யார் காதில் வீழும்
(MUSIC)
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(SM)
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(MUSIC)
ராஜராஜர் போற்றிடும் வண்ணம்
பாரிலாரும் போரிடாத் திண்ணம்
(2)
கொண்டே வாய்த்திட்டார்  சூராதி சூரர்
என்றே-நல் கண்ணாளர் ஐவர்
கொண்டே வாய்த்திட்டார் சூராதி சூரர்
ஒன்றல்ல கண்ணாளர் ஐவர்
அவர்-இன்று ஒரு ஊமை
உயிர்-கொண்டும் ஜடம் போலே
(2)
பாரே கொண்டாடும் வீரர் இவர்
வீரர் -இவர்
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்
(MUSIC)
மாடு மேய்க்கும் பையன் என்றாக
நாகம் மீது பாதம் நின்றாட
(SM)
மாடு மேய்க்கும் பையன் என்றாக
நாகம் மீது பாதம் நின்றாட
வந்தாய் பாருக்குத் தருமத்தின் உருவே
லேசா உனக்கும்-என் அழுகை
வந்தாய் பாருக்குத் தருமத்தின் உருவே
பாராய் உன் தங்கை என் நிலையை
உனையன்றி வேறாரு தவிக்கின்றேன் நீ பாரு (2)
உடனே என் கண்ணா அபயம் கொடு
அபயம் கொடு
நான் போடும் கூச்சல் யார் காதில் வீழும்
என இன்று என்-நெஞ்சம் ஏங்கும்
அது செவிடன் காதில் எங்கு ஏறும்



DROUPATHI

இன்னும் பிற





No comments:

Post a Comment