Saturday, January 23, 2021

20 குன்றாய் இருந்திடும் பெரியோரே(ப்ருந்தாவனத்துக்கு வருகின்றேன்) **

(MUSIC)
அய்யா .. அய்யா.. அய்யா.. அய்யா

குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன் 
(2)
அய்யா பெண் னம்  ஊமையோ 
ஆண் ஆடிடப் பெண் இனம்  பொம்மையோ
(2)
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

அய்யா .. அய்யா.. அய்யா.. அய்யா

சந்தையின் விலை-பொருள் போல்-இங்கே-பெண் இனத்
தை மதிப்பதைக் காணீரே 
(2)
வேதனைப் படுவது பெண் என்றுமே  
அதனால் ஆண் குரல் எழவில்லையே
குன்றாய் இருந்திடும் பெரியாரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

பெண்-கரம் இழுத்தான் இப்பாவி-
பெண்
கூந்தலை அவிழ்த்தான் தான்-தாவி 
(2)
விதுரரே தருமத்தின் உருவில்லையோ நீர் காண்பதை உம்-மனம் வெறுக்கல்லையோ
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
(MUSIC)

கங்கையின் மைந்தா கேளீரோ-பெண்ணை இழித்திடும் கீழ்ச்செயல்  காணீரோ
(2)
கங்கையுன் அன்னை பெண்ணிலையோ-இல்லை
 இது-எனக்கேன்-என எண்ணினையோ   
குன்றாய் இருந்திடும் பெரியோரே-இது நன்றா என-உமைக் கேட்கின்றேன்
அய்யா பெண் னம்  ஊமையோ 
ஆண் ஆடிடப் பெண் இனம்  பொம்மையோ
அய்யா.. 
அய்யா,, 
அய்யா,, 
அய்யா..

DROUPATHI

இன்னும் பிற

No comments:

Post a Comment