Sunday, January 24, 2021

26 அடி அசடே கேளம்மா(கண்ணெதிரே தோன்றினாள்) **



அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
(2)
அடி அசடே கேளம்மா
(MUSIC)
உன்னைப் பார்-வாழும் யாவரும் 
உன்னைச் சிறப்புறவே காத்திருக்கும் ஐவரும் 
(2)
பின்னிருக்கும் பெண்குலத்தின் யாவரும் (2)
அதை மறந்திடினும் நான்-மறவேன் உன்-மேல்-ஆணை பெண்ணே
அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
அடி அசடே கேளம்மா
(MUSIC)
என்றும் அமைதி-ஒன்றே விழைகிறேன் 
அதை உன்-மனத்தில் தந்திடவே உழைக்கிறேன்
பெண்ணே அமைதித் தூதன் ஆகிறேன் 
கதை முடித்திடவே போர்நடக்கச் செல்கிறேன்  
உன்-சபதம் முடிக்க-வென்றே தூதுவனானேன்  (2) 
அதை முடித்துன்-கண்ணீர் துடைக்கும்-வரை ஓய்ந்திட-மாட்டேன் பெண்ணே
அடி அசடே கேளம்மா
என் முகத்தைப் பாரம்மா
துணையிருக்கேன் நானம்மா
உன்னழுகை கூடாதம்மா
(Comforting sound)
அடி அசடே கேளம்மா


No comments:

Post a Comment