Friday, January 22, 2021

18. மாதைப் பழித்தவனே கேளடா(ஆடப்பிறந்தவளே ஆடி வா) **


மாதரைப் இழித்தே யார் பழித்தாலும் சீருடன்  வாழ்வதில்லை
வேதனை பட்டே உன்-தலை சாயும் நாளினி தூரமில்லை
கேளடா கேளடா கேளடா 
கேளடா கேளடா கேளடா 

மாதைப் பழித்தவனே பாரடா நான் சூளிட்டுரைத்த மொழி கேளடா
கேளடா கேளடா கேளடா
(2)
(MUSIC)
துடை-விண்டு இரண்டாகப் பிளப்பேனடா
உடல்  நிலம்தன்னில் புரண்டோட உதைப்பேனடா 
(2)
முடியாது போராட என ஓடடா (2)
யார் தருவார்-அபயம்-என்று நீ ஓடடா…
ஓடடா.. ஓடடா.. ஓடடா
சூதில் ஜெயித்தவனே ஓடடா உந்தன் சூதே துரத்துமினி ஓடடா
ஓடடா  ஓடடா ஓடடா
(MUSIC)
விலக்கான குலமாதைத் தொட்டாயடா
அம் மான்- ஓட புலி-ஏவி விட்டாயாடா 
  (2)
புயல்போல பூங்கொத்தை கலைத்தாயடா (2)
அப் பெரும்பாவம் தரும்கூலி  கொள்வாயடா …
ஆமடா ஆமடா ஆமடா
(MUSIC)
 பதருக்கும் உன்தம்பி கீழ் அல்லவோ 
அவன் உயிருக்கு நேரும்-கதி நான் சொல்லவோ 
(2)
மதிகெட்ட அவன் மார்பைக் கிழிப்பேனடா
உதிரத்தின் ஊற்றாகக் கிழிப்பேனடா   
அந்த உதிரத்தை நான் அள்ளிக் குடிப்பேனடா..
பாரடா பாரடா பாரடா
மாதைப் பழித்தவனே பாரடா நான் சூளிட்டுரைத்த மொழி கேளடா
கேளடா கேளடா கேளடா (2)
மாதைப் பழித்தவனே பாரடா வெறும் சூதில் ஜெயித்தவனே கேளடா
கேளடா கேளடா கேளடா (2)


DROUPATHI

இன்னும் பிற




No comments:

Post a Comment