Sunday, December 27, 2020

19. நீயும் நானும் தான் (பாடும்போது நான்) **

 

நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(2)
நாளொரு பாடல் என்றிட நாமும் பாடவேண்டும் கண்ணே 
என்றே ஆசை உண்டு கண்ணே 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(MUSIC)

என்னிடம் பாட்டுக்கள் இருக்கு 
அதை உன்னுட..னே-நான் இணைந்து 
(2)
ரிதுவே பாடணும்-என்று 
எனக்காசை ஆசையாய் இருக்கு
(2)
என்றே ஏங்கும் உந்தன் பாட்டன் ஆசை ந்யாயம்  தானே 
கண்ணே பாட கொஞ்சம் வாயேன் 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
 (MUSIC)

ஆ ..ஆ  
என்றைக்கும் இனிதாய்ச் சிரிக்கும் 
உன் குரலினில் இசையே ஒலிக்கும் 
(2)
எதுகை மோனை நிலவும் 
எந்தன் கவியும் பாட்டாய் மலரும் 
(2)
நானும் நீயும் பாடும்போது நாளும் இன்பம் தானே 
எந்த நாளும் இன்பம்தானே
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 




No comments:

Post a Comment