Showing posts with label பாடும்போது நான். Show all posts
Showing posts with label பாடும்போது நான். Show all posts

Tuesday, March 9, 2021

33 நாற்று மண்ணினால் (பாடும்போது நான்) **


நாற்று மண்ணினால் பயிராச்சு 
வீட்டில் பெண்கள்-தான் உயிர் மூச்சு
(2)
நானொரு-பாடல் என்றிடப்-பண்கள் நூறு-வந்ததென்ன பெண்கள் பெருமை சொல்வதென்ன 
நாற்று மண்ணினால் பயிராச்சு 
வீட்டில் பெண்கள் தான் உயிர் மூச்சு
(MUSIC)
நித்தியம் வீட்டில்-உழைத்து 
தன் மேனி ஓடென இளைத்து 
(2)
செய்வார் வேலை தொடர்ந்து 
என் பாடல் அர்ப்பணம் அவர்க்கு
(2)  
என்றும் த்யாகம் என்றே வாழும் 
வீட்டின் பெண்கள் தானே-இந்த நாட்டின் கண்கள்-தானே
 நாற்று மண்ணினால் பயிராச்சு 
வீட்டில் பெண்கள்-தான் உயிர் மூச்சு
(MUSIC)
ஆஹாஹா 
(SM)
 பிள்ளைகள் அதன்முன் கணவன் 
என இருப்பது தான்-பெண் உலகம்
(2)
முதுமை எனும்-நாள் பிறகும் 
ஒரு மெழுகாய் பெண்-இனம் கரையும்
(2)
என்றும் த்யாகம் என்றே வாழும் 
வீட்டின் பெண்கள்-தாளே 
பணிவேன் போற்றிப் பண்களாலே 
நாற்று மண்ணினால் பயிராச்சு 
வீட்டில் பெண்கள்-தான் உயிர் மூச்சு
நானொரு-பாடல் என்றிடப்-பண்கள் நூறு-வந்ததென்ன பெண்கள் பெருமை சொல்வதென்ன 
 நாற்று மண்ணினால் பயிராச்சு 
வீட்டில் பெண்கள்-தான் உயிர் மூச்சு


இன்னும் பிற 



Sunday, December 27, 2020

19. நீயும் நானும் தான் (பாடும்போது நான்) **

 

நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(2)
நாளொரு பாடல் என்றிட நாமும் பாடவேண்டும் கண்ணே 
என்றே ஆசை உண்டு கண்ணே 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
(MUSIC)

என்னிடம் பாட்டுக்கள் இருக்கு 
அதை உன்னுட..னே-நான் இணைந்து 
(2)
ரிதுவே பாடணும்-என்று 
எனக்காசை ஆசையாய் இருக்கு
(2)
என்றே ஏங்கும் உந்தன் பாட்டன் ஆசை ந்யாயம்  தானே 
கண்ணே பாட கொஞ்சம் வாயேன் 
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி 
 (MUSIC)

ஆ ..ஆ  
என்றைக்கும் இனிதாய்ச் சிரிக்கும் 
உன் குரலினில் இசையே ஒலிக்கும் 
(2)
எதுகை மோனை நிலவும் 
எந்தன் கவியும் பாட்டாய் மலரும் 
(2)
நானும் நீயும் பாடும்போது நாளும் இன்பம் தானே 
எந்த நாளும் இன்பம்தானே
நீயும் நானும்-தான் நல்ல ஜோடி 
பாடியாடுவோம் கண்ணு வாடி