Tuesday, December 20, 2022

28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)

எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் விழி கொண்டு ஜாலம் காட்டி  
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
உனதன்புக் கண்களிரண்டில் .... விழி கொண்டு ஜாடை பேசி 
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அது போல இன்பம் எதுவோ (2)
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் .. அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-அதில் இன்று எந்தன் உலகு அதில் என்றும் வந்து உலவு
எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 

OTHER SONGS

No comments:

Post a Comment