Showing posts with label Rithu. Show all posts
Showing posts with label Rithu. Show all posts

Friday, October 11, 2024

33.உலவுகிற விண் மீனோ(நிலவு ஒரு பெண்ணாகி) **

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோடஇறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உருவம் தனில் சேயாக பாசம் தனில்தாயாக 
உருவம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக
முதிருகிற தாத்தாவின் மனம் நிறைய வந்தவளோ 
பொன் நகைகள் எதற்கோ சொல் செயற்கை எழில் எதற்கோ சொல் (2)
ரிது உனது அன்பு மனம் கொண்ட எழில் போதாதோ!
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ
(MUSIC)

கவருகிற குரல் குழலோ உன் மழலை மது தருமோ 
பாங்கினில் நீ பெரியவர் போல் பேசு திறன் இறை வரமோ
வாழ்க்கையினில் பேறாக நீ எனக்கு அமைந்தவளோ (2)
யாக்கையினில் சேயாக தாய் மனமாய்க் கொண்டவளோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க பாட்டன் உனை வாழ்த்துகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
என்பதை நீ எடுத்துக்கொண்டால் மேன்மை சேரும் வாழ்க்கையிலே 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

OTHER SONGS

Wednesday, August 28, 2024

31.எந்தன் மனம் ரிது உன் வசம்(பச்சைக் கிளி முத்துச்சரம்) **

எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
(vsm)
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(vsm)
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்  .. ஆ..
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

வித்தை-போல வார்த்தை-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
இன்பம்-கோடி  தந்தே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் நன்று
வெள்ளம்-போல விழியில்-ப்ரேமை ஓடச் செய்தாய் அன்பை 
அது-நின்றாட அழகாய்-நெஞ்சில் அணையும்-செய்தாய் அன்பே  
கண்ணில்-ஆடும் அன்பிலே உணவும் வேணுமோ (2)
என-நீ-தரும் அன்பின் விசை உலகினை இயக்கிடுமோ 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்
(MUSIC)

உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் அன்புறவோ 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
(MUSIC)

அந்தக்-கால வாழ்க்கை-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே-என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உன்னைக் காண போயே போச்சு சென்றே ஏக்கம்-போச்சு
அன்னை போல உந்தன் பாசம் ஒன்றே வாழ்க்கை ஆச்சு 
எல்லை உந்தன் அன்பிலே உண்டோ என்று தான் (2)
கண்ணே ரிது என் நெஞ்சினில் ஆனந்தம் தோன்றுதம்மா 
மண்ணில் சுகம் என்றே வரும் பல்லாயிரம் தானாய்
எனினும் தாத்தூ என்றே வரும் சொல்லாகுமோ கூறாய் 
எந்தன் மனம் ரிது உன் வசம் சென்றே விடும் தானாய்
கண்ணே உந்தன் தேனாய் வரும் சொல் கேட்டிடப் பாராய்

அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 
லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....

OTHER SONGS

Tuesday, December 20, 2022

28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)

எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் விழி கொண்டு ஜாலம் காட்டி  
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
உனதன்புக் கண்களிரண்டில் .... விழி கொண்டு ஜாடை பேசி 
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அது போல இன்பம் எதுவோ (2)
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் .. அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-அதில் இன்று எந்தன் உலகு அதில் என்றும் வந்து உலவு
எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 

OTHER SONGS

Monday, July 20, 2020

3. கண்ணே ரி..தம்..பரா (வசந்தத்தில் ஓர் நாள்) **

Listen to this song

ALIGNED TO KARAOKE

கண்ணே ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திருப்பேனே  நானே உன்னால்-மறந்திருப்பேனே 
(1+SM+1)
 கண்ணே உன்னால்-மறந்திருப்பேனே 
(MUSIC)
மையிட்டக் கண்-ரெண்டின் மான்விழியாலே (2)
என்-மனம் கொள்ளை கொண்டாயே கண்ணே
தேவர்கள் சாப்பிடும் அமிழ்தினும் மேலே (2)
மழலையில் கொடுத்திடுவாயே கண்ணே 
(SM)
அழகாய்த் தாத்தா என்ற-சொல்லாலே  (2)
சீக்கிரம் அழைத்திடுவாயே 
கண்ணே  ஜென்மத்தின் பயன் கொடுப்பாயே (2) 
கண்ணே ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திடுவேனே நானே உன்னால்-மறந்திருப்பேனே 
  (MUSIC)
பொன்-மூட்டை-போலே நீ-தூளி தன்னில் (2)
தூங்கிடும் அழகு-ஒன்றாலே கண்ணே 
(SM)
உனை-உடன் தூக்கி முத்தங்கள் நூறு  (2)
தந்திடும் ஆசை தந்தாயே கண்ணே
ஈருடல்-கொண்டும் ஓருயிர் என்று  (2)
என்னுயிர் கவர்ந்து கொண்டாயே கண்ணே 
என்னாசைக் கண்மணி நீயே 
கண்ணே  என்னாசைக் கண்மணி நீயே

கண்ணே-ரி..தம்..பரா கவலைகள்-யாவும்
உன்னால்-மறந்திடுவேனே நானே உன்னால்-மறந்திருப்பேனே 
நானே உன்னால்-மறந்திருப்பேனே 

Sunday, July 19, 2020

2. உன் குரலில் நாதமிருக்கு (துளசிக்கதிர் நுள்ளியெடுத்து) **

கண்ணே.. கண்ணே.. கண்ணே.. கண்ணே .. கண்ணே

உன் குரலில்  கீதமிருக்கு  கன்னல்-தேன்  வேறோ-சொல்  
உன் வார்த்தை  போதுமெனக்கு வேறெதுவும் ஏனோ-சொல் 
(3)
உன் குரலில் நாதமிருக்கு .. கண்ணே.. கண்ணே.
கண்ணே.. கண்ணே.
கண்ணே.. கண்ணே. (2)
கண்ணே.. கண்ணே. கண்ணே.. 
(MUSIC)
காதுள்ளே பேரிதம்-சேர்க்கும் தேனாறு போலது-பாயும்
கானம்-போல் உன்-குரல்-சென்றொரு ஆனந்தம்-உருவாக்கும்
(3)
ஆனந்தம்-உருவாக்கும்
கண்ணே உன் இன்னிசை-மழலையைக் கேட்டாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கமும் கண்முன்னே ஆடாதோ
  கண்முன்னே ஆடாதோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா 
கண்ணே.. கண்ணே. கண்ணே.
(Pause)
கண்ணே.. 
கண்ணே. 
கண்ணே.
உன் குரலில்  கீதமிருக்கு  கன்னல்-தேன்  வேறோ-சொல்  
உன் வார்த்தை  போதுமெனக்கு வேறெதுவும் ஏனோ-சொல்  
உன் குரலில் நாதமிருக்கு .. கண்ணே.. கண்ணே.. கண்ணே.. கண்ணே
கண்ணே.. கண்ணே. (2)
கண்ணே.. கண்ணே. 
(MUSIC)
 
பூச்செண்டு கன்னமிரண்டும் கருவண்டு கண்கள் ரெண்டும் 
செய்..திடும் லீலை தன்னை கண்டாலே போதாதோ
(2)
கண்டாலே போதாதோ
கண்ணே-அவை செய்திடும் லீலையைக் கண்டாலே போதாதோ (2)
தன்னாலே ஆயிரம்-சொர்க்கமும் கண்முன்னே ஆடாதோ
  கண்முன்னே ஆடாதோ
ஆஹா.. ஆஹா.. ஆஹா 
கண்ணே.. கண்ணே. கண்ணே.
(Pause)
கண்ணே.. 
கண்ணே. 
கண்ணே.
உன் குரலில்  கீதமிருக்கு  கன்னல்-தேன்  வேறோ-சொல்  
உன் வார்த்தை  போதுமெனக்கு வேறெதுவும் ஏனோ-சொல் 
உன் குரலில் நாதமிருக்கு .. கண்ணே.. கண்ணே.. 
கண்ணே.. கண்ணே
கண்ணே.. கண்ணே. (2)
 (MUSIC)
புல்லாங்குழல் இன்னிசை-ஏனோ கண்ணே கண்ணே  (2)
புல்லாங்குழல் இன்னிசை-ஏனோ யாழின் இசை வேணுமோ (3)
கண்ணே நீ சொல்லிடும்-மழலைச் சொல்லொன்றே போதுமே  
புல்லாங்குழல் இன்னிசை-ஏனோ யாழின் இசை வேணுமோ 
கண்ணே நீ சொல்லிடும்-மழலைச் சொல்லொன்றே போதுமே  
ன்றே-அந்..நாளே-வள்ளுவர்
என்றே அந்நாளே-வள்ளுவர் சொன்னாரே அறியாயோ (3)
சொன்னாரே அறியாயோ
கண்ணே.. கண்ணே.. கண்ணே..
கண்ணே.. கண்ணே.. கண்ணே..
PAUSE
கண்ணே.. கண்ணே.. கண்ணே

உன் குரலில்  கீதமிருக்கு  கன்னல்-தேன்  வேறோ-சொல்  
உன் வார்த்தை  போதுமெனக்கு வேறெதுவும் ஏனோ-சொல் 
(3)
கண்ணே.. கண்ணே.. கண்ணே.

Thursday, June 11, 2020

1. கண்ணே ரிதம்பரா(ஹே ஷ்யாம சுந்தரா)

கண்ணே-ரி..தம்பரா பொன்னே-ரி..தம்பரா (2)

உந்தன்-அக்கா நிலா கைகோர்த்து வா உலா (2)

கண்ணே-ரி..தம்பரா பொன்னே-ரி..தம்பரா

நீ-என்-தோளில் ஆடினால் வைகுண்டம் வேணுமா (2)

சாயீ ப்ரசாதமாய் வந்தாய்-ரி..தம்பரா (3)

கண்ணே-ரி..தம்பரா பொன்னே-ரி..தம்பரா

வேணுகானம் நாணுமாம்   உன்-மழலை முன்னமாய் (2)

என்றால்-பொய்யாகுமா சொல்வாய்-என்-தேன் பலா (3)

கண்ணே-ரி..தம்பரா பொன்னே-ரி..தம்பரா

உந்தன்-அக்கா நிலா கைகோர்த்து வா உலா

கண்ணே-ரி..தம்பரா பொன்னே-ரி..தம்பரா 

பொன்னே-...ரி..தம்பரா 

என்கண்ணே-.
ரி..தம்பரா

ரிதுக் குட்டி ரிதம்பரா - Rithambara

1. கண்ணே ரிதம்பரா(ஹே ஷ்யாம சுந்தரா)

2. உன் குரலில் நாதமிருக்கு (துளசிக்கதிர் நுள்ளியெடுத்து) **

3. கண்ணே ரி..தம்..பரா (வசந்தத்தில் ஓர் நாள்) **

4. என்னென்று சொல்வேன் (பொன்னொன்று கண்டேன்) **

7. இதமாய் மின்னிடும்(நிலவே என்னிடம் நெருங்காதே) **

10.தூங்கு கண்மணி(ஊயலூபரே) **