Sunday, December 13, 2020

17. பொன்னோவியம்(சந்திரோதயம்) **

 

(Aligned to KARAOKE)

பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(2)
நல் காவியம் இன்று ரிதுமேல் இதோ
என் வேலை அதுவாக இனிவேறெதோ
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(MUSIC)

கணம் தோறும் விழிபேசும் மொழி கொஞ்சுமோ
எனக்காணும் மனம்ஏங்கி தினம் கெஞ்சுமோ
(2)
புவிமீது எழில்வேறு எதும் எஞ்சுமோ
என்றாக இவள்-காட்டும் எழில் கொஞ்சமோ
என்பாட்டில் அதைக்கூறச் சொல் பஞ்சமோ
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
கண் வேடிக்கை காட்டி நின்றாள் அது
தன்வாடிக்கை என்று கொண்டாள் ரிது
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
ஆ...
(MUSIC)

தள்ளாடும் நடைகாட்டும் எழில் கொஞ்சுமோ
விழும் வண்ணம் எனக் காணும் மனம் அஞ்சுமோ
(2)
என்வீட்டில் அவள்காட்டும் எழில் கொஞ்சமோ
அதுபோக பிறகாண கணம் எஞ்சுமோ
என்பாட்டில் அதைச் சொல்ல சொல் பஞ்சமோ
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
(MUSIC)

அவளோடு இல்லாத கணம் தொல்லையே
எனப்போன மனம்மீண்டு வரவில்லையே
பிடிச்சோறும் இறங்காது அவள் இல்லையேல்
உயிர்க்காற்று மணம்வீசும்  அவள் முல்லையே
என் காது இனிகேட்கும் அவள் சொல்லையே
பொழிலாகத் தமிழ்ப் பாட்டில் அதைக் கூறவோ
முழுதாக அதைக்கூற கணம்-மீறுமோ
விழும்-காலம் வரைப் பண்ணில் அதைக் கூறவோ
அதன்முன்பு அதைக் கூறச் சொல் தீருமோ
எந்நாவும் அதைச் சொல்ல இசை பாடுமோ
எனக் கூறிடும் வண்ணம் வந்தாள் புது
பண்பாடிடும் வண்ணம் தந்தாள் ரிது
பொன்னோவியம் ரிதுப் பெண்ணாய் இதோ
சொல்லோவியம் புதுப் பண்ணாய் இதோ
ஆஹாஹஹா (2)



OTHER SONGS


No comments:

Post a Comment