Friday, October 11, 2024

33.உலவுகிற விண் மீனோ(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோடஇறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

உருவம் தனில் சேயாக பாசம் தனில்தாயாக 
உருவம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக
முதிருகிற தாத்தாவின் மனம் நிறைய வந்தவளோ 
பொன் நகைகள் எதற்கோ சொல் செயற்கை எழில் எதற்கோ சொல் (2)
ரிது உனது அன்பு மனம் கொண்ட எழில் போதாதோ!
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ
(MUSIC)

கவருகிற குரல் குழலோ உன் மழலை மது தருமோ 
பாங்கினில் நீ பெரியவர் போல் பேசு திறன் இறை வரமோ
வாழ்க்கையினில் பேறாக நீ எனக்கு அமைந்தவளோ (2)
யாக்கையினில் சேயாக தாய் மனமாய்க் கொண்டவளோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)

தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க பாட்டன் உனை வாழ்த்துகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
என்பதை நீ எடுத்துக்கொண்டால் மேன்மை சேரும் வாழ்க்கையிலே 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ

OTHER SONGS


No comments:

Post a Comment