இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும்
(MUSIC)
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(SM)
நாளும் நீ என்னைத்தேடி வருவாயே என் பேரைக் கூறி (2)
அது காதில் எந்நாளும் ஸ்ரீ ஸ்ரீ எனக் கேட்கும் செந்தேனைத் தூறி
என் உள்ளம் அதனோடு செல்லும் பின் என்னில் திரும்பாது என்றும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(MUSIC)
கைகள் தன்னை-நீ அசைத்து தினம் குட்நைட் என்பாயே கனிந்து
அதில் சொர்க்கம் நூறிங்கு படைத்து நீ சிரிப்பாய் இன்பக் கள் கொடுத்து
எனதன்னை வடிவான உறவை இறை தந்தான் உன் பாச உருவில்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
(MUSIC)
பேரில் நீ கொண்ட நாதம் எழில் இசையாய் என் பாட்டில் மாறும்
அது வார்த்தைக்கு எட்டாத ராகம் அந்த இசையே தெய்வீக சாரம்
மறு பிறவி உண்டென்று ஆனால் உன் உறவைப் பெறும் பாக்யம் வேணும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்
அது மாயம் என எண்ணும் வண்ணம் ரிது உந்தன் அன்பாலே நடக்கும்
இனிக்கும் இசைப்பாட எனக்கும் மனம் தன்னில் உத்வேகம் பிறக்கும்(b)
No comments:
Post a Comment