Sunday, January 30, 2022

கண்ணில் கண்ட தெய்வம் (நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே)- Amma

கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
அது நாளும் நம்மைக் காப்பதிலே த்யாகம் செய்யும் தன்னையே
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
அது நாளும் நம்மைக் காப்பதிலே த்யாகம் செய்யும் தன்னையே
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
(MUSIC)

பாலூட்டும் போதும் நம் முகம் பார்த்துப் பொங்கும் 
தாலாட்டும்போதும் அவள் குரல் தேனைச் சிந்தும் 
பாலூட்டும் போதும் நம் முகம் பார்த்துப் பொங்கும் 
தாலாட்டும்போதும் அவள் குரல் தேனைச் சிந்தும் 
இணையாக ஒன்று நீ தேடாதே சென்று 
(SM)
இணையாக ஒன்று நீ தேடாதே சென்று 
கிடைக்காது என்று அறிவாயே நன்று (2)
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
அது நாளும் நம்மைக் காப்பதிலே த்யாகம் செய்யும் தன்னையே
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
(MUSIC)

எழிலாகத் தோன்றும் என் அதி ரூபன் நீயே
உலகாளப் போகும் என் மகராஜன் நீயே
(லாலாலா லாலா )
எனக் கூறும் தாயின் ஓர் திருவாக்கு போதும்
பொய்க்காத அன்பே நம் தாய்மையாகும் (2)
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
(MUSIC)
விழிபோல எண்ணி நம் நலம் பேணும் மென்மை (2)
தவறான சேய்க்கும் தன் அன்பூட்டும்  தூய்மை (2)
தனதான வாழ்வை தான் நினையாத மேன்மை (2)
எல்லாமும் சேர்ந்தால் அதுதானே தாய்மை (2)
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே
அது நாளும் நம்மைக் காப்பதிலே த்யாகம் செய்யும் தன்னையே
கண்ணில் கண்ட அன்பு தெய்வம் அன்னையே

(லாலாலா லாலா )

Some More

No comments:

Post a Comment